Monday, October 25, 2010

கிராமத்தின் சில துளிகள்




*பூப்பெய்து வருஷம் கடக்கும்முன்
கருசுமக்குக்ம் பள்ளிச் சிறுமிகள்
அவசரத் திருமணங்கள்

*மனசை பரிகொடுத்தாள் காதலனுக்கு
உடல்கொடுத்தாள் கட்டிய கணவனுக்கு
பண்பாட்டு வேலிகள்

*மனக் கற்பை துலைத்துவிட்டு
கட்டிக் காத்து வருகிறார்கள்
பெண்மையையும் ஆண்மையையும்

*கனவுகண்ட மாப்பிளை நெஞ்சுக்குள்
பெற்றவர்கள்கண்ட மாப்பிளை கட்டிலில்
ஊமையாகும் பெண்மைகள்

*கட்டழகு ஆண் ஆனாலும்
தாலி கட்டிய பிறகே
தன் முந்தி விரிப்பாள்

*பூப்பெயிததும் வீட்டில் சிறைபடுபவள்
வெளி உலகம் வருகிறாள்
கணவன் கைபிடித்து

*மனசு கறைப் பட்டால்
கண்ணீர் வீட்டு துடைக்கிறார்கள்
உடல் களங்கப் பட்டால்
உசுரை விட்டு துடைக்கிறார்கள்

*கிராமத்தின் நாகரீக வளர்ச்சி
படிதாண்டிய பெண்மைகளின்
வழி மாறிய பயணம்
தலை குனிகிறது பண்பாடுகள்

7 comments:

  1. மிக அழகாக கூறினீர்கள் நண்பா ஆனால் இதுமாதிரி நிலை அநேகமாக கிராமத்தில் மட்டுமல்ல நகரத்து பெண்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  2. *மனக் கற்பை துலைத்துவிட்டு
    கட்டிக் காத்து வருகிறார்கள்
    பெண்மையையும் ஆண்மையையும்

    மனசு கறைப் பட்டால்
    கண்ணீர் வீட்டு துடைக்கிறார்கள்
    உடல் களங்கப் பட்டால்
    உசுரை விட்டு துடைக்கிறார்கள்


    அழகான கிராமத்து வாழ்க்கையை போன்றே கவிதையும் உள்ள்ளது

    ReplyDelete
  3. நிஜத் துளிகள் இது .பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. அழகான் கிராமத்துப் பெண் ........கவிதைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. நண்பரின் கவித்துவம் அழகு
    எழுத்துக்களை சரியாக பயன்படுத்தினால்
    நன்று. ஏனெனில் தமிழில் ஒரு எழுத்து
    மாறினால் பொருள் மாறுபடும்.

    உங்களின் ரசிகன்.

    ReplyDelete
  6. வரிகள் உண்மை ,
    படம் அழகு .
    தொடரட்டும் ...

    ReplyDelete
  7. வரிகள் உண்மை ,
    படம் அழகு .
    தொடரட்டும் ...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...