Wednesday, May 26, 2010

நினைவுகள்

அது ஒரு
பனிபடர்ந்தத புலர்வேளை
பள்ளிவாசலின் பாங்கு அழைப்பு

கோவிலில் தீப ஆராட்டு
மணி ஓசை

டீக்கடை ரேடியோ சத்தம்
முற்றம் தெளிக்கும் பெண்மணிகள்

அரைத்தூக்கத்தில்
பல்துவக்கும் சிறுவர்கள்

பால்கரனை காத்துநிற்கும்
 கரவை பசுக்கள்

வயக்காட்டுக்கு புறப்படும்
வாத்து கூட்டங்கள்

மந்தைகளாய் ஆடுகளும் மாடுகளும்
மாட்டு வண்டிகள் வயல் பணியாட்கள்
கிளைகளில் கூச்சலிட்டு
பறக்கு பறவைகள்

யாரோ அழைத்ததில்
விருட்டென கலைந்தது
  அந்திநேர தனிமைகளில்
அவ்வப்போது உயிர்த்தெழும்
காலத்தில் துலைந்த்துபோன
அந்நாட்கள்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...