Wednesday, July 28, 2010

உனது வருகையில்



இதுவரை கடந்துவந்த
பாலைவன நிலத்தில்
ஈன்றவர்கள்
திருமண வேலிட `
அன்பெனும் நீரூற்றி
புன்னகை விதைதூவி
பசுமையாகினாய்
 ஊரைச்சுற்றிய காற்றை
உன் வருடலால்
தேன்றலக்கினாய்
நாத்திகவாதியை
உனது அன்பால்
கடவுள் பக்தனாகினாய்
கடிதம் கூட
எழுதத் தெரியாதவனை
உனது உள்ளழகால்
கவிஞனாக்கினாய்
மூடிய கரங்களை விரித்து
ஈகையினை கற்றுக்கொடுத்தாய்
உன் நகைச்சுவைகளால்
புன்னகைக்க செய்தாய்
உன் காட்சிகளில்
என் விழிகளுக்கு
வண்ணங்கள்காட்டினாய்
எழுகிற ஒலிகளை
மேல்லிசையாக்கினாய்
ஒழுங்கற்ற தினச்செயல்களை
உன் அழகிய குணங்களால்
சீரமைத்தாய்
உன்னுடனான தனிமைகளில்
உன் விரல் ஸ்பரிசத்தால்
உறங்கிக்கொண்டிருந்த
ஆண்மை உணர்வுகளை
உயித்தெழுப்பி அடிமையாகினாய்
உலகில் என்வருகைக்கான
வாழ்வியல் அர்த்தங்களை
மெய்ப்படுத்தினாய்
உனது வருகையில்
உனக்குள் தொலைத்தேன்
என்னை

2 comments:

  1. உங்களவர் குறித்தும் உங்கள் குறித்தும் பொறாமைகள் எனக்கு ...

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே ....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...