Thursday, September 9, 2010

அன்பின் பெண் உருவம் (மனைவி)





தலையில் முக்காடிட்டு
கூந்தலில் மல்லிகைசூடி
இதழில் புன்னகையுமாய்
மங்கள முகத்துடன்
நிச்சயத்திற்கு முன்
அனுப்பிய புகைப்படத்தில்
எத்தனை முறை எடுத்துப்
பார்த்தேன் எனகணக்கில்லை
வெற்றுஇடமான நெஞ்சுக்குள்
சருட்டென நுழைந்துசென்றாள்
மறுநாள் சொல்லிவிட்டேன்
அவளைப் பிடித்துருக்கென்று
நிச்சயம் நடந்தது
எனக்குள் காதலும்பிறந்தது
மூன்றுமாத இடைவெழி
அவளுடனாக காதலை
அதிகரிக்கச் செய்தது
குரல்கேட்கும் ஆசையால்
கைபேசியில் அழைத்து
வார்த்தைகள் இன்றி
திணறினோம் இருவரும்
பிடித்தவை  பிடிக்காதவை
அறிந்து கொண்டோம்
இரவு தருணங்களில்
தினமும் கனவுகண்டேன்
திருமணத்திற்கு நாள்குறித்தார்கள்
ஆசைப்பட்ட பொருள்வாங்கி
விரைந்தேன் தாயகம்
மணமேடைஉயர்ந்தது
பட்டுசாரியும் பொன்னகையும்
அணிந்து தேவதைபோல்
அசைந்து வந்தாள்
மலர் மாலையிட்டு
விரல் பிடித்தும்
இறுதிவரை வருவேன்
என்று சம்மதம் மூளி
என் உறவுக்குள் நுழைந்தாள்
என் ஆண்மையை உணர்ந்ததும்
முதல் முறையாக
பெண்மையை ரசித்தும்
அவள் வருகையில்
இல்லறத் துணையாக
என் இரண்டாம் தாயாக
இன்பங்களிலும் துன்பங்களிலும்
தோள்கொடுக்கும் தோழியாக
நாளைய பொழுதுகளில்
விடியலாக  அவள் ......


குறிப்பு: நண்பர்களின் வேண்டுகோளுக்காக கவிதையின் தலைப்பில் ஒரு சிறு மாற்றம் செய்து இருக்கிறேன்

7 comments:

  1. திருமண பந்தத்தை அழகாக வர்ணிக்கிறீங்க பாஸ்..

    ரொம்ப பீலீங்க்ஸ்..

    ReplyDelete
  2. வாழ்க மனைவிகள்

    ReplyDelete
  3. உங்க மனைவி ரொம்ப லக்கி பாஸ்...

    ReplyDelete
  4. நல்ல மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம் என்பார்கள்
    அந்த இறைகொடுப்பினைக்கு நாம் நம்மிடத்தில் நேர்மையாக இருந்தால்
    இறவன் கொடுக்கும் எல்லா வரமும் நல்ல வரம்தான்

    தோழர்களின் அன்பான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  5. மன்னிக்கனும் நண்பரே. எனக்கு இறை நம்பிக்கை இல்லை...
    கோபித்துக் கொள்ள வேண்டாம்..
    இனிய ரமலான் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. செய்தாலிSeptember 12, 2010 at 12:34 PM

    நட்பின் உரிமையுடன் தோழரே ..உங்களிடம் ஒரு கேள்வி உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை உண்டா....?

    உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால்
    நீங்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று பொருள் நீங்கள் உங்களையும்,உங்கள் ஆற்றலையும்நம்பினால் நீங்கள் உங்களை ஆழமாக புரிந்து இருக்கிறீர்கள் என்று பொருள்

    கடவுள் என்பது ஒரு நம்பிக்கை!!
    உணர்வதும் ,புரிவதும் அவரவர் மனதை பொறுத்தது

    நண்பர்களிடத்தில் நல்ல ஆரோக்கியமான கருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சொன்னது தவறாக இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...