Tuesday, September 7, 2010

நானும் பள்ளிக்கூடமும்




இன்றுமுதல் விடுமுறை
அறிவுப்பு பலகையில்
எழுதியிருந்த அவ்வாசகம்
சந்தோசத்தையும் அழுகையும்
ஒன்றாக தந்தது
தினமும் பயமுறுத்தும்
கணக்கு ஆங்கில
பாட வகுப்புக்கு
விடுப்புயென்ற சந்தோசமும்
கவிதை நடையில்
அழகாய் புரியவைக்கும்
தமிழ்பாட வகுப்பு
காலைத் தாமதத்திற்கு
காரணங்கள் சொல்ல்வது
கடவுள்வாழ்த்து அணிவகுப்பில்
சேட்டைகள் செய்வது
வகுப்புத் தேர்வில்
அதிகமார்க் எடுப்பதில்
நண்பர்களுடனான போட்டி
உணவு இடைவெளிகளில்
கூடிஅமர்ந்து உணவை
பகிர்ந்து உண்ணுவது
விளையாட்டு வேளையில்
யார்முதலில் விளையாடுவது
என்று தற்க்கித்துகொள்வது
ஆசிரியர் இல்லாததருணம்
தலைமை மாணவனின்
கண்காணிப்பை கேலிசெய்வது
ஜன்னல் காட்சிகளை
வேடிக்கை பார்ப்பது
சினிமாவிஷயம் பேசுவது
வீட்டுப்பாடம் எழுதாமல்
அடிவாங்க நிற்ப்பது
வார விடுமுறைகளில்
வீட்டில் பொய்சொல்லி
நபர்களுடன் கிரிகெட்
விளையாடச் செல்வது
மதியமாலை மணியோசையில்
மடைவெள்ளம்போல் சிதறிஒடுவது
ஊர்போகும் பேரூந்தில்
பெண்களை கிண்டல் செய்வது
இத்தருனங்களும் நண்பர்களும்
இல்லாத விடுமுறைநாட்கள்
ஒருவகை ரணம்தான்
கூச்சலும் கும்மாளமுமாய்
நிரம்பிவழிந்த பள்ளிமுற்றம்
வெறிச்சோடிக் கிடக்குது
பூட்டிய வாசல்
திறப்பத்தற்காக காத்திருக்கிறோம்
நானும் பள்ளிக்கூடமும்

5 comments:

  1. இத்தருனங்களும் நண்பர்களும்
    இல்லாத விடுமுறைநாட்கள்
    ஒருவகை ரணம்தான்
    கூச்சலும் கும்மாளமுமாய்
    நிரம்பிவழிந்த பள்ளிமுற்றம்
    வெறிச்சோடிக் கிடக்குது
    பூட்டிய வாசல்
    திறப்பத்தற்காக காத்திருக்கிறோம்
    நானும் பள்ளிக்கூடமும்

    மிக அருமை நானும் இதை அனுபவித்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. மிகவும் அருமை நண்பரே....

    ReplyDelete
  3. நந்தலாலாSeptember 12, 2010 at 12:56 PM

    இயல்பாய் ஆழமாய் அருமை!!

    ReplyDelete
  4. என்பள்ளி பருவத்தில் நான் அனுபவித்தஅந்த தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்
    என் இனிய தோழர்களின் கருத்துக்கு மனமார்ந்த்த நன்றிகள்

    ReplyDelete
  5. நான் என் பக்கத்தை உருவாகிய பின் முதன் முதலாய் படிதத கவிதை,தோழர் சையத்அலியின் நானும் பல்லிக்ககூடமும். மிக‌வும் நன்றாக இருந்த்தது. என் பள்ளி அனுபவம் அனைத்தும் அப்படியே எழுதி என்னை பரவசதில் ஆழ்திவிடீர் தோழரே... கடந்த கால நினைவுகளில் முழ்கிவிட்டேன்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...