Saturday, October 30, 2010

ஆழப்பதிந்த சில கல்வெட்டு




சுனாமி


* உன் அலைகளில் ஒதுங்குகிற
மீன்களை பார்த்திரிக்கிறேன்
முதல் முறையாக உன்மடியில்
மனிதர்களைப் பார்கிறேன்
பிணமாக

*உன்கரை மடியில் உறங்கியிருந்தவர்களை
ஒரு விடியல் பொழுதில்
நிரந்தரமாக உறங்க வைத்தாய்
அதன் உள்ளடக்கம் இன்றும்
புரியா புதிராக

கும்பகோண தீ

*பஞ்சபூதங்களில் மாசற்றவன் என்று
மார்தட்டும் நீ வெட்கப்படு
மலரவேண்டிய மொட்டுமலர்களை
உன் வேட்கையால் கரித்ததற்கு

ஈழத்து படுகொலைகள்

* உரிமை கொடி பிடித்த
எம் ஈழத்து உறவுகளை
கொன்று குவித்து உறைந்த
எங்கள் பச்சை இரத்தத்தில்
அவர்களின் வெற்றி கொடி
வெட்கப்பட்டு தலை குனியட்டும்
கல்தோன்றா மண்தோன்றா
முன்தோன்றிய தமிழும் சில தமிழர்களும்

7 comments:

  1. படத்துடன் சொன்ன விதம் மிகவும் அருமை .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்றென்றும் உள்ளத்தை வி்ட்டு நீங்கா வரிகள்.அன்புநன்றிகள்தோழரே

    ReplyDelete
  3. உங்கள் கவியும் என்றும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டது

    மிகவும் அருமை, தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  4. உங்கள் கல்வெட்டுக்கள் காலத்தால் அழியாத ஒன்று

    ReplyDelete
  5. manathai thotta varikal, paaraattukkal!

    ReplyDelete
  6. seidali, neenga tamizh padicheengala? alladhu veru thuraiya?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...