Wednesday, October 6, 2010

புது உறவுகளின் இரு காயங்கள்




புதுத் தம்பதிகளின்
முதலிரவு மஞ்சத்தில்
இருகாயங்கள் பற்றிய சர்ச்சை
மனையாளியின் மார்பில்
தீயால் சுட்ட தழும்பு
மன்னவனின் இடக்கரத்தின்
 நடுப்பகுதியில் கூர்மை கத்தியின்
கீறல்களின் பாடுகள்
சில கடித குறிப்புகளும்
சமூகத்தாலும் ஈன்றவர்களாலும்
சிதைக்கப்பட்ட முந்திய உறவின்
அழியா சின்னங்கள் அது
இரவில் ஒரு கனவுகண்டோம்
பகலில் அது கலைந்து போனது
நிஜங்களில் இனி
நாம் இருவர் மட்டும்
உறவுகளால் பிரிக்கப்பட்டும்
நம் உள்ளங்களில் உறங்கும்
அவ்மனங்களின் நினைவுகளை
நம் நல் புரிதல்களாலும்
நமக்குள் விதைத்துகொள்ளும்
மாசற்ற தூய அன்பாலும்
ஒருமனதாய் துடைத்தெறிவோம்
நாளைய நம் வாழ்க்கை சிறக்க

3 comments:

  1. வினோத் கன்னியாகுமரிOctober 6, 2010 at 5:25 PM

    யதார்த்தமான கவிதை..

    ReplyDelete
  2. உறவினரால் காயபடுத்த்பட்ட் உறவுகள் உணர்வுகளால் ஒன்றினையட்டும்

    ReplyDelete
  3. மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது.பாரட்டுக்கள் தோளரே

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...