Monday, October 25, 2010

பெண்மையின் மூன்று கேள்விகள்





*தாலிக் கொடி தந்தவனுக்கு
உடை களைந்து தன்
உடல் கொடுக்குகிறாள் என்பதற்காக
அவள் உரிமைகளை பறிப்பதோ


*இருவரின் வயிற்ருப் பசிக்கு
உணவுதர பெற்றவர்கள் இருக்கிறார்கள்
பருவப் பசிக்காக இணைகிறோம்
நீமட்டும் ஏன் கேட்கிறாய்
கூலியாக வரதட்ச்சனையை


*சிலநொடிகளில் கக்கிவிட்டு
கடமை முடிந்ததென்று போகிறாய்
ஏந்திய சுமைகளுக்கும் வலிகளுக்கும்
நான் விலை கேட்டால்
என் செய்வாய்

9 comments:

  1. மிகவும் நியாயமான கேள்விகள்தான் இவைகள் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் முடியாமல் தலைகுனிந்து நிற்கிறது ஆண்மை, மிக அருமை நண்பா

    ReplyDelete
  2. வரதட்சனைவாங்கும் வாங்க இருக்கும் அன்பர்களுக்கு மிகச்சரியா அடி.உண்மையிலே இந்தங்க வரிகளுக்கு பாராட்ட வார்த்தைக்கள் இல்லை நண்பா.ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது.

    ReplyDelete
  3. சவுக்கடி கொடுக்கற மாதிரி கேள்விகள் SYED
    நன்றி உங்கள் கவிதைக்கு

    ReplyDelete
  4. அருமையான படைப்பு
    அற்புதமாய் சொன்னீர்கள்
    இன்றைய சமுதாய பிரச்சினைகள் இவை நன்றி தோழரே

    ReplyDelete
  5. ஆணின் வர்க்கத்திற்கே இது ஒரு சவாலான கேள்வி.....

    ReplyDelete
  6. உரிமை பறிக்காமல் ,வரதட்சணை கேட்காமல்,வலிகளில் பங்கெடுக்கும் ஆண்மைகளும் உலகில் உண்டு.

    ReplyDelete
  7. அந்த வகை ஆண்மைகள் பெரும்பாண்மையாக உயர்ந்தால்

    ஆண் பெண் இடைகளில் பேதம் இருக்காது
    நமால் முடிந்தவை ஊருக்குச் சொல்வோம்
    உணர்பவர்கள் திருந்தினால் நன்று தோழா.

    ReplyDelete
  8. பெண்களை தெய்வமாக வணங்கச் சொல்ல சொல்லவில்லை...
    அவர்கள் பாவப்பட்டவர்கள் என்றும் சொல்ல சொல்லவில்லை...
    முதலில் ஒரு மனிதனாக பாருங்கள்...பேதம் வேண்டாம்..அவர்களையும் சராசரி மனி்தாக வாழவிடுங்கள்....போதும்...

    ReplyDelete
  9. unmaigalil ratham kasiyum sambandhappatavargal idhai padithaal ! kelvigal niyayamaga irundhaal samudaayam nammai savukkaal adikkiradhe?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...