Thursday, September 9, 2010

அன்பின் பெண்உருவம் (சகோதரி)
பிறந்த மறுகணமே
தம்பி என்றுதுடங்கி
அன்பு முத்தம்பதிப்பாள்
யாரைப்போல் என்று
தர்க்கித்துக் கொள்வாள்
அப்பாவிடமும் அம்மாவிடமும்
எங்கவீட்டில குட்டிப்பாப்பா
இருக்கென்று பக்கத்துவீடுகளில்
ஓடி ஓடிச் சொல்வாள்
என் அழுகையை கேட்டவுடன்
அம்மாவை கூப்பிடுவாள்
படுத்திருக்கும் தொட்டிலை
மெதுவாக ஆட்டுவாள்
நோய்ப்பட்டு கிடைக்கையில்
சாமியிடம் கெஞ்சுவாள்
எனக்கு மருந்து ஊட்டுகையில்
அவள் கொமட்டுவாள்
அக்கா சொல்லு அக்கா சொல்லு
என வாய்மொழியச் சொல்வாள்
இரு கையசைத்து
தவழ்ந்துவரச் சொல்வாள்
சுவர்பிடித்து நடக்கையில்
விரல்பிடித்துச் செல்வாள்
சிறுநீர் மலம் கழித்தாலும்
சுளீரென்று அறைந்தாலும்
சிறுதாய் புன்னகைப்பாள்
தரையில் விளையாடுகையில்
மண்ணைத் தின்னால்
விருடென்று தட்டிவிடுவாள்
தாய் இல்லாத தருணங்களில்
பவுடர் பூசி திர்ஷ்டி புட்டுவைத்து
பள்ளிக்கு அனுப்புவாள்
நான் தவறுசெய்தால்
அம்மாவின் அடிகளை
முன்வந்து தடுப்பாள்
அப்பாவிடம் சண்டைபோட்டு
பணம்வாங்கி பண்டம்வாங்க
இடுப்பிலேந்தி கடைவீதிக்கு
எடுத்துச் செல்வாள்
உறங்கும்முன் அக்காமேல
மோண்டுடாத எனச்சினுங்குவாள்
அக்ஷரங்கள் சொல்லித்தந்து
கைபிடித்து எழுதகற்றுக்கொடுப்பாள்
சிலேட்டில் அவள்பெயர் எழுதினால்
வாரியணைத்து முத்தமிடுவாள்
என் தேவைகளை
அம்மாவிடம் எடுத்துரைப்பாள்
என் தவறுகளை மறைப்பவள் 
நல்லவைகளை ஊருக்கேல்லாம்சொல்வால்
என்முகம் பார்த்து
காரணங்கள் அறிவாள்
என் பால்ய நாட்களில்
முகம்பார்க்கும் கண்ணாடி
அவள் முகம் .


குறிப்பு: நண்பர்களின் வேண்டுகோளுக்காக கவிதையின் தலைப்பில் ஒரு சிறு மாற்றம் செய்து இருக்கிறேன்

7 comments:

 1. கடவுளின் பெண் உருவம்-மேற்படி மனைவி,சகோதரி,அம்மா போன்ற சொந்தமுறைகள் எதுவுமின்றி நம் வாழ்வின் இறுதிவரை நம்முடன் வாழும் தோழிதான்(அப்படி ஒருத்தி கிடைப்பது பலருக்கு அரிது)..அவளை விட்டுவிட்டீர்களே?

  ReplyDelete
 2. செய்தாலிSeptember 12, 2010 at 12:38 PM

  தோழி என்பவள் ஒரு உறவல்ல அது ஒரு உணர்வு உறவுக்கும் உணர்வுக்கும் வித்தியாசம் உள்ளது
  பள்ளிக்கொடம் ,கல்லூரி ,பணியிடம் ,பயணங்கள் இப்படி
  நம் பயணிக்கிற பயணத்தின் சக பயணிதான் தோழி அவர்களுக்கு எல்லைகள் உண்டு
  எல்லைகளற்ற நல்ல உறவுகளில் தான் அழகான வாழ்க்கை அமைகிறது
  நல்ல தோழிகள் அமைவதும் ,அம்மாவின் நல்ல வளர்ப்பிலும் ,சகோதரியின் பாச அரவணைப்பிலும் தான்
  தாய் ,சகோதரி ,மனைவி இவர்களில் கூட ஒரு நல்ல தோழி ஒளிந்து இருக்கிறாள்
  நல்ல உறவுகளில் அதை உணரமுடியும்

  தோழரின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 3. கடவுளின் பெண் உருவம(தோழி)......அக்கா,அம்மா,மனைவி போன்றவர்கள் விதியால் உறவாகிவிட்ட காரணத்தால் நமக்காக வாழ்பவர்கள். ஆனால்,தோழி யாருக்கோ பிறந்து நமக்காய் வாழ்பவள்.சில தோழிகளில் தாயை காணலாம்,சகோதரியை காணலாம்....மனைவியாக கூட ஆக்கி கொள்ளலாம்.தாயிடமும் சகோதரியிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத விடயங்களை கூட தோழியிடம் பகிர்ந்துகொள்ளலாம்.she is great

  ReplyDelete
 4. நீங்கள் சொல்ல்வது உண்மை நான் இன்று நல்ல நிலைமைக்கு இருப்பதும் அலுவலகம் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டதும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த நல்ல தோழிகளின் மூலம்தான் ஆனால் காலத்தின் கட்டாயத்தால் நிறைய பேர் பிரிந்தது வேறு இடங்களுக்கு சென்று விட்டார்கள் சிலர்மட்டும் நம்முடன்

  படிக்கிற காலத்தில் கிராமத்தொழிகள் ,ஐந்து வருட சென்னை வாழ்க்கையில் ,இன்றுவையிலான ,அமீரக வாழ்க்கையிலும் நிறைய தோழிகள் வந்து போய்தான் இருக்கிறார்கள் இது ஒரு வேதனையான விஷயமும் கூட

  மற்றபடி நீங்கள் சொன்னபடி தோழிகள் மேன்மைக்குரியவர்கள்தான்

  ReplyDelete
 5. நமது சமூகம் அப்புடி.....ஒரு ஆணுக்கு சாகும்வரை ஒரு ஆண் தோழனாக இருந்துவிடமுடியும் ஆனால்,ஒரு பெண் தோழியாக இருக்க முடிவது மிகவும் கடினம்

  ReplyDelete
 6. கைபிடித்து எழுதகற்றுக்கொடுப்பாள்
  சிலேட்டில் அவள்பெயர் எழுதினால்
  வாரியணைத்து முத்தமிடுவாள்
  என் தேவைகளை
  அம்மாவிடம் எடுத்துரைப்பாள்
  என் தவறுகளை மறைப்பவள்.."

  மிக அருமை நண்பரே...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...