Sunday, October 24, 2010

நகரங்களில் சில காதல்கள்




*முதலில் காதல் செய்வோம்
இருமனம் ஓன்று பட்டால்
திருமணம் பற்றி யோசிப்போம்

*பாதுகாப்பு வேலிக்குள்
அந்தரங்க ஒத்திகைகள்
இருவருக்கும் சேதமின்மை

*ஒன்றாகவாழ்வோம் ஒரு வீட்டில்
திருமணம் இப்பொழுது வேண்டாம்
வாழ்கையை இரசிப்பவர்கள்

*காதலித்து வருஷங்கள் கடந்தும்
நித்தமும் உயிர்த்தெழுகிறது
நீனா நானா தர்க்கங்கள்

*காதலர்களின் உடல்கள்சேர்த்தும்
உள்ளம் சேரவில்லை
பிரிந்தார்கள் நல்ல நண்பர்களாக

*வெட்ட வெளிகளில்
உறவுப் பரிமாற்றம்
உண்மைக் காதலர்கள்

*சில உடல் காதல்கள்
கருச்சிதை மருத்துவமனைகளில்
தொடரும் நீண்ட வரிசைகள்

*எங்களை காப்பற்றுங்கள்
பெற்றவர்களை புறக்கணித்து
காதலர்களின் காவல்நிலைய தஞ்சம்

*நகரங்களின் நாகரீக வளர்ச்சியில்
காதலர்களிடத்தில் குறைந்து வருகிறது
தாடி வளர்க்காத தேவதாசுகளும்
கற்புள்ள பெண்மைகளும்
சில உயிர்ச் சாவுகளும்
இவைகளால் துலைந்து போனது
நம் பண்பாட்டு கலாச்சாரமும்
உறவுகளின் புனிதத் தன்மையும்

8 comments:

  1. இதுவரை இங்கு நான் பார்த்து வரும் காதல்கள் இந்த வகையைச் சேர்ந்தவைகள்தான்! மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள் சையட். எப்படி இவ்வளவு சரியாக எழுத முடிந்தது.. அனுபவமோ!

    ReplyDelete
  2. இல்லை தோழரே...
    அன்பும் பண்பும் களங்கமற்ற நேசமும் பண்பாட்டுக் கலாச்சாரங்கள் நிறைந்த ஒரு சிறு குக்கிராமத்தில் பிறந்த எனக்கு சென்னை போற்ற நகரங்களிலும் ,துபாய் போன்ற மேலை நாட்டு நகரங்களிலும் நான் கற்றுக்கொண்ட அனுபவங்கள்

    ReplyDelete
  3. தொடரட்டும் உங்கள் கவிதை பேரணி .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சிறந்த ஒரு உண்மையை அழகாக முறையில் கவிதைவரிகளாக எடுத்துக்காட்டி உள்ளீர்கள் மிக்க நன்றிதோழரே

    ReplyDelete
  5. காதலில் விழுந்து எழுந்திரும் இடத்தை கவிதை வரிகளில் அருமையாக கூறியுள்ளிர்கள்..

    ReplyDelete
  6. படமும் உங்கள் கவிதையும் அருமை தொடரட்டும் தோட்டத்தில்,உங்கள் பூக்கள்

    ReplyDelete
  7. படமும் உங்கள் கருத்தும் அருமை உங்கள் சமுதாய விழிபுணர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. மிக அருமையாக சமூகத்தில் நடைபெறும் உண்மையை எடுத்து கூறியிருக்கிறீர்கள் நன்றி செய்யது அலி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...