Monday, October 25, 2010

தவறி விழுந்த சொல்


வாய்தவறி சொன்ன வார்த்த
முள்ளாய் பெத்தமனச குத்திட
தாய் பேசாத நாட்கள்
கஞ்சித் தண்ணி இறங்கல
இரவுல கண்ணுகள் மூடல
புகைஞ்சு புழுங்கும் மனசுமாய்
நிலைகுலைஞ்சு திரிகிறேன்
எனை பேசச் சொல்லி
அழகு பார்த்த தாயே
எந்த தண்ணீர்கொண்டு கழுவுவேன்
உனைத் திட்டிய இந்தவாயை

10 comments:

  1. பெற்ற மனம் பித்து...
    பிள்ளை மனம் கல்லு....

    ReplyDelete
  2. அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

    ReplyDelete
  3. அருமை ...இனி மேல் தவற மாடீர்கள் தாய் மனசு அல்லவா பொறுத்துக் கொள்ளும்.
    தன்னை ஈந்தவள் ( கொடுத்தவள்) தாய்

    ReplyDelete
  4. சகோதரி என் தாயை நான் இதுவரை திட்டியதில்லை
    சிலர் தாயை திட்டிவிட்டு அதைச் சொல்லி மிகவும் வருத்தப்படுவார்கள்
    மரணத்தை முத்தமிட்டு நம்மை ஈன்றெடுக்கும் தாயை கடும் சொற்களால் திட்டும் அந்த நண்பர்களுக்காக எழுதியது

    ReplyDelete
  5. வைகையில ஊர்முழுக
    வல்லுரும் சேர்தெலுக
    கைப்பிடியா கூட்டி வந்த
    கரைசேர்த்து விட்டவளே
    எனக்கு ஒன்று ஆனது என்னா
    உனக்குவேறு பிள்ளை உண்டு
    உனக்கு ஒன்று ஆனது என்னா
    எனக்குவேறு தாய் இருக்கா(வைரமுத்துவரிகள்)


    உருக்கமான உங்கள் கவிதைவரிகள் என்னை கண்கலங்க வைத்து நண்பா.ரொம்ப அருமை.தொடருங்கள் தோழரே

    ReplyDelete
  6. நெல்லை கொட்ட்டினா அள்ளிடலாம் ஆனா
    சொல்ல கொட்டினா அல்ல முடியாது - இது யாரோ சொன்னது.

    முள்ளு குத்தினா தாங்கலாம் ஆனா
    சொல்லு குத்தினா தாங்கமுடியாது - இது சையதலி சொன்னது (இங்கே பின்னூட்டத்தில் பதிவது பிச்ச!)

    ReplyDelete
  7. உண்மையை உணர்த்தும் வரிகள்...
    கவிதையாய்... அருமை..நண்பரே.

    ReplyDelete
  8. பெற்றோருக்கும், பெரியோர்களுக்கும் மரியாதை அளிக்கும் மனப்பக்குவத்தை எந்தச் சூழ்நிலையிலும் விட்டு விடக் கூடாது!

    கவிதை அருமை சையட்!

    ReplyDelete
  9. அருமை தோழரே .தொடரட்டும் உங்கள் கவிதை பாணி

    ReplyDelete
  10. தாயினும் மேலான அன்பு வேறு என்ன இருக்கிறது மிகவும் அருமை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...