Saturday, October 23, 2010

ஆண்மை காக்கும் பெண்மை




இறைவன் படைத்தஇப்புவியில்
புதுமைகள் தாங்கி நிற்பவைகள்
என் ஆண்மையின்
வலிமையின் அடையாளங்கள்
நொடிப்பொழுதில் வலிமையிழந்து
நிலைகுலைந்து நிற்கிறேன்
உன்னுடனான கட்டில் யுத்தத்தில்
என் தோல்விகளை ஒப்புக்கொள்ள
இன்றும் மனம் மறுக்குகிறது
அதன் காரங்கள் என்ஆண்மை
ஆண்மை நிலை உணர்ந்த
நன்மை பெண்மைகள் நல்கனிவுகளால்
தம் ஆசைகளை தியாகம் செய்து
என் ஆண்மை அடையாளங்களை
தலை நிமிர்த்துகிறது
சில உறவுகளின் புரிதலின்மையால்
மனங்களில் விரிசல் இட்டு
பந்தங்களை முறித்துகொள்கிறது
இரு உறவுகளின் கூடல்களை
அந்தரங்க இரகசியம் என்பார்கள்
அதன் மெய் உணர்ந்தவர்கள்
புவிபோற்றும் பெண்மைகள்
இரகசியங்கள் உடைபட்டால்
கீழ்விழுந்து சிதறிவிடும்
ஆண்மையின் அடையாளங்கள்
பெருந்தன்மை பெண்மைகள்
இன்றும் காத்துவருகிறார்கள்
ஆண்மையின் இரகசியங்களை
புவியாளும் ஆண்மையே
உனையாளும் பெண்மையை
உணர்ந்து கொள்

5 comments:

  1. மிக அருமையா ஆண்மையை உணர்த்துயிருக்கீங்க தோழரே.. தொடரட்டும் உங்கள் கவி மழை

    ReplyDelete
  2. புவிபோற்றும் பெண்மைகள்
    இரகசியங்கள் உடைபட்டால்
    கீழ்விழுந்து சிதறிவிடும்
    ஆண்மையின் அடையாளங்கள்

    இந்த வரிகள் சிறப்பா இருக்கு

    ReplyDelete
  3. சிந்திக்க துாண்டிய சிந்தனை வரிகள் அத்தனையும் ரொம்ப ரொம்ப அருமையான அற்புதமான வரிகள்.அன்புபாராட்டுக்கள்

    ReplyDelete
  4. வரிகளின் ஆதிக்கம் ,வாழ்க்கையை சொல்ல்கிறது .பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. arumai arumai.... ulagasindhanai illaadhu indhakkavithaigalaip padippavargal mudalil aruvaruppaargal piragu aamodhippargal vazhthukkal nanbare !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...