Monday, September 20, 2010

பெண்ணியம்




ஈன்றெடுக்கும் தாயாக
அன்பைகாட்டும் சகோதரியாக
தோள்கொடுக்கும் தோழியாக
உறவைப்பங்கிடும் மனைவியாக
வம்சம் தளிரிடும் மகளாக
எத்தனை பெண்அவதாரங்கள்
சில கரும்புள்ளி பெண்களால்
சமூகம் தூற்றப்படுகையில்
உள்மனம் காயப்பட்டு
மௌனமாக அழுகிறது
மேண்மை பெண்ணினம்
பயிர்களுக்கு இடையே
களைச் செடிகள்
இயற்க்கையடி பெண்ணே
பெண்மை வெண்ணிறத்தில்
கரும்புள்ளிக் கறைகளா
துயர் கொள்ளாதே
முடங்கி கிடப்பதாலே
அடக்கி ஆளுகிறார்கள்
விழித்தெழுந்து புறப்படு
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணாய்
விலங்குகளை உடைத்தெறி
உரிமைகளை பெற்றிடு
உறவுகளை மதித்திடி
நல்வேலிக்குள் உலவிடு
சாதனைகள் படைத்திடு
சரித்திர ஏட்டில்
உன்பெயர் பதித்திடு
உடையின் நாகரீகத்தை
உன் உயர்வில் காட்டு
வீட்டை கடந்து
நாட்டையே ஆண்டாலும்
பெண்மையை மறந்திடாதே
உனைத்தூற்றுவூர் சிலர்தான்
போற்றுவூர் தரணியெங்கும்

2 comments:

  1. பெண்ணியக்கவிதை சிறப்பாக உள்ளது. அறிவுரையும் சிறப்பு. ஆனா இந்தகாலத்து பெண்கள் அறிவுரை சொல்றவங்கள கொலைகாரனா பார்ப்பாங்க..

    ReplyDelete
  2. இது அறிவுரை அல்ல தோழரே ...
    தரணிபோற்றும் மேண்மை பெண்கள் தலை சிறந்து இருக்கவேண்டும் என்பது
    பெண்மையை மதிக்கும் ஆண்மைகளின் ஆசை ,கனவு ,விருப்பமும் கூட
    சொல்ல்வது நம்கடமை ஏற்றுகொள்வது அவரவர் விருப்பம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...