Tuesday, October 26, 2010

களவானிகளின் களவுகள்




அது தனக்கு சொந்தமானதல்ல
இருந்தும் அதனை களவாடுகிறார்கள்
நாளிகைகளின் சுமையில்
உடல்களின் உழைப்பில்
சிந்தனை வேர்வை குருதி
இவைகளின் விதைப்பில்
உயிர்த்தேடுக்கிற ஒன்றை
உள்ளம் கூசாமல்
சிந்தை பேதித்து களவாடுகையில்
சிந்தனைகளும் வேர்வைகளும் குருதிகளும்
உன்னுள் சிறுமைப் படுகிறது
மதி மனம் கரம்
கருமை கறை படிக்கிறது
உன் களவாடுகளில்
களவுகளுக்கு பல நியாயங்கள்
நியாயங்கள் களவாடப் பாடுகளில்
சொல்லும் நியாயங்கள் எங்கே

6 comments:

  1. களவும் கற்றுமறப்போம் நண்பரே

    ReplyDelete
  2. அருமையான கவிதை

    ReplyDelete
  3. களவு பற்றி வித்யாசமான கவிதை..
    நன்றி..நண்பரே...
    அருமை..

    ReplyDelete
  4. ரொம்ப அருமையாக உணர்த்தியுள்ளீர்கள் தோழரே

    ReplyDelete
  5. களவானிகள் இனியாவதி திருந்த வேண்டும்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...