Wednesday, September 29, 2010

பணம்





முடங்கி கிடந்தால்
என்னை அடைவது கடினம்
ஊனத்தைக் காட்டி
கையேந்தி பிச்சைகேட்டு
என்னை இழிவுபடுத்தாதே
உன் உழைப்பைகொண்டு
உரிமையோடு
என்னைத் தேடிக்கொள்
உனக்கும் உறவுக்கும்
பேதமின்றி   அளவோடுசெலவிடு
ஏந்தும் கரங்களைவிட
கொடுக்கும் கரம் உயர்ந்தது
பொன்னாக சேர்த்து
பூட்டி வைக்காதே
மண்ணை வாங்கி
பயிரிட்டு உணவளி
நான் நிரந்தர இடமற்றவன்
சிறைபிடிக்க முயலாதே
உண்ணும் உணவு
அமிர்தமானால்  உடலுக்குகேடு
தேங்கிய நீரும்
சீழ் துறுநாற்றமாகும்
என்னை ஆளநினை
உன்னை ஆளவைக்காதே
உள்ளத்தில்    அமைதியற்ற
தருணமே  மிஞ்சும்

3 comments:

  1. நல்ல அறிவுரை நன்றி.

    ReplyDelete
  2. நிலாமதிOctober 4, 2010 at 2:07 PM

    ஈட்டி எட்டும் வரை பாயும் .பணம் பாதாளம் வரையும் பாயுமாம்

    ReplyDelete
  3. தமிழ்த்தோட்டம்October 4, 2010 at 2:08 PM

    ந்லாமதி அருமையாக சுட்டி காட்டியுள்ளார்கள், அருமையான கவி பாராட்டுகள் தோழர் செய்யது அலி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...