Sunday, September 12, 2010

சுயம் மறந்தவள்





பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துபோகும்
பேரூந்து நிலையத்தில்
அழுக்கு படிந்த
கிழிந்த சட்டைபாவாடையுடன்
வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சுயம்மறந்து சுற்றிவருவாள்
கிழிந்த உடமைகள்வழியே
உடலைப்பார்த்தும் கேலிசெய்தும்
அவளைத் தாண்டிச் செல்பவார்கள்
கையேந்தி நடக்கையில்
அவள் மனிதப் பெண்
என்பதை மறந்து
விலகி ஓடுவார்கள்
ஆண்களும் பெண்களும்
பிரிதொரு நாள்
வீங்கிய வயருமாய்
சினிமா விளம்பரத்தாளில்
தலைசாய்த்து படுத்திருந்தாள்
இந்த பைத்தியத்தியும்
உடல் பசியெடுத்த
காம மிருகங்கள்
இரையாகிட்டாங்களே
கூடி நின்றவர்களில்
யாரோ பேசிக்கொண்டார்கள்
வாழ உதவாதவர்கள்
உபத்திரம் செய்வதாலோ
இன்னும் இறைவன்
மறைந்தே இருக்கிறான்

1 comment:

  1. இறைவன் இருந்தால் அந்தப் பெண்ணுக்கு வந்து உதவ வேண்டியதுதானே....
    பணக்காரர்களுக்கு மட்டும் தான் உதவுவாரோ...
    Rich getting Richer,
    Poor getting More Poor.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...