Sunday, October 31, 2010

காதல் சொல்லும் பொய்கள்
*மின்னல் பெண்ணே
கண்சிமிட்டாதே கருகிவிடுவேன்
உன் அக்னியால்

*என் தோட்டத்தில்
மலராக நீ பூத்தால்
முள்ளாக நான் இருப்பேன்
உனைப் பிறர் தீண்டாமலிருக்க

*உன் இதழ் அழகில்
வெட்கப்பட்டு தலை குனிகிறது
ரோஜா மலர்கள்

*என் காதுகளில் நிரம்பிவழிகிறது
உன் வாய்மொழியின்
தேனிசைத் துளிகள்

*என்னவளே ...
என் இதயம் சுவாசிக்கும்
மூச்சுக் காற்று நீ

*நீ இல்லாத தருணங்களில்
ஒவ்வொரு நாழிகைகளும்
நரக வேதனைகள்

*நிலவு அழகா நீ அழகா
என் இதய மன்றத்தில்
பட்டிமன்றம் நடக்குது

Saturday, October 30, 2010

உதிரும் வாழ்க்கை
*  நாழிகைகளின் மரணத்தில்
அனுமதியின்றி உதிர்ந்துவிழுகிறது
உடலின் ஆயுள் காலம்


*உதிராத பருவமும்
மறையாத புன்னகையும்
பழைய புகைப்படம்


*உயிர் பிரிந்து கழிவாக
பருவம் உதிர்ந்த உடல்
உரமானது மண்ணுக்குள்

ஆழப்பதிந்த சில கல்வெட்டு
சுனாமி


* உன் அலைகளில் ஒதுங்குகிற
மீன்களை பார்த்திரிக்கிறேன்
முதல் முறையாக உன்மடியில்
மனிதர்களைப் பார்கிறேன்
பிணமாக

*உன்கரை மடியில் உறங்கியிருந்தவர்களை
ஒரு விடியல் பொழுதில்
நிரந்தரமாக உறங்க வைத்தாய்
அதன் உள்ளடக்கம் இன்றும்
புரியா புதிராக

கும்பகோண தீ

*பஞ்சபூதங்களில் மாசற்றவன் என்று
மார்தட்டும் நீ வெட்கப்படு
மலரவேண்டிய மொட்டுமலர்களை
உன் வேட்கையால் கரித்ததற்கு

ஈழத்து படுகொலைகள்

* உரிமை கொடி பிடித்த
எம் ஈழத்து உறவுகளை
கொன்று குவித்து உறைந்த
எங்கள் பச்சை இரத்தத்தில்
அவர்களின் வெற்றி கொடி
வெட்கப்பட்டு தலை குனியட்டும்
கல்தோன்றா மண்தோன்றா
முன்தோன்றிய தமிழும் சில தமிழர்களும்

Thursday, October 28, 2010

உன் மூன்றாவது முகம்

புன்னகையிலும் துன்பங்களிலும்
நிறம் மாறுகிற இரண்டுமுகம்
அவ்வப்போது காணக் கண்டிருக்கிறேன்
நம் உறவுகளை பரிமாறிய
அத் தனிமை தருணத்தில்
கோரமான உருவத்துடனும்
புயலின் வேட்கையுமாய்
இரண்டு முகங்களையும் கிழித்துக்கொண்டு
மின்னலைப்போல் வந்து மறைந்தது
உன் மூன்றாவது முகம்

Wednesday, October 27, 2010

இலைகள் உதிர்ந்த மரம்

*களைப்பாற சென்றவனுக்கு
மரத்தடியில் நிழல் இல்லை
இலைகள் உதிர்ந்த மரம்


*என் உடல் கீறி
வெள்ளை குருதி எடுக்குகிரார்கள்
இரப்பர் மரம்


*என் வீட்டில்
நறுமணத்திற்கு குறைவில்லை
முற்றத்தில் மலர்ச் செடிகள்


*எனக்கு நீர் ஊற்றினால்
உன் தாகம் தணிப்பேன்
தென்னை மரம்


*என் பெயரைச் சொல்லி
மணமக்களை வாத்துறாங்க
வாழை மரம்


*என்னுடலில் துளைபொட்டு ஊதினால்
காதுகள் இனிக்க இசைகொடுப்பேன்
மூங்கில் மரம்

Tuesday, October 26, 2010

களவானிகளின் களவுகள்
அது தனக்கு சொந்தமானதல்ல
இருந்தும் அதனை களவாடுகிறார்கள்
நாளிகைகளின் சுமையில்
உடல்களின் உழைப்பில்
சிந்தனை வேர்வை குருதி
இவைகளின் விதைப்பில்
உயிர்த்தேடுக்கிற ஒன்றை
உள்ளம் கூசாமல்
சிந்தை பேதித்து களவாடுகையில்
சிந்தனைகளும் வேர்வைகளும் குருதிகளும்
உன்னுள் சிறுமைப் படுகிறது
மதி மனம் கரம்
கருமை கறை படிக்கிறது
உன் களவாடுகளில்
களவுகளுக்கு பல நியாயங்கள்
நியாயங்கள் களவாடப் பாடுகளில்
சொல்லும் நியாயங்கள் எங்கே

Monday, October 25, 2010

பெண்மையின் மூன்று கேள்விகள்

*தாலிக் கொடி தந்தவனுக்கு
உடை களைந்து தன்
உடல் கொடுக்குகிறாள் என்பதற்காக
அவள் உரிமைகளை பறிப்பதோ


*இருவரின் வயிற்ருப் பசிக்கு
உணவுதர பெற்றவர்கள் இருக்கிறார்கள்
பருவப் பசிக்காக இணைகிறோம்
நீமட்டும் ஏன் கேட்கிறாய்
கூலியாக வரதட்ச்சனையை


*சிலநொடிகளில் கக்கிவிட்டு
கடமை முடிந்ததென்று போகிறாய்
ஏந்திய சுமைகளுக்கும் வலிகளுக்கும்
நான் விலை கேட்டால்
என் செய்வாய்

தவறி விழுந்த சொல்


வாய்தவறி சொன்ன வார்த்த
முள்ளாய் பெத்தமனச குத்திட
தாய் பேசாத நாட்கள்
கஞ்சித் தண்ணி இறங்கல
இரவுல கண்ணுகள் மூடல
புகைஞ்சு புழுங்கும் மனசுமாய்
நிலைகுலைஞ்சு திரிகிறேன்
எனை பேசச் சொல்லி
அழகு பார்த்த தாயே
எந்த தண்ணீர்கொண்டு கழுவுவேன்
உனைத் திட்டிய இந்தவாயை

கிராமத்தின் சில துளிகள்
*பூப்பெய்து வருஷம் கடக்கும்முன்
கருசுமக்குக்ம் பள்ளிச் சிறுமிகள்
அவசரத் திருமணங்கள்

*மனசை பரிகொடுத்தாள் காதலனுக்கு
உடல்கொடுத்தாள் கட்டிய கணவனுக்கு
பண்பாட்டு வேலிகள்

*மனக் கற்பை துலைத்துவிட்டு
கட்டிக் காத்து வருகிறார்கள்
பெண்மையையும் ஆண்மையையும்

*கனவுகண்ட மாப்பிளை நெஞ்சுக்குள்
பெற்றவர்கள்கண்ட மாப்பிளை கட்டிலில்
ஊமையாகும் பெண்மைகள்

*கட்டழகு ஆண் ஆனாலும்
தாலி கட்டிய பிறகே
தன் முந்தி விரிப்பாள்

*பூப்பெயிததும் வீட்டில் சிறைபடுபவள்
வெளி உலகம் வருகிறாள்
கணவன் கைபிடித்து

*மனசு கறைப் பட்டால்
கண்ணீர் வீட்டு துடைக்கிறார்கள்
உடல் களங்கப் பட்டால்
உசுரை விட்டு துடைக்கிறார்கள்

*கிராமத்தின் நாகரீக வளர்ச்சி
படிதாண்டிய பெண்மைகளின்
வழி மாறிய பயணம்
தலை குனிகிறது பண்பாடுகள்

Sunday, October 24, 2010

நகரங்களில் சில காதல்கள்
*முதலில் காதல் செய்வோம்
இருமனம் ஓன்று பட்டால்
திருமணம் பற்றி யோசிப்போம்

*பாதுகாப்பு வேலிக்குள்
அந்தரங்க ஒத்திகைகள்
இருவருக்கும் சேதமின்மை

*ஒன்றாகவாழ்வோம் ஒரு வீட்டில்
திருமணம் இப்பொழுது வேண்டாம்
வாழ்கையை இரசிப்பவர்கள்

*காதலித்து வருஷங்கள் கடந்தும்
நித்தமும் உயிர்த்தெழுகிறது
நீனா நானா தர்க்கங்கள்

*காதலர்களின் உடல்கள்சேர்த்தும்
உள்ளம் சேரவில்லை
பிரிந்தார்கள் நல்ல நண்பர்களாக

*வெட்ட வெளிகளில்
உறவுப் பரிமாற்றம்
உண்மைக் காதலர்கள்

*சில உடல் காதல்கள்
கருச்சிதை மருத்துவமனைகளில்
தொடரும் நீண்ட வரிசைகள்

*எங்களை காப்பற்றுங்கள்
பெற்றவர்களை புறக்கணித்து
காதலர்களின் காவல்நிலைய தஞ்சம்

*நகரங்களின் நாகரீக வளர்ச்சியில்
காதலர்களிடத்தில் குறைந்து வருகிறது
தாடி வளர்க்காத தேவதாசுகளும்
கற்புள்ள பெண்மைகளும்
சில உயிர்ச் சாவுகளும்
இவைகளால் துலைந்து போனது
நம் பண்பாட்டு கலாச்சாரமும்
உறவுகளின் புனிதத் தன்மையும்

Saturday, October 23, 2010

ஆண்மை காக்கும் பெண்மை
இறைவன் படைத்தஇப்புவியில்
புதுமைகள் தாங்கி நிற்பவைகள்
என் ஆண்மையின்
வலிமையின் அடையாளங்கள்
நொடிப்பொழுதில் வலிமையிழந்து
நிலைகுலைந்து நிற்கிறேன்
உன்னுடனான கட்டில் யுத்தத்தில்
என் தோல்விகளை ஒப்புக்கொள்ள
இன்றும் மனம் மறுக்குகிறது
அதன் காரங்கள் என்ஆண்மை
ஆண்மை நிலை உணர்ந்த
நன்மை பெண்மைகள் நல்கனிவுகளால்
தம் ஆசைகளை தியாகம் செய்து
என் ஆண்மை அடையாளங்களை
தலை நிமிர்த்துகிறது
சில உறவுகளின் புரிதலின்மையால்
மனங்களில் விரிசல் இட்டு
பந்தங்களை முறித்துகொள்கிறது
இரு உறவுகளின் கூடல்களை
அந்தரங்க இரகசியம் என்பார்கள்
அதன் மெய் உணர்ந்தவர்கள்
புவிபோற்றும் பெண்மைகள்
இரகசியங்கள் உடைபட்டால்
கீழ்விழுந்து சிதறிவிடும்
ஆண்மையின் அடையாளங்கள்
பெருந்தன்மை பெண்மைகள்
இன்றும் காத்துவருகிறார்கள்
ஆண்மையின் இரகசியங்களை
புவியாளும் ஆண்மையே
உனையாளும் பெண்மையை
உணர்ந்து கொள்

Thursday, October 21, 2010

தாயும் சேயும்*இரு உறவுகளுக்கு இன்பம்
ஒரு உறவுக்கு சுமையும் வலியும்
அழுதுகொண்டு வருகிறது குழந்தை

*ஒருவாய் சோறு உண்டது
இரு வயிறு நிரம்பியது
கர்ப்பிணிப் பெண்

*தொப்புள்கொடி வெட்டியும்
உறவுகள் தளிர்கிறது
தாயும் சேயும்

*கர்ப்பத்தில் எட்டி உதைத்தான்
குறுப்பு என்று புன்னகைதாள்
வளந்த பின் எட்டி உதைத்தான்
கண்ணீருடன் முதியோர் விடுதியில்

கதைகள் சொல்லும் சித்திரங்கள்*நமக்குள் சண்டை வேண்டாம்
கிளைகள் நிறைய பழங்கள்
இருவருக்கும் நல்ல பசி*ஒருஜான் வயித்துப் பசிக்கு
கயரிளையில் அந்திரசாகாசம்
வறுமையின் வீதி நாடகம்
*பயம்வேண்டாம் உயிரெடுக்க அல்ல
பயிர்களுக்கு களை எடுக்க
ஆயுதம் சுமக்கும் பெண்

Wednesday, October 20, 2010

நகரங்களில் உழவர்கள்
* தங்க விலையில் விக்குது
தானியங்களும் காய்கறிகளும்
விளைநிலத்தில் கட்டிடங்கள்

*உழைக்க ஆளின்றி வறண்டு
நாதியற்று கிடக்குது விளைநிலம்
நகரங்களில் உழவர்கள்

* உடுப்பு சுருங்காமல் உழைப்பவனுக்கு
உணவுப்படி அளக்குகிறான்
சேருசகதி புரண்ட உழவன்

Tuesday, October 19, 2010

உடல் தின்னும் மிருகம்
கைபேசிகளில் பெண்மைகளின்
உடல் அங்கச் சித்திரம்
ஊரைக்காட்டி உறவு விலைப்பேச்சு
தவணை முறையில் களவாடி
தன் இச்சைக்கு இறையாக்கிறது
உடல் தின்னும் காமமிருகங்கள்
ஊரார் அவதூறு பேசுவார்கள்
வாயடைத்து ஊமையாய் பெண்மை
கௌரவ முகமூடி அணிந்து
ஊருக்குள் நட்டலுடன் உலவுகிறது
உடல் திண்ணி மிருகங்கள்
அக்னி எரிமலைகளாய் பொங்கி
வீதியில் கக்குகிறது வேதனைகளை
பணம் பதவி அதிகாரங்கள்
முகமூடிகளின் பாதுகாப்புக் கவசம்
வேஷி முத்திரை பதிக்க
ஊரும் உறவும் பழிபேச
பெண்மை நாதியற்று வீதியில்
 இனிஒரு தனிமையில்
காம ருசியறிந்த நாய்கள்
பெண் மோப்பமிட்டு வருகையில்
அறுத்து எறிந்துவிடு மர்மத்தை
நாளை ஊர் துடைக்கும்
உன் களங்கத்தை


Monday, October 18, 2010

பெண் ஜென்மம்

தளிரிட்ட கருசிதைந்து
கரும்சிவப்புக் குருதிகளாக
மாதத்தில் மூன்று நாட்கள்
என் யோனி கக்குகையில்
உயிருதிரும் ரணவேதனையிலும்
தண்ணீர் நரம்பிய மண்குடம்
உடைபட்டு சிதறுவதைபோல்
நூலிழையில் மூச்சுக் காத்துமாய்
மரணத்தை முத்தமிட்டு
ஐவிரு மாதச் சுமையை
இறக்கிவைக்கும் தருணங்களிலும்
ஒருகணம் நினைத்ததுண்டு
இறைவா ஏன் படைத்தாய்
வேதனைகள் சுமக்கும்
இந்த பெண் ஜென்மத்தை

Sunday, October 17, 2010

கணினியின் விஷத் துளிகள்

*இரு பாலினத்தின் இடையினான
அந்தரங்க உறவுப் பரிமாற்றங்களை
நட்டலுடன் ஒளிக்கோர்வை  செய்து
மின் வலைகளில் பகிரும்
உடல் திண்ணி மிருகங்கள்


*பெற்ற தாயையும்
இரத்த பந்தங்களையும்
உற்ற உறவுகளையும்
பாலுறவு பிணைத்து
கொச்சை எழுத்து வரிகளை
மின் வலைகளில் பகிரும்
சாத்தானின் சந்ததிகள்


*எட்டாக் கனியான கணினி
இன்று பாமரன் கையிலும்
இளசும் பெருசும் வயதுபேதமின்றி
நல் தகவல் பரிமாற்றங்கள்
அறிவைத்தேடிய பயணத்தில்
மதியை சீர்கெடுத்து
வழிகெடுக்கும் சாத்தான்களை
விரட்டியடித்து துரத்துவோம்

Saturday, October 16, 2010

செவிலித் தாய்

*பெற்றவளுக்கு பிள்ளைகளை
வளர்க்க நேரமில்லை
செவிலித் தாய்

*கட்டிய பால் மார்பில்
குழந்தைக்கு புட்டிப் பால்
மார்பு அழகு பேணுதல்

*திருமணத்திற்கு முன்
காதலர்களின் கட்டில் ஒத்திகை
குப்பைத் தொட்டியில் குழந்தை

*ஊடக மேடைகளில்
அரங்கேறும் குழந்தைகள்
ஈன்றவர்களின் புதிய வழிநடத்தல்

*நேற்றுவரை காதலித்தவர்கள்
இன்றவரை கரம் பிடித்தவர்கள்
தொடரும் பட்டியல்கள்
புதிய உறவுக்கலாச்சாரம்

*வயோதியர்களின் மரணம்
செலவுகள் மிச்சம்
புதிய கூட்டல் கணக்கு

Thursday, October 14, 2010

மலர்களின் துக்கம்
செடிகளில் பூத்துக்குலுங்கியும்
கவனிக்கப்படாமல் போகையில்
பறிக்கப்பட்டும் சந்தையில்
விலைபோகாமல் இருக்கையில்
மாலையாக கோர்க்கையில்
சிதறிவிழுந்து சிதைகையில்
எம்  வாசம்   நுகரமுடியாத
இறந்த மனிதர்களுக்கு
அலங்காரமாய் சூடுகையில்
அர்ச்சனை பூக்களாக
திருச் சன்னதிவரை சென்றும்
தெய்வத் திருவடி அடையாமல்
திரும்பி வருகையில்
சொல்லா துக்கங்கள்
விரிந்த எம்முகத்தில்
புன்னகை மட்டும் பார்ப்பவர்கள்
உணர மறந்து விடுகிறார்கள்
நீரற்ற கண்ணீரையும்
ஓசையற்ற அழுகையையும்

Wednesday, October 13, 2010

மகுடம்

ஆடுகளத்திலும்
உலக அரங்குகளிலும்
உலக சரித்திரங்களை
திருத்தி எழுதி
பாரத மாதாவிற்கு
வெற்றிமாலை சூடி
தேசத்தின் புகழ் கொடி
தலை நிமிர்ந்து பறக்கவைத்த
நம் சகோதர்களுக்கு சகோதரிகளுக்கும்
கைகூப்பி கரவோசை எழுப்புவோம்
ஒன்றுமையுடன் போராடுவோம்
கலாமின் கனவு தேசம்
நனவாகும் நாள்
நமக்கு இனி தூரமில்லை

Tuesday, October 12, 2010

ஒரு காதல் கதை
நண்பனின் திருமணம்
மணத்தோழனாக நான்
அரங்கேறிய திருமணத்தின்
சூடுதணிந்த ஏழாம் நாள்
ஒரு துலைபேசி அழைப்பு
அதில் நண்பனின் குரல்
என் மனைவிவின் தோழிக்கு
உன்னை பிடித்திருக்காம்
உன் பதிலைச்சொல் என்றான்
பருவமலர் தளிர்கின்ற
இருபதின் காளை வயதை
அச்செய்தி சற்று எனக்குள்
சலனம் செய்தது
சிறிய மௌனத்திற்குப் பிறகு
அவளின் புகைப்படத்துடன்
ஒரு அறிமுக குறிப்பு
எழுதி அனுப்பச் சொல்
என்று பதிலழித்தேன்
ஒரு வாரத்தின் இறுதியில்
உனக்கு ஒரு கடிதமிருக்கு
என் பெயரை அழைத்தபடி
வாடகை வீட்டின் முதலாளியம்மா
அனுப்புனரில் அவள் பெயர்
 எழுதி இருந்தது
ஆவலுடன் அம்மடலைப் பிரித்தேன்
புகைப்படம் தாங்கிய ஒருகடிதம்
பெயர் வயது படிப்பு என்று
அவளின் சில விபரங்கள்
நிறைய பேசுபவள்
எழுதக்கூடியவள் என்பதை
நான் உணர்ந்தேன்
எட்டுபக்கங்கள் கொண்ட
அவள் எழுத்துக்களில்
மண மேடையில்
என் செய்கைகளையும்
சில குறும்புகளையும்
பதிவு செய்திருந்தாள்
என் நினைவுகளால்
உறக்கமில்லாத இரவுகளையும்
தன் விருப்பத்தை
வெளியே சொல்லமுடியாமல்
தவித்த தருணங்களையும்
வெளிப்படுத்தி இருந்தாள்
பட்டுப் பாவாடை சட்டை
கூந்தலில் மல்லிகைப் பூவும்
பௌடர்பூசிய முகமுமாய்
பத்து வயது புகைப்படம்
அதில் சிறு குறிப்பும்
கடிதத்தின் முடிவில்
அவள் சுமக்கும் பதினைந்தாம்
பருவ வயதின் உணர்வுகளை
என்னால் உணர முடிந்தது
நீண்ட மௌனம் துடர்ந்தது
மறு கடிதம் பற்றிய
ஆழ்ந்த யோசனைகள்
ஒரு இலட்சியப் பயணத்தின்
ஆரம்ப நிலையில் நான்
நடுநிலைப் பள்ளிப்படிப்பில் அவள்
சமூகம் கற்றுக்கொடுத்ததும்
அறிஞர்கள் எழுதி வைத்ததும்
கற்று உணர்ந்த நான்
இளமையின் சபல ஆர்வங்களால்
வாழ்கையை சிதைக்க விருப்பமில்லை
என்னுடனான அவளின் காதல்
வெறும் ஈர்ப்பா இல்லை
ஆழமான காதலா என்று
அறிந்து கொள்ளவும்
அவளின் மனம் அறியவும்
நம் பேசிக்கொள்வோம் கடிதங்களில்
சந்தித்துக் கொள்வோம் கனவுகளில்
நேரிட்ட பார்வைகளுக்கும்
ஒன்றிணைந்த பழகுதலுக்கும்
தடை சட்டம் இயற்றினேன்
ஐந்து வருட காலஅவகாசமும்
எடுத்துக் கொள்ளவோம்
அதுவரை தொடரட்டும்
உனது பள்ளிப் படிப்பும்
என் இலச்சியம் பயணமும்
அவகாச கால முடிவில்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
நம் காதல் இருந்தால்
பெரியோர்களின் முன்னிலையில்
திருமணம் செய்துகொள்வோம்
எனது இந்த பதில்கடிதத்திற்கு
மறுவாரமே பதில் வந்தது
எல்லாத்திற்கும் ஒப்புக்கொண்டேன்
உங்களையும் நம் காதலையும்
மதிக்கிறேன் என்றும்
எனக்காக காத்திருப்பேன்
என்றும் பதிவு செய்திருந்தாள்
ஒருவருடம் கடிதங்கள் வழி
உறவுகள் துடர்ந்தது
சில மாதப்போக்கில்
கடிதங்களின் வரவு நின்றது
இரண்டாம் வருஷத்தின் இறுதியில்
ஊர் சென்றிருந்தேன்
பால்ய நண்பர்களிடம்
அவளைப்பற்றி விசாரித்தேன்
சில அவதூறு செய்திகளால்
காதை நிரப்பினார்கள் நண்பர்கள்
உண்மை பொய் உணரமுடியவில்லை
அவள் விலாசம் தேடிய
பயண அலைச்சலில்
படிப்பு முடிந்தவள்
குடும்பத்தோடு வேற ஊர்
போய்விட்டதாக பக்கத்து வீட்டு
அவள் உறவுகள் சொன்னார்கள்
அவளுக்கு திருமணம் முடிந்துவிட்டது
நீ அவளை மறந்து விடு
நண்பர்களிள் ஆறுதல்கள்
ஏமாற்றத்துடன் திரும்பினேன்
இருவரின் தளிர் பருவம்
நாளைய நல் எதிர்காலம்
உறவுக்கு வேலியிட்டது தவறா
என் எண்ணம் தவறா
கால அவகாசம் ஒரு கூரமா
காதலை கொச்சைப்படுத்தும் சமூகத்தில்
என் காதல் தவறா
எனக்குள் எழுந்த சில
கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை
என்றாவது ஒரு நாள்
அவளின் சந்திப்பை எதிர்பார்த்தேன்
சில மாதங்கள் நீடித்தது
அவளைப் பற்றிய நினைவுகள்
ஒரு பகல் கனவுபோல்
இருந்தது அவளுடனான காதல்
காலம் உருண்டோடியது
துடர்ந்த இலச்சியப் பயணத்தில்
மறந்து போன அவளை
அவ்வப்போது நினைவுப்படுத்தியது
அவள் கடிதங்களும் புகைப்படமும்
சில குடும்ப காரங்களால்
இலச்சிய பயணமும் கைவிடப்பட்டது
குடும்ப உறவுகளின் கட்டளைக்கிணங்கி
திரவியம் தேடி
கடல்கடந்த பயணம்
நிறைய மனிதர்கள்
விசித்திர அனுபவங்கள்
காலம் மீண்டும் ஓடியது
ஒரு மாலை தருணம்
என் கைபேசி துடித்தது
உனக்கு பெண் பார்த்திருக்கோம்
அம்மாவின் குரல்
காலஓட்டம் நினைவுப் படுத்தியது
என் திருமண வயதை
இதுவரை கடந்துபோன
நிறைய பெண்களிடத்தில்
நட்பு வேலியிட்டு பழகிவந்ததால்
வெற்றிடமாய் இருந்தது மனசு
உறவுக்கார பெண்
என்றோ ஒருமுறை பார்த்திருக்கிறேன்
அவள் பெயரைச் சொன்னார்கள்
ஆச்சிரியமாக இருந்தது
நான் மறந்து போயிருந்த
அவளின் பெயர்
புகைப்படம் அனுப்பிவைத்தார்கள்
குணங்களை பற்றி சொன்னார்கள்
வெறுமையான வாழ்க்கைக்கு
துணையின் தேவையை உணர்ந்தேன்
திருமணப் பந்தல் உயர்த்த
சம்மதம் மூளினேன்
விடுப்பெடுத்துச் சென்றேன்
ஆர்பாடமற்ற திருமணம்
பெரியோர்களின் ஆசியில்
மனஅழகு சாந்த குணம்
பெண்மை நளினங்களும்
அன்பான மனைவி
எனக்குள் சிதைந்து இருந்த
காதலனுக்கும் கவிஞனுக்கும்
மறு பிறவி கொடுத்தாள்
ஒரு தனிமை தருணத்தில்
அவளைப்பற்றி சொன்னேன்
பதில் வார்த்தைகள் இன்றி
தலைகோதி விட்டாள்
உறவுகளிட்ட திருமண பந்தத்தில்
தொடர்கிறது எங்கள்
காதல் பயணம்........


// இது கதையல்ல நிஜம் //

Sunday, October 10, 2010

மது
வாலிப வயது முதல்
மரணத்திற்கு முந்திய
இரண்டாம் நாள்வரை
தினமும் மது அருந்த
ஒவ்வொரு காரணம்
மது மயக்கத்தில்
உறவுகளை மறந்ததால்
இளம் வயதிலே
தாலிக்கொடி இழந்து
கண்ணீர் சுமக்கும் மனைவி
ஓரிரு வாரங்களில்
உலகைப் பார்க்க காத்திருக்கும்
நிறைமாசக் குழந்தை
மரணச் சேதிகேட்டு
ஓடிவந்த உறவுகள்
இறுதிச் சடங்குமுடிந்து
சிதறிச் சென்றனர்
மதுவை நண்பனாக்கியதால்
வந்தஉறவும் இரத்தஉறவும்
நாதியற்று வீதியில்
உயிர் குடித்த மதுவோ
புதிய நண்பர்களை எதிர்பார்த்து
பத்திரமாக மதுக்கடையில்

Saturday, October 9, 2010

தனிமைகள்
அம்மாவின் மார்புச்சூடு இன்றி
உறங்கப் பழகிய வயதில்
பால்ய தனிமைகளின் வருகை
பிடித்த விளையாட்டுப்பொருளை
யாருக்கும் காட்டாமல் ஒளிந்துகொண்டு
தனிமையில் விளையாடுவது
அம்மாவின் சில கண்டிப்புகளில்
சிறு கண்ணீரும் வாடியமுகமுமாய்
மூலையில் பிடிவாத தனிமை
காரணமின்றி வந்து போகும்
சில பால்யத் தனிமைகளும்
நண்பர்கள் காதல்
பந்தங்கள் உறவுகள்
இவைகள் இல்லாத தனிமைகளும்
வந்த பிறகு நாமாக ஏற்ப்படுத்தும்
சுயநல தனிமைகளும்
கல்வி வேலை இல்லாத தனிமைகளும்
கிடைத்தபின் அதன் ஆதிக்கத்தால்
மனம் நிலைகுலைந்த தனிமைகளும்
பிரச்சனைகளின் முடிச்சுக்களை
அவிழ்க்க ஏற்படுத்தும் தனிமைகளும்
ஆக்கமான தீர்மானங்கள் எடுக்க
தன்னிலை தனிமைகளும்
வாழ்கையில் துரத்தி வருகிற
இன்ப துன்ப தருணங்களை
எதிர்கொண்டு அதில் பயணிக்க
அவ்வப்போது எடுத்துக் கொள்ளும்
சில அவசரத் தனிமைகளும்
மதிகெட்டு சுய மரணத்திற்கு
வித்திடுகிற தனிமைகளும்
புது வாழ்க்கைக்கு நம்மை
திரும்பி அழைத்து வருகிற
தெளிவான நல் தனிமைகளும்
கருவறையில் துடங்குகிற
நம் முதல் தனிமை
ஆத்மா பிரிந்த வெற்றுடலின்
மயான பயணம்வரை
பிதொடர்ந்து வருகிறது
 தனிமை தருணங்களை
மிருதுவாகவும் அமைதியாகவும்
நல் எண்ணங்கள் கொண்டு
கையாளுகையில்
வாழ்கையை உயர்த்துகிற
புதிய சிந்தனைகள்
உயிர்த்தெழுகிறது

Thursday, October 7, 2010

இரண்டு கற்பின் புனிதம்
அற்ப சுகத்திற்காக
விலை மாதுகளிடமிருந்தும்
இச்சைகளால் வசியப்படுத்தும்
மாசுள்ள உறவுகளிலிருந்தும்
காதலின் பெயர்களால்
கற்பை சூறையாடும்
கயவர்களிடம் இருந்தும்
இல்லற வாழ்கையில்
புனிதமான தாம்பத்தியத்தில்
ஒருவர்கொருவர் பரிமாறிக்கொள்ளும்
நம் புனித கற்புகளை
இது எனக்கு சொந்தமாது
என்று அவர்கள்
உரிமை கொண்டாடி வரும்வரை
நமக்கு சொந்தமில்லாத
ஆண்மைத்தன்மையும்
கன்னித் தன்மையும்
காத்துக் கொள்வோம்
கற்பின் புனிதத்தை
என்றும் கடைபிடிப்போம்

Wednesday, October 6, 2010

புது உறவுகளின் இரு காயங்கள்
புதுத் தம்பதிகளின்
முதலிரவு மஞ்சத்தில்
இருகாயங்கள் பற்றிய சர்ச்சை
மனையாளியின் மார்பில்
தீயால் சுட்ட தழும்பு
மன்னவனின் இடக்கரத்தின்
 நடுப்பகுதியில் கூர்மை கத்தியின்
கீறல்களின் பாடுகள்
சில கடித குறிப்புகளும்
சமூகத்தாலும் ஈன்றவர்களாலும்
சிதைக்கப்பட்ட முந்திய உறவின்
அழியா சின்னங்கள் அது
இரவில் ஒரு கனவுகண்டோம்
பகலில் அது கலைந்து போனது
நிஜங்களில் இனி
நாம் இருவர் மட்டும்
உறவுகளால் பிரிக்கப்பட்டும்
நம் உள்ளங்களில் உறங்கும்
அவ்மனங்களின் நினைவுகளை
நம் நல் புரிதல்களாலும்
நமக்குள் விதைத்துகொள்ளும்
மாசற்ற தூய அன்பாலும்
ஒருமனதாய் துடைத்தெறிவோம்
நாளைய நம் வாழ்க்கை சிறக்க

Tuesday, October 5, 2010

ருசியின் மகத்துவம்
உண்ணும் உணவிலும்
காதல் உறவிலும்
இல்லற பந்தங்களிலும்
இதயத்தை இனிப்பூட்டும்
ரசனை கலந்த
ருசியின்   மகத்துவம்
உணராமல் போகிறார்கள்
சில அவசர தேடலால்
இனிப்பும் கசப்பும்
புளிப்பும் துவப்பும்
சுவைக்குள் அடங்கியவை
வாழ்கையும் அப்படியே
அவசரங்களை களைந்து
வாழ்கையின் ருசியை
ரசனையுடன் சுவைப்போம்

கனவின் சில நாழிகைகள்
நிலவு இல்லாத
அம்மாவாசை நாள்
இருள் சூழ்ந்த
ஒத்தையடி பாதையில்
தனித்த பயணம்
சுற்றும் நிசப்தம்
அதைஉடைத்து கிளம்பிய
அசிரீர சப்தங்கள்
பிராணிகளின் கரைச்சல்கள்
சிறு காற்றில்
அசைகின்ற மரங்கள்
குறுக்கே பறந்த
வவ்வால் கூட்டம்
எங்கோ தூரத்தில்
குரைக்கின்ற நாய்கள்
அரண்டதெல்லாம் பேயென
விழிகளிடம் மதி சொல்ல
வழக்கத்திற்கு மாறாக
இரட்டிப்பாய் துடித்தது மனம்
கால்களோ நாட்டியமாட
சிலிர்த்த ரோமங்களுக்கிடையே
எட்டிப்பார்க்கிறது வியர்வைத்துளிகள்
நிலைகுலைந்து தடுமாறி
நின்ற தருணம்
ஆயுதம் ஏந்தி
கோர முகத்துடன் சிலர்
எனைநோக்கி ஓடிவர
திக்குத் திணறி
திசையறியா ஓட
கால் சறுக்கி
பாதாளத்தி   விழுந்ததும்
அம்மாஎன்று உறக்ககத்த
என்ன  இன்னுமா எந்திரிக்கல
மணி எத்தனை தெரியுமா
அம்மாவின் குரல்
போர்வையை விலக்கி
அலுப்புடன் கண்ணைகசக்கி
விழித்துப் பார்த்தேன்
காலை மணி  ஒன்பது
குவளை தண்ணியெடுத்து
முகத்தை கழுவ
இதுவரை துரத்திவந்த
அந்த கோர நாழிகைகள்
திடுக்கென்று மறைந்தது

Monday, October 4, 2010

அரக்க மனிதர்கள்
வஞ்சமும் நஞ்சும் கலந்து
சீழ் துருநாற்றமுடைய
தரம் கெட்ட மனம்
பிணம் தின்னும்
கழுகுப் பார்வை
நிறத்தை மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தியின் குணமும்
அடுத்தவன் வீழ்ச்சியில்
பிறர் கண்ணீரிலும்
ஆனந்த தாண்டவமாடுவது
முன்னே இரவல் புன்னகளையும்
பின்னில் அசூர ஆதங்கமும்
தன்னிலை மறந்த
நான் என்கிற மமதை
மாற்றானைப் பற்றிய
அவதூறு பேச்சு
தாகித்த நாயின்
கடலை விழுங்கும் ஆசை
விஷம் கக்கும் பாம்பைப்போல்
குத்தும் வார்த்தைகள்
சிறிது தாழ்ந்தால்
கால்கொண்டு தலையை
மிதித்துத் தள்ளுவது
தன் நன்மை எண்ணியவனையும்
துளியும் கருணையற்று
சூழ்ச்சியால் வீழ்த்தி
அவன் குருதியையும் கண்ணீரையும்
இன்ப பானமாய் அருந்தும்
மனித உடலுடுத்திய
அசூர மிருகம்
அன்றும் இன்றும்
நன்மை மனிதர்க்கிடையில்
உறவு பந்தங்களிலும்
நட்பு கூட்டங்களிலும்
நமைச்சுற்றிய சமூகத்திலும்
முகமூடியிட்டு உலவுகிறது
விஷக் கொல்லிகள்
விழித்துக் கொள்ளுங்கள்

Sunday, October 3, 2010

பெண்மை ஒரு அழகிய கவிதை
*மஞ்சத்தின் தருணங்களில்
என் வினவலுக்கு
தலை தாழ்த்தி
வார்த்தைகளற்ற
மூளல் கவிதகளில்
பதில் சொல்கிறாள்


*உறவுகளின் சபையில்
கூடி இருக்கையில்
வளையல் குலுக்கி
சிலும்பல் ஒலிகளில்
என்னோக்கிய தன்அழைப்பை
பதிவு செய்கிறாள்


*சிறு பிணக்கங்களில்
பரிமாறிய உணவு
உண்ண ஆளின்றி
ஆரித் தனுக்கையில்
பவ்வியமாக அருகில்வந்து
பாதங்களால் தரைதட்டி
கொலுசின் சிணுங்கள்
ஒலிஎழுப்பி தயங்கிநிற்ப்பாள்


*கணக்கற்ற முத்தமிட்டு
ஒருமுத்தம் கேட்டால்
தயங்கி நிற்ப்பவள்
எதிபாராத தருணத்தில்
சில முத்தமிட்டு
உடைத்து எறிகிறாள்
என் கணக்கற்ற முத்தங்களை


*வெளியூர் பயணங்கள்
பேரூந்தின் சன்னல்வழி
காட்ச்களை காட்டி
என் மார்த்தட்டி
சிணுங்கல் மொழிகளில்
வினாக்கள் எழுப்புவாள்


*என் பெயரை
உறவுகளிடடும்
தன் தோழிகளிடமும்
உச்சரிக்க மறுக்கிறாள்
அவள் பெயரை சொல்லி
என் பெயரை கேட்கிறேன்
ஒரு கள்ளச் சிரிப்புமாய்
குழைந்து நிற்கிறாள்

Saturday, October 2, 2010

பெண்ணுக்கு பெண்
சொன்ன பவுணும்பணமும்
இட்டதில் குறைகள்
மாப்பிளை சலுகைகள்
பிடித்து வாங்கல்கள்
சீதன பொருட்கள்
மன நிறைவில்லை
உறவுகளில் சபையில்
உணவு ருசி சர்ச்சைகள்
இட்ட பௌனின்
தரம் பார்த்தல்
மாலைஎந்தி
உயிருள்ள சடமாய்
மேடையில் மணமகள்
முதல் மாசக்கடைசியில்
உயிர்த்தெழுகிறது
விடிந்து அடையும்வரை
வேலைப்பாடுகள்
சிறு குறைகள்
குத்து வார்த்தைகள்
குற்றம் சொல்லி
பழி சுமத்துதல்
சிரிப்பதும் பேசுவதும்
சபை விலக்கு
கணவன் இருந்தும்
தனிமை உறக்கங்கள்
சொந்த அறையிலும் ஐயத்துடன்
உறவுப் பரிமாற்றம்
அவ்வபோது சுரண்டும்
நாத்தனார் உறவுகள்
வாழ வந்தவளும்
வாழ சென்றவளும்
நித்தம் சந்திக்கிற
அத்தைஎன்னும் பெண்மையின்
அதிகார ஆட்சிமுறைகள்
கோர அவதாரங்கள்
ஈனச் செயல்களால்
குறைத்துக் கொள்கிறார்கள்
விளக்கேற்ற வந்த
பெண்மைகளின் நெஞ்சில்
அன்பையும் பரிவையும்
வந்த மருமகளை
மதிகெட்டு நடத்துகையில்
மறந்து விடக்கூடாது
உன் மகளும்
மாற்றான் வீட்டின்
மருமகள் என்பதை
பேதமின்றி பாருங்கள்
மகளையும் மருமகளையும்
தவிர்த்துக் கொள்ளலாம்
உயிர்ச் சாவுகளையும்
உறவுப் பிரிதலையும்
பெண்ணினத்தை பெண்ணே
இழிவாக நடத்தினால்
பெண்மை எப்படி
தலைநிமிர்ந்து நிற்கும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...