Saturday, October 9, 2010

தனிமைகள்




அம்மாவின் மார்புச்சூடு இன்றி
உறங்கப் பழகிய வயதில்
பால்ய தனிமைகளின் வருகை
பிடித்த விளையாட்டுப்பொருளை
யாருக்கும் காட்டாமல் ஒளிந்துகொண்டு
தனிமையில் விளையாடுவது
அம்மாவின் சில கண்டிப்புகளில்
சிறு கண்ணீரும் வாடியமுகமுமாய்
மூலையில் பிடிவாத தனிமை
காரணமின்றி வந்து போகும்
சில பால்யத் தனிமைகளும்
நண்பர்கள் காதல்
பந்தங்கள் உறவுகள்
இவைகள் இல்லாத தனிமைகளும்
வந்த பிறகு நாமாக ஏற்ப்படுத்தும்
சுயநல தனிமைகளும்
கல்வி வேலை இல்லாத தனிமைகளும்
கிடைத்தபின் அதன் ஆதிக்கத்தால்
மனம் நிலைகுலைந்த தனிமைகளும்
பிரச்சனைகளின் முடிச்சுக்களை
அவிழ்க்க ஏற்படுத்தும் தனிமைகளும்
ஆக்கமான தீர்மானங்கள் எடுக்க
தன்னிலை தனிமைகளும்
வாழ்கையில் துரத்தி வருகிற
இன்ப துன்ப தருணங்களை
எதிர்கொண்டு அதில் பயணிக்க
அவ்வப்போது எடுத்துக் கொள்ளும்
சில அவசரத் தனிமைகளும்
மதிகெட்டு சுய மரணத்திற்கு
வித்திடுகிற தனிமைகளும்
புது வாழ்க்கைக்கு நம்மை
திரும்பி அழைத்து வருகிற
தெளிவான நல் தனிமைகளும்
கருவறையில் துடங்குகிற
நம் முதல் தனிமை
ஆத்மா பிரிந்த வெற்றுடலின்
மயான பயணம்வரை
பிதொடர்ந்து வருகிறது
 தனிமை தருணங்களை
மிருதுவாகவும் அமைதியாகவும்
நல் எண்ணங்கள் கொண்டு
கையாளுகையில்
வாழ்கையை உயர்த்துகிற
புதிய சிந்தனைகள்
உயிர்த்தெழுகிறது

3 comments:

  1. உங்கள் கவிதை அருமை தோழரே. தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்

    ReplyDelete
  2. சங்கவிOctober 10, 2010 at 8:18 AM

    உறுக்கமான வரிகள் அருமை தோழரே

    ReplyDelete
  3. வினோத் கன்னியாகுமரிOctober 11, 2010 at 9:30 AM

    வாவ் வித்தியாசமா இருக்கு

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...