Tuesday, October 19, 2010

உடல் தின்னும் மிருகம்




கைபேசிகளில் பெண்மைகளின்
உடல் அங்கச் சித்திரம்
ஊரைக்காட்டி உறவு விலைப்பேச்சு
தவணை முறையில் களவாடி
தன் இச்சைக்கு இறையாக்கிறது
உடல் தின்னும் காமமிருகங்கள்
ஊரார் அவதூறு பேசுவார்கள்
வாயடைத்து ஊமையாய் பெண்மை
கௌரவ முகமூடி அணிந்து
ஊருக்குள் நட்டலுடன் உலவுகிறது
உடல் திண்ணி மிருகங்கள்
அக்னி எரிமலைகளாய் பொங்கி
வீதியில் கக்குகிறது வேதனைகளை
பணம் பதவி அதிகாரங்கள்
முகமூடிகளின் பாதுகாப்புக் கவசம்
வேஷி முத்திரை பதிக்க
ஊரும் உறவும் பழிபேச
பெண்மை நாதியற்று வீதியில்
 இனிஒரு தனிமையில்
காம ருசியறிந்த நாய்கள்
பெண் மோப்பமிட்டு வருகையில்
அறுத்து எறிந்துவிடு மர்மத்தை
நாளை ஊர் துடைக்கும்
உன் களங்கத்தை


6 comments:

  1. சங்கவிOctober 20, 2010 at 8:33 AM

    அப்பட்டமான உண்மையை மிகவும் சிறந்த வரிகளில் தந்ததுள்ளீர்கள். தாங்கள் கவிதை ஒவ்வொன்றும் என்னை ப்ரமிக்க வைக்கின்றது மிக அருமை தோழரே.தொடர்ந்து தாருங்கள்

    ReplyDelete
  2. தவணை முறையில் களவாடி
    தன் இச்சைக்கு இறையாக்கிறது
    உடல் தின்னும் காமமிருகங்கள்



    சூப்பரு கொஞ்சம் ஆண்கள் பாராட்டி கவிதா எழுதுங்க பாஸ்

    ReplyDelete
  3. தமிழ்த்தோட்டம்October 20, 2010 at 11:10 AM

    மிகவும் அருமையான உணர்வு பூர்வமான கவி வரிகள் நன்றி செய்யது அலி தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  4. உங்களை மனதார,மகிழ்ச்சியோடு பாரட்டுகிறேன்.பெண்மை உன்னதத்தை நன்றாக உணர்ந்துள்ளீர்.உங்கள் சக ஆண்மக்களும் இது போல் சீக்கிரம் உணர்ந்து கொள்ளட்டும்,இனியாவது.....

    ReplyDelete
  5. valikkattum vaanjai illaadhavargalukku ! manadhil ezhum ennangalellaam kavithayaai vadithaal purangoorum polladha ulagam ! adhanaleye adhiga unmaigal en kavithaigalil karppanaiyaagi vidugindrana !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...