Tuesday, October 12, 2010

ஒரு காதல் கதை
நண்பனின் திருமணம்
மணத்தோழனாக நான்
அரங்கேறிய திருமணத்தின்
சூடுதணிந்த ஏழாம் நாள்
ஒரு துலைபேசி அழைப்பு
அதில் நண்பனின் குரல்
என் மனைவிவின் தோழிக்கு
உன்னை பிடித்திருக்காம்
உன் பதிலைச்சொல் என்றான்
பருவமலர் தளிர்கின்ற
இருபதின் காளை வயதை
அச்செய்தி சற்று எனக்குள்
சலனம் செய்தது
சிறிய மௌனத்திற்குப் பிறகு
அவளின் புகைப்படத்துடன்
ஒரு அறிமுக குறிப்பு
எழுதி அனுப்பச் சொல்
என்று பதிலழித்தேன்
ஒரு வாரத்தின் இறுதியில்
உனக்கு ஒரு கடிதமிருக்கு
என் பெயரை அழைத்தபடி
வாடகை வீட்டின் முதலாளியம்மா
அனுப்புனரில் அவள் பெயர்
 எழுதி இருந்தது
ஆவலுடன் அம்மடலைப் பிரித்தேன்
புகைப்படம் தாங்கிய ஒருகடிதம்
பெயர் வயது படிப்பு என்று
அவளின் சில விபரங்கள்
நிறைய பேசுபவள்
எழுதக்கூடியவள் என்பதை
நான் உணர்ந்தேன்
எட்டுபக்கங்கள் கொண்ட
அவள் எழுத்துக்களில்
மண மேடையில்
என் செய்கைகளையும்
சில குறும்புகளையும்
பதிவு செய்திருந்தாள்
என் நினைவுகளால்
உறக்கமில்லாத இரவுகளையும்
தன் விருப்பத்தை
வெளியே சொல்லமுடியாமல்
தவித்த தருணங்களையும்
வெளிப்படுத்தி இருந்தாள்
பட்டுப் பாவாடை சட்டை
கூந்தலில் மல்லிகைப் பூவும்
பௌடர்பூசிய முகமுமாய்
பத்து வயது புகைப்படம்
அதில் சிறு குறிப்பும்
கடிதத்தின் முடிவில்
அவள் சுமக்கும் பதினைந்தாம்
பருவ வயதின் உணர்வுகளை
என்னால் உணர முடிந்தது
நீண்ட மௌனம் துடர்ந்தது
மறு கடிதம் பற்றிய
ஆழ்ந்த யோசனைகள்
ஒரு இலட்சியப் பயணத்தின்
ஆரம்ப நிலையில் நான்
நடுநிலைப் பள்ளிப்படிப்பில் அவள்
சமூகம் கற்றுக்கொடுத்ததும்
அறிஞர்கள் எழுதி வைத்ததும்
கற்று உணர்ந்த நான்
இளமையின் சபல ஆர்வங்களால்
வாழ்கையை சிதைக்க விருப்பமில்லை
என்னுடனான அவளின் காதல்
வெறும் ஈர்ப்பா இல்லை
ஆழமான காதலா என்று
அறிந்து கொள்ளவும்
அவளின் மனம் அறியவும்
நம் பேசிக்கொள்வோம் கடிதங்களில்
சந்தித்துக் கொள்வோம் கனவுகளில்
நேரிட்ட பார்வைகளுக்கும்
ஒன்றிணைந்த பழகுதலுக்கும்
தடை சட்டம் இயற்றினேன்
ஐந்து வருட காலஅவகாசமும்
எடுத்துக் கொள்ளவோம்
அதுவரை தொடரட்டும்
உனது பள்ளிப் படிப்பும்
என் இலச்சியம் பயணமும்
அவகாச கால முடிவில்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
நம் காதல் இருந்தால்
பெரியோர்களின் முன்னிலையில்
திருமணம் செய்துகொள்வோம்
எனது இந்த பதில்கடிதத்திற்கு
மறுவாரமே பதில் வந்தது
எல்லாத்திற்கும் ஒப்புக்கொண்டேன்
உங்களையும் நம் காதலையும்
மதிக்கிறேன் என்றும்
எனக்காக காத்திருப்பேன்
என்றும் பதிவு செய்திருந்தாள்
ஒருவருடம் கடிதங்கள் வழி
உறவுகள் துடர்ந்தது
சில மாதப்போக்கில்
கடிதங்களின் வரவு நின்றது
இரண்டாம் வருஷத்தின் இறுதியில்
ஊர் சென்றிருந்தேன்
பால்ய நண்பர்களிடம்
அவளைப்பற்றி விசாரித்தேன்
சில அவதூறு செய்திகளால்
காதை நிரப்பினார்கள் நண்பர்கள்
உண்மை பொய் உணரமுடியவில்லை
அவள் விலாசம் தேடிய
பயண அலைச்சலில்
படிப்பு முடிந்தவள்
குடும்பத்தோடு வேற ஊர்
போய்விட்டதாக பக்கத்து வீட்டு
அவள் உறவுகள் சொன்னார்கள்
அவளுக்கு திருமணம் முடிந்துவிட்டது
நீ அவளை மறந்து விடு
நண்பர்களிள் ஆறுதல்கள்
ஏமாற்றத்துடன் திரும்பினேன்
இருவரின் தளிர் பருவம்
நாளைய நல் எதிர்காலம்
உறவுக்கு வேலியிட்டது தவறா
என் எண்ணம் தவறா
கால அவகாசம் ஒரு கூரமா
காதலை கொச்சைப்படுத்தும் சமூகத்தில்
என் காதல் தவறா
எனக்குள் எழுந்த சில
கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை
என்றாவது ஒரு நாள்
அவளின் சந்திப்பை எதிர்பார்த்தேன்
சில மாதங்கள் நீடித்தது
அவளைப் பற்றிய நினைவுகள்
ஒரு பகல் கனவுபோல்
இருந்தது அவளுடனான காதல்
காலம் உருண்டோடியது
துடர்ந்த இலச்சியப் பயணத்தில்
மறந்து போன அவளை
அவ்வப்போது நினைவுப்படுத்தியது
அவள் கடிதங்களும் புகைப்படமும்
சில குடும்ப காரங்களால்
இலச்சிய பயணமும் கைவிடப்பட்டது
குடும்ப உறவுகளின் கட்டளைக்கிணங்கி
திரவியம் தேடி
கடல்கடந்த பயணம்
நிறைய மனிதர்கள்
விசித்திர அனுபவங்கள்
காலம் மீண்டும் ஓடியது
ஒரு மாலை தருணம்
என் கைபேசி துடித்தது
உனக்கு பெண் பார்த்திருக்கோம்
அம்மாவின் குரல்
காலஓட்டம் நினைவுப் படுத்தியது
என் திருமண வயதை
இதுவரை கடந்துபோன
நிறைய பெண்களிடத்தில்
நட்பு வேலியிட்டு பழகிவந்ததால்
வெற்றிடமாய் இருந்தது மனசு
உறவுக்கார பெண்
என்றோ ஒருமுறை பார்த்திருக்கிறேன்
அவள் பெயரைச் சொன்னார்கள்
ஆச்சிரியமாக இருந்தது
நான் மறந்து போயிருந்த
அவளின் பெயர்
புகைப்படம் அனுப்பிவைத்தார்கள்
குணங்களை பற்றி சொன்னார்கள்
வெறுமையான வாழ்க்கைக்கு
துணையின் தேவையை உணர்ந்தேன்
திருமணப் பந்தல் உயர்த்த
சம்மதம் மூளினேன்
விடுப்பெடுத்துச் சென்றேன்
ஆர்பாடமற்ற திருமணம்
பெரியோர்களின் ஆசியில்
மனஅழகு சாந்த குணம்
பெண்மை நளினங்களும்
அன்பான மனைவி
எனக்குள் சிதைந்து இருந்த
காதலனுக்கும் கவிஞனுக்கும்
மறு பிறவி கொடுத்தாள்
ஒரு தனிமை தருணத்தில்
அவளைப்பற்றி சொன்னேன்
பதில் வார்த்தைகள் இன்றி
தலைகோதி விட்டாள்
உறவுகளிட்ட திருமண பந்தத்தில்
தொடர்கிறது எங்கள்
காதல் பயணம்........


// இது கதையல்ல நிஜம் //

5 comments:

 1. வினோத் கன்னியாகுமரிOctober 13, 2010 at 8:15 AM

  வாழ்க்கையையே கவிதையா வடிச்சிட்டீங்க

  ReplyDelete
 2. சங்கவிOctober 13, 2010 at 8:57 AM

  அருமையான கதையொன்றை அழகிய கவிவரிகளாக்கி தந்த அன்பு நன்பருக்கு அன்புபாராட்டுக்கள்

  ReplyDelete
 3. சூரியன்October 13, 2010 at 8:57 AM

  அழகான வாழ்க்கை வரலாறு ,,,,,,,,,கவிதை

  ReplyDelete
 4. எல்லாருக்கும் முதல் காதல் இருக்கும் என்வாழ்க்கையிலும் காதல் ஒரு பகல் கனவுபோல் வந்து போனதற்கான அடியாளம் இந்தக் கதை(கவிதை )

  உங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...