Sunday, August 8, 2010

கற்ப்பில் சிறந்தவர்கள்




மலரா மொட்டுக்களை
தன் இச்சைக்காக
பறிப்பவர்களும்
உறவுகள் இருந்தும்
உடல் பசிக்காக
மாற்றான் உறவுகளை
களவு செய்வோரும்
காம லீலைகளுக்காக
காதலின் பெயரால்
காதலை சிதைப்பவர்களும்
நீதி மன்றங்கள் தேடி
உறவுகளை முறித்துக்கொண்டு
மாலைகள் பல மாற்றி
புது உறவுக்குள் நுளைவோரும்
சமுதாயத்தின் மான்ய முகமூடிக்குள்
தங்களை ஒளித்துக்கொண்டு
உறவுலளாலும் சமுதாயத்தாலும்
உறவுகளற்று ஒதுக்கப்பட்டு
பிழைக்க வழியின்றி
சிவப்பு வீதிகளில்
சுகம் நாடிவருவோர்க்கு
நான்கு சுவருக்குள்
உடலை இரவல்கொடுக்கும்
தாசிப் பெண்மைகளை நோக்கி
மேடைகள் ஏறி
இவர்கள் தான் தேசத்தின்
கலாச்சாரத்தை சீர்குலைப்பவர்கள்
என்று கற்பின் மகத்துவம்
பேசும் மானியர்களே
கற்ப்பில் சிறந்தவர்கள்
யாரென்று சிறிது
சிந்தித்துப்பாருங்கள்

3 comments:

  1. ரைட்டு .
    நீங்க சொல்றது எல்லாம் சரிதான் அதுக்காக விபச்சாரம் சரியென்ற கண்னோடத்தில் சரியல்ல.

    ReplyDelete
  2. தோழரே தாசித்தொழில் சரியென்று நான் சொல்லவில்லை மேலே சொல்லப்பட்டவர்கள்
    தேசத்தின் கலாச்சாரத்தை சிதைத்துவிட்டு தாசிகள் மேல் குற்றம் சாட்டி தங்களை மான்ய முகமூடிக்குள் ஒளித்துக்கொண்டு சமூதாயத்தில் வாழ்கிறார்கள்
    உங்கள் வெளிப்படையான ஆரோக்கியமான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி ...


    என்று கவியுடன்
    அ.செய்யது அலி

    ReplyDelete
  3. அருமையான பதிவு சாட்டையால் அடிக்கப்பட்டு இருக்கிறது ........முதன் முறையாக .........

    என் சிந்தனைகளை தூசு தட்டி செல்கிறது நன்றி நண்பா

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...