Monday, October 18, 2010

பெண் ஜென்மம்





தளிரிட்ட கருசிதைந்து
கரும்சிவப்புக் குருதிகளாக
மாதத்தில் மூன்று நாட்கள்
என் யோனி கக்குகையில்
உயிருதிரும் ரணவேதனையிலும்
தண்ணீர் நரம்பிய மண்குடம்
உடைபட்டு சிதறுவதைபோல்
நூலிழையில் மூச்சுக் காத்துமாய்
மரணத்தை முத்தமிட்டு
ஐவிரு மாதச் சுமையை
இறக்கிவைக்கும் தருணங்களிலும்
ஒருகணம் நினைத்ததுண்டு
இறைவா ஏன் படைத்தாய்
வேதனைகள் சுமக்கும்
இந்த பெண் ஜென்மத்தை

11 comments:

  1. சங்கவிOctober 18, 2010 at 5:06 PM

    உண்மையை உறுக்கமானவரிகளில் தந்துள்ளீர்கள்.உண்மையில் ஒரு பெண்னுடைய தியாகத்தை அழகாக சித்தரித்துகாட்டியுள்ளீர்கள் உங்கள் கவிவரியில் நான் சிந்திக்கலானேன் மிக அருமைதோழரே.அன்புபாராட்டுக்கள்

    ReplyDelete
  2. Aslamualaikkum
    anna kavidhaiy punaiya aayiram genres undu ikkavidhai vidhiyaasamanadhu.vaalthukkal.
    Mokkaiyana
    Kaadhal kavidhaigalaivida ithu nandragave ulladhu

    ReplyDelete
  3. Kaa Na KalyanasundaramOctober 19, 2010 at 8:05 AM

    பிள்ளைபெறும் காலங்களில் பெண்கள் படும் வேதனை அளவிடமுடியாது. அதிலும் பிரசவித்து ஒரு குழந்தையை தரும் நேரம் அவள் புனர்ஜென்மம் எடுக்கிறாள். அதனால்தான் மேலைநாடுகளில் கணவன்மார்களை பிரசவ நேரத்தில் அனுமதிப்பதுண்டு மருத்துவர்கள். ஆண்களும் அந்த இன்னலைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

    இருப்பினும் பெண்கள் இந்த துன்பத்தையும் சுகமான சுமை என்றுதான் இன்றளவும் கூறுகிறார்கள். வாழ்க பெண்மை. வளர்க மனிதநேயம்.

    வாழ்த்துக்கள் சயேத் அலி அவர்களே.

    ReplyDelete
  4. நண்பரே நன்று! பெண்ணியம் பாராட்டபட வேண்டும்! அதில் ஒரு உபாதையை தெரிவிக்காமல் தவிர்த்திருக்கலாம்! இனியேனும் உமது எழுதுகோல் உதிரம் தவிர்க்கட்டும்!

    ReplyDelete
  5. ஆழமான அதிலும் மிக உண்னை யான நிஜம் நண்பா

    ReplyDelete
  6. உதயசுதாOctober 19, 2010 at 9:22 AM

    பெண்களோட வேதனைய,அந்த நேரத்தில் எங்களோட எண்ணத்தை உங்கள் கவிதையில் சொன்னதுக்கு உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சையத்

    ReplyDelete
  7. வினோத் கன்னியாகுமரிOctober 19, 2010 at 10:19 AM

    இது வேதனை இல்லை
    பெண்ணிற்கே உள்ள சிறப்பு

    ReplyDelete
  8. இது எங்களுக்கு வேதனை அல்ல,எங்கள் பாக்கியம்.ஆனால் அதை புரிந்துக்கொள்ளாத ஆண்ஜென்மங்களால் தான் எங்களுக்கு வேதனை.
    அருமையான கவிதை தோழா!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. " பெண்மையின் வலிகள் பெண்மையின் பாக்கியம்"

    பெண்மையின் மகத்துவம் உணர்ந்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்

    "தலைவனுடனான தனிமை தருணங்களில்
    காதல் பேசும் நாழிகைகளில்
    உங்கள் உணர்வுகளையும் சொல்லுங்கள்
    ஆண்மைகள் புரிந்துகொள்ளட்டும்"

    உங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  10. கண்டிப்பாக,னீங்கள் என் கவிதைய படித்தீர்களா?என் கடன் பணி செய்து கிடப்பதே!
    உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்தான்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...