Saturday, October 2, 2010

பெண்ணுக்கு பெண்




சொன்ன பவுணும்பணமும்
இட்டதில் குறைகள்
மாப்பிளை சலுகைகள்
பிடித்து வாங்கல்கள்
சீதன பொருட்கள்
மன நிறைவில்லை
உறவுகளில் சபையில்
உணவு ருசி சர்ச்சைகள்
இட்ட பௌனின்
தரம் பார்த்தல்
மாலைஎந்தி
உயிருள்ள சடமாய்
மேடையில் மணமகள்
முதல் மாசக்கடைசியில்
உயிர்த்தெழுகிறது
விடிந்து அடையும்வரை
வேலைப்பாடுகள்
சிறு குறைகள்
குத்து வார்த்தைகள்
குற்றம் சொல்லி
பழி சுமத்துதல்
சிரிப்பதும் பேசுவதும்
சபை விலக்கு
கணவன் இருந்தும்
தனிமை உறக்கங்கள்
சொந்த அறையிலும் ஐயத்துடன்
உறவுப் பரிமாற்றம்
அவ்வபோது சுரண்டும்
நாத்தனார் உறவுகள்
வாழ வந்தவளும்
வாழ சென்றவளும்
நித்தம் சந்திக்கிற
அத்தைஎன்னும் பெண்மையின்
அதிகார ஆட்சிமுறைகள்
கோர அவதாரங்கள்
ஈனச் செயல்களால்
குறைத்துக் கொள்கிறார்கள்
விளக்கேற்ற வந்த
பெண்மைகளின் நெஞ்சில்
அன்பையும் பரிவையும்
வந்த மருமகளை
மதிகெட்டு நடத்துகையில்
மறந்து விடக்கூடாது
உன் மகளும்
மாற்றான் வீட்டின்
மருமகள் என்பதை
பேதமின்றி பாருங்கள்
மகளையும் மருமகளையும்
தவிர்த்துக் கொள்ளலாம்
உயிர்ச் சாவுகளையும்
உறவுப் பிரிதலையும்
பெண்ணினத்தை பெண்ணே
இழிவாக நடத்தினால்
பெண்மை எப்படி
தலைநிமிர்ந்து நிற்கும்

2 comments:

  1. வினோத் கன்னியாகுமரிOctober 4, 2010 at 9:22 AM

    உன் மகளும்
    மாற்றான் வீட்டின்
    மருமகள் என்பதை

    தானும் மருமகள், தன் மகளும் மருமகள் என்பதை எத்தனை பேர் யோசிக்கிறார்கள்..

    ஒவ்வொரு பெண்ணும் மாமியாரை அம்மா என்றழைக்க ஆரம்பித்தாலே போதும். கொஞ்சம் கொஞ்சமாக வில்லி என்ற போர்வை மாய்ந்துவிடும்.

    சமுதாய தாக்கத்தை ஏற்படுத்தும் கவிதை.. வாழ்ததுகள்

    ReplyDelete
  2. தமிழ்த்தோட்டம்October 4, 2010 at 2:09 PM

    முதலாவது வரதட்சனை கொடுமை ஒளியவேண்டும்

    ரொம்ப அருமையா கவி வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள் தோழர் செய்யது அலி நன்றி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...