Tuesday, September 28, 2010

ஆண்மையே




மாலையிட்ட மறுகணமே
உன் விரல் பிடித்தேன்
தந்தை  தந்த பொருளும்
தாய் கொடுத்த உடலையும்
காலம் சமைத்த
என் பருவத்தையும்
மணச் சீதனமாய்
இல்லம் புகுந்தேன்
இரவுகளில் நீ இன்புற
என்னை உணவாகினாய்
உன் ஆண்மை தந்து
தாய்மை பெயர்கொடுத்தாய்
உனக்கும் உன் உறவுக்கும்
கட்டளைக்கு இணங்கி
அயராத பணிவிடைகள்
சில வேலிகள் இட்டு
சட்டங்கள் இயற்றினாய்
கடுத்த கோபங்களையும்
சிறிய புன்னகைகளையும்
அவ்வப்போதுஎனக்குள் விதைத்தாய்
பண்டிகைகளில் புதுத்துணி
சுப நிகழ்ச்சிகளில்
வெளிப் பயணம்
ஈன்ற பிள்ளைகளின்
கடமைப் பேணுதல்
பொழுதுகள் விடிந்தும் அடைந்தும்
காலங்கள் நகர்ந்தன
இன்று நாளை என்று
என்றாவது ஒருநாள்
என்னிடத்தில் என்
உணர்வுகளையும் உரிமைகளையும்
கேட்டறிவாய் என்று
எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
உடல்சுருங்கியும் முடிநரைத்தும்
என் காத்திருப்பு தொடர்கிறது
சபைகளிலும் மேடைகளிலும்
பெண்ணியம் பேசுகிறாய்
துணையிடம் அதை மறுக்கிறாய்
பொறுமை இழந்த பெண்மைகள்
உரிமைக்கொடி உயர்த்தினால்
எம் இனத்தை இழிவுபடுத்துகிறாய்
சிந்திக்கும் ஆண்மையே
பெண்மையும் உன் இனம்என்பதை
ஏன் மறந்துபோகிறாய்

6 comments:

  1. //இன்று நாளை என்று
    என்றாவது ஒருநாள்
    என்னிடத்தில் என்
    உணர்வுகளையும் உரிமைகளையும்
    கேட்டறிவாய் என்று
    எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
    உடல்சுருங்கியும் முடிநரைத்தும்
    என் காத்திருப்பு தொடர்கிறது //

    its true. super.

    ReplyDelete
  2. அருமையான வரிகள், உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுகள் தோழரே

    ReplyDelete
  3. தமிழ்த்தோட்டம்September 29, 2010 at 8:19 AM

    ரொம்ப அருமையான வரிகள், உணர்வு பூர்வமாக எழுதுயுள்ளீர்கள் செய்யது அலி அவர்களே, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சபைகளிலும் மேடைகளிலும்
    பெண்ணியம் பேசுகிறாய்
    துணையிடம் அதை மறுக்கிறாய்
    பொறுமை இழந்த பெண்மைகள்
    உரிமைக்கொடி உயர்த்தினால்
    எம் இனத்தை இழிவுபடுத்துகிறாய்
    சிந்திக்கும் ஆண்மையே
    பெண்மையும் உன் இனம்என்பதை
    ஏன் மறந்துபோகிறாய்

    கலக்கல் பாஸ்.

    ReplyDelete
  5. உதயநிலாSeptember 29, 2010 at 3:26 PM

    பெண்மையும் உன் இனமே.

    அருமை பாராட்டுகள்

    ReplyDelete
  6. பெண்மையும் உன் இனமே . பெண்மைகாக் கவி படைக்கும் உங்களுக்குபாராட்டுக்ள.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...