Sunday, October 31, 2010

காதல் சொல்லும் பொய்கள்




*மின்னல் பெண்ணே
கண்சிமிட்டாதே கருகிவிடுவேன்
உன் அக்னியால்

*என் தோட்டத்தில்
மலராக நீ பூத்தால்
முள்ளாக நான் இருப்பேன்
உனைப் பிறர் தீண்டாமலிருக்க

*உன் இதழ் அழகில்
வெட்கப்பட்டு தலை குனிகிறது
ரோஜா மலர்கள்

*என் காதுகளில் நிரம்பிவழிகிறது
உன் வாய்மொழியின்
தேனிசைத் துளிகள்

*என்னவளே ...
என் இதயம் சுவாசிக்கும்
மூச்சுக் காற்று நீ

*நீ இல்லாத தருணங்களில்
ஒவ்வொரு நாழிகைகளும்
நரக வேதனைகள்

*நிலவு அழகா நீ அழகா
என் இதய மன்றத்தில்
பட்டிமன்றம் நடக்குது

7 comments:

  1. காதலுக்கு பொய்யழகு என்பதை உங்கள் கவிவரியில் இருந்து உணரமுடிகின்றது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கவிதைக்குப் பொய்யழகு - உங்களின் கவிதைகளில் வரும் அழகுப் பொய்களுகும் சிறப்பாகவே உள்ளது!

    ReplyDelete
  3. அழகான மின்னல் பெண் கிடைக்கக் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பொய்யும் ரசிப்பதற்கு தான் காதலில் மட்டும்,கல்யாணம் நடந்து விட்டால் இந்த பொய்யும் உண்மையாகி தான் போகும்,உங்களுக்கு வேறு வழி இல்லை,காதலித்த பெண்னையே மணந்தால்.

    ReplyDelete
  5. இதுவரை காதல் பழக்கம் இல்லை
    ஆனால் இப்பொழுது உண்மைகளை மட்டுமே சொல்லி ஒரு பெண்ணை காதலிக்கிறேன் அது நான் கரம்பிடித்த என் மனைவி

    அதுதான் என்னவளுக்கும் பிடிக்கும்

    சகோதரியின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  6. வாழ்துக்கள் தோழா!உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்தான்.திருமணத்திற்கு பின்னான காதல் இன்னும் அழகானது தான் போல.உங்கள் மகிழ்ச்சி தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்,உங்கள் சகோதரியாக.

    ReplyDelete
  7. ippodhu kaadhal poi pesavillai kadhalargal dhan poi pesithirigiraargal! kaadhalukku arimugavaarthaigale thevai illai nanbare ! poiyum kavithaiyaagum ungalin kaipattaal

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...