Monday, July 12, 2010

அழகிய தருணங்கள்



விடலை
பருவங்களில்அகன்று நின்று
மாலையிட்டமங்கை உருவில்
உயிருக்குள் காதலின் வருகை

உறங்கியிருந்த
பருவம் விழித்துக்கொள்ள
ஒவ்வொரு நாழிகையிலும்
வாழ்க்கை இனித்த தருணங்கள்

கண்ணாடியின்றி
 இருவிழிகளில்முகம் பார்த்ததும்
உணவு வெறுத்து அவளிதழ் உமிழ்நீரில்
பசியாறியதும்

விடியல்வரையிலும்
உறங்காமல் தொடர்ந்த
அமுத இரவுகளும்

பனியில்
நனைந்த மலர் போல்
புன்னகை துளியிட்டு
உறக்கம் கலைத்ததும்
பேச வார்த்தையற்று
நீண்ட மவுனங்களும்

இடம் மறந்து
காட்டிய குறும்புகளில்
வெட்கப்பட்டு சிணுங்கியதும்
வெளியூரு பயணங்களில்
வீதியில் கைகோர்த்து
நடந்ததும்

உறவுகளின்
விருந்தோம்பலில்
உண்ணாமல் நேரம்கழித்ததும்
இடைவெளி தருணங்களில்
கைபேசி அடிக்கடித் துடித்தும்
காற்றுக்கும் இடம்மறுத்த
தனிமைகளும்

விடுப்பின்
இறுதிநாளில்
கண்ணீரில் நனைத்ததும்
விமானதளத்தில்
ஆயிரம் விழிகள்பார்க்க
நெற்றியில் முத்தமிட்டு
திரவியம் தேட
கடல்கடக்கையில்
உயிருள்ள ஜடத்திற்கு
துணையாக உன்னுடனான
அழகிய தருணங்கள் மட்டும்

5 comments:

  1. அழகிய காதல் நினைவுகள்
    அற்புதமான நேரங்கள்
    அருமையான கவிதை நண்பரே

    ReplyDelete
  2. அருமை அருமை.
    தனிமையின் காதல் வருடல்களை வடித்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  3. சந்துருSeptember 21, 2010 at 2:14 PM

    தாம்பத்தியத்தை மிகவும் மென்மையாக சொல்லிருக்கீர்கள். அருமை.

    ReplyDelete
  4. எதை குறிப்பிட்டு சொல்வது..
    மிகவும் நுட்பமான உள்ளுணர்வுகளை அழகாக வார்த்தையால் தொடுகிறீர்கள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...