Monday, September 20, 2010

என் இனிய தோழி




ஒரு 
சிறு புன்னகை
தயங்கிய வார்த்தைகள்
மெல்லிய பெயர் அறிமுகங்கள்
அலுவலக முதல்நாள்

தெரிந்ததை 
சொல்லிகொடுத்தாள்
தவறுகளை சுட்டிகாட்டினாள்
முதல்முயற்சியில் தட்டிக்கொடுத்தாள்

உணவு இடைவெளி
பரிமாறப் பட்டது
கொண்டுவந்த உணவும்
உறவுக் கதைகளும்

அறிவுரைகள் சொல்வாள்
நாகரீகம் கற்றுக்கொடுத்தாள்
என் மாற்றங்களில்
என்னையே வியக்கவைத்தாள்

அவசர தருணங்களில்
உதவிக்கை நீட்டினாள்
தோள்பிடித்து உரையாடுவாள்
வயிறுகுலுங்க சிரிக்கவைப்பாள்

சில கருத்துகளை
விவாதித்துக் கொள்வாள்
சிறிதாய் சண்டையிடுவாள்
தவறுகளுக்கு மன்னிக்கச் சொல்வாள்

வாழ்த்துச் சொல்லி
பிறந்தநாளை நினைவூட்டுவாள்
பண்டிகை தினங்களில்
கைபேசிக் குறுந்தகவல் அனுப்புவாள்
வருஷவிடுப்பிற்கு ஊர்செல்பவள்
பரிசுகளுடன் திரும்புவாள்

கணவனின் கட்டளைப்படி
பிள்ளைப்பேருக்காக
அலுவலகம் விட்டு
கண்ணீரில் விடைபெற்று
சில மாதப்போக்கில்
மின்னஞ்சலில் அனுப்பிவைத்தாள்
தன்பிள்ளையின் புகைப்படத்தை

காலம் கடந்தது
நிறையப்பேர் வந்துபோனார்கள்
இன்றுவரையிலும் அமையவில்லை
உன்னைப்போல் ஒருதோழி

 
-தோழி ஷேர்லிக்காக

3 comments:

  1. ரொம்ப இரசித்தேன். அழகா இருக்கு

    ReplyDelete
  2. என் திறமைகளை வெளியே கொண்டுவந்து என்னை நானாக மாற்றிய என் இனிய தோழிக்காக எழுதியது

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...