Wednesday, September 15, 2010

அக்கரை இக்கரை வாழ்க்கை

ஊர்முழுக்க நடந்து
உறவுக்கார வாசல்தட்டி
இரவல் பணம்வாங்கி
கண்ணீர்த் துளிகளில்
உறவுகள் அவழியனுப்ப
திரவியம் தேடி
கடல்கடந்த பயணம்
சுட்டெரிக்கும் கதிரவன்
சுற்றிவரும் அனல்காத்து
வீதியெல்லாம் வெந்தமணல்
புலரியில் புறப்பட்டு
சாயங்காலம் கூடுதிருப்ப்ம்
இரைதேடிப் பறவைகள்போல்
மரமில்லா காட்டுல
ஒட்டகம் மேசச்சும்
ஆள்தெரியா உயரத்தில
கட்டிடம் கட்டியும்
ரோட்டோர குப்பைகளை
பொருக்கி சுத்தம்செய்தும்
குளிர்பெட்டி அறைக்குள்ள
அசையாம குத்தவசும்
ராத்திரி பகல்
ஓடுறது தெரியாம
தாய்தந்த உசிரைசும்
நாடுதந்த அறிவையும்
அடுத்தவனுக்கு அடியரவச்சு
மாசப்பொரப்பில வாங்கிற
சம்பள பணத்தை
இரவலுக்கு தவணையும்
வீட்டுச் செலவுக்கும்
பிரித்து அனுப்பி மீதத்த
மாச சாப்பாட்டிற்கெடுத்து
வருஷங்கள் கடத்தி
கிடைக்கிற விடுப்பில
சிறைகளை உடைத்து
தாய்நாட்டுப் பயணம்
யார் இந்த மாமான்னு
பெத்தபுள்ள கேட்கையில
நெஞ்சுகொதிக்க வாரியணைத்து
இறந்தவங்க பொறந்தவங்க
விசேஷங்கள் கேட்டும்
சொந்த மண்ணில
ஊரோடும் உறவோடும்
நாட்களை எண்ணி
உறவாடிக் கொண்டு
மீண்டும் சிறைதேடி
தொடரும் பயணமுடிவில்
தேடியதையும் துலைத்ததையும்
கூட்டிப் பார்கையில்
பருவங்கள் உதிர்ந்தும்
குருதிநாளங்கள் சுண்டியும்
நோய்கள் சிறைபிடித்தும்
சேர்த்த பேங்க் பணத்தில
உணவாக மருந்துண்டு
மாளிகை வீட்டில்
மரணம் வரும்வரை
மீத வாழ்க்கை

3 comments:

 1. பலரது வாழ்க்கையே இப்படித்தான் கழியுது..

  பணம் இல்லேன்னா சொந்தம் கூட மதிக்க மாட்டாங்க, அதனால் சுகம், சொந்தம் இளமை எல்லாம் தொலைத்து பணத்துக்காக ஒரு வாழ்க்கை

  ReplyDelete
 2. அன்று: வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததென்னவோ உண்மைதான்.

  இன்று: நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. 300 ரூபாய் வேலைக்கு தினக்கூலியாக வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில் ஆள் பற்றாக்குறை. படித்த திறமைசாலிகளுக்கு சராசரியாக ரூ.20000 மாதச் சம்பளம் கிடைக்கிறது. மதுரை, தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் சென்ற ஆண்டு பட்டப் படிப்பு முடித்த 650 பொறியாளர்களுக்கு நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது. சராசரி மாதச் சம்பளம் ரூ.35000. அவர்களில் 70 பேருக்கு மாதச் சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகம். 12ம் வகுப்புவரை படித்துவிட்டு, சொந்தமாக வியாபாரம் அல்லது தொழில் செய்யும், திறமையும் அக்கறையும் உள்ள இளைஞர்கள் சொந்த ஊரிலேயே ரூ.15000 முதல் ரூ.50000 வரை சம்பாதிக்கின்றனர்.

  யாரையும் குறை கூறுவதற்காக இதனைக் கூறவில்லை. காலம் மாறி விட்டது. இன்று பயிற்சி பெற்ற விமானிகள் பற்றாக்குறையால் அயல்நாட்டினர் நமது நாடிற்கு வேலை தேடி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 8000கும் அதிகமான அயல்நாட்டு மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் தங்கிப் படித்து வருகின்றனர்.

  ReplyDelete
 3. VELI NAATTU MOHAM IPPOTHU KURAINTHU VARUKIRATHU!!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...