Wednesday, May 26, 2010

நினைவுகள்

அது ஒரு
பனிபடர்ந்தத புலர்வேளை
பள்ளிவாசலின் பாங்கு அழைப்பு

கோவிலில் தீப ஆராட்டு
மணி ஓசை

டீக்கடை ரேடியோ சத்தம்
முற்றம் தெளிக்கும் பெண்மணிகள்

அரைத்தூக்கத்தில்
பல்துவக்கும் சிறுவர்கள்

பால்கரனை காத்துநிற்கும்
 கரவை பசுக்கள்

வயக்காட்டுக்கு புறப்படும்
வாத்து கூட்டங்கள்

மந்தைகளாய் ஆடுகளும் மாடுகளும்
மாட்டு வண்டிகள் வயல் பணியாட்கள்
கிளைகளில் கூச்சலிட்டு
பறக்கு பறவைகள்

யாரோ அழைத்ததில்
விருட்டென கலைந்தது
  அந்திநேர தனிமைகளில்
அவ்வப்போது உயிர்த்தெழும்
காலத்தில் துலைந்த்துபோன
அந்நாட்கள்

Thursday, May 20, 2010

வண்ணபெட்டிகள்

இரவுகளில் விழித்திருந்த
கிராமத்து வீதிகள்
அனாதையாய் உறங்குகிறது
வீட்டுக்குள் விழித்திருக்கும்
வண்ணபெட்டிகள்

உழைப்பு


காலைசுற்றும் சிறுவன்
தோளில் உறங்கும்
கை குழந்தை
நிறைமாசம் வயிற்றிலும்
வீதிகளில் கை ஏந்திகிறாள்
வறுமையாம்
உறவுக்கு உழைத்தவள்
உணவுக்கும் உழைதிருக்கலாம்

Sunday, May 16, 2010

ரயில் பயணம்



தூங்கி எழுந்த
ஒரு இரவிற்கு பின்
கண்களில் காட்சிகள்
மாறியிருந்த்தது
சுற்றி பேசுபவர்களின்
பாஷை செவியடைத்தது
மரமும் செடிகளும்
பின்னோக்கி ஓடியது
ஒரு பேரிரைச்சல்
இடவழியிட்டு
பயமுறுத்தியது
சிலர் என்னோக்கி
செய்கையால் அழைத்தார்கள்
விசித்திர முகங்கள்
இருப்பிட அசைவுகள்
அம்மாவின் மடியிலிருந்த்தும்
வெம்பி.. வெம்பி ...
அழுகை வந்தது .




அவர்கள்



அறிமுகமில்லா நகரம்
திசையறியா பாதைகள்
வெற்று கையும்
பசித்த வயிறும்
நடந்து களைத்த
கால்களும்
இரவின் மடியில்
தலைசாயிக்க
இடமற்று
தனிமையாக்கப்பட்ட
ஒவ்வொரு தருணங்களிலும்
உதவிக்கரமுமாய்
வந்தவர்கள் முகங்களில்
தன் இருப்பினை
பதிவு செய்கிறான்
இறைவன் .

இருபதுருபாய் நோட்டு




பிரம்பால் அடித்தபோது
வலிக்கவில்லை
வலித்தது
இரவு வரையிலும்
தேடியும் கிடைக்காத
வீதியில் துலைத்த
அம்மாவின் கூலிப்பணம்
இருபதுருபாய்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...