*பெற்றவளுக்கு பிள்ளைகளை
வளர்க்க நேரமில்லை
செவிலித் தாய்
*கட்டிய பால் மார்பில்
குழந்தைக்கு புட்டிப் பால்
மார்பு அழகு பேணுதல்
*திருமணத்திற்கு முன்
காதலர்களின் கட்டில் ஒத்திகை
குப்பைத் தொட்டியில் குழந்தை
*ஊடக மேடைகளில்
அரங்கேறும் குழந்தைகள்
ஈன்றவர்களின் புதிய வழிநடத்தல்
*நேற்றுவரை காதலித்தவர்கள்
இன்றவரை கரம் பிடித்தவர்கள்
தொடரும் பட்டியல்கள்
புதிய உறவுக்கலாச்சாரம்
*வயோதியர்களின் மரணம்
செலவுகள் மிச்சம்
புதிய கூட்டல் கணக்கு
அப்பட்டமான உண்மையை கவிவரிகளில் தந்த செய்யத் அலிக்கு அன்புபாராட்டுக்கள்
ReplyDeleteஅடித்தால் போல இருக்கும் உண்மைகள் ... சிறந்த வரிகளில் ........
ReplyDeleteஇன்று என்ன நாள் ... கொஞ்சம் சிந்திப்போம் ....
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html
முக்கிய விடையங்களை வித்தியாசமான வரிகளில் சொன்னீரு்கள் வாழ்த்துகள்
ReplyDeleteசெவிலித் தாய் ஹைக்யு அருமை.
ReplyDeleteஅதன் கீழ் வந்துள்ள ஹைக்யுக்களும் நன்றாக இருக்கிறது.தனி தலைப்புக்கள் கொடுத்து இருக்கலாம்.
உங்கள் வருகையை வரவேற்கிறோம்.சையதுஅலி அவர்களே.
*ஊடக மேடைகளில்
ReplyDeleteஅரங்கேறும் குழந்தைகள்
ஈன்றவர்களின் புதிய வழிநடத்தல்
........இது காலத்திற்கேற்ற கவிதையானது. வாழ்த்துக்கள்.
அருமையான சிறு கவிதைகள்...
ReplyDelete