Tuesday, November 2, 2010

உறவுகளைத் தேடியபயணம்



திரவியம் தேடும் மனிதர்களின்
உறவுகளற்ற தூரப் பயணங்கள்
உறவுகளில் அரவணைப்பில் சிலபருவங்கள்
படிதாண்டிய தனிமைப் பயணங்களில்
நட்பு கைகோர்க்கும் சகபயணிகள்
சந்தோஷ தருணகளில்
ஓன்று கூடிய புன்னகைகள்
துயரங்களின்  தருணங்களில்
ஆறுதல் தோள்கொடுப்பு
சிறு சிறு பிணக்கங்களில்
மௌனமான தருணங்கள்
இரத்த பந்தமும் இல்லை
உற்ற உறவும் இல்லை
இருந்தும் அவைகளைத் தாண்டி நிக்கிறது
நம் சகபயணிகளின் நல்லுறவு
திரவியம் தேடிய நெட்டோட்டம்
சிறு விடுப்பில் களைப்பார
சகபயணிகளின் புன்னகை வழியனுப்பில்
இரத்த உறவுகளைத் தேடியபயணம்


//ஒரு சிறு விடுப்பில் தாயகம் செல்கிறேன் என் கணினி தோழர்கள் ,மற்றும் தோழிகளுக்கு "என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்" ஒற்றுமையும் புன்னகையும் தான் மனித நேயம் அதனை நாம் என்றும் கடைபிடிப்போம் உங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் மீண்டும் சிந்திப்போம் என் இனியவர்களே //

3 comments:

  1. கவிதை நன்று. நல்லபடியாக ஊர்சென்று வாருங்கள்.

    ReplyDelete
  2. நல்லபடியாக விடுமுறை முடித்து வாருங்கள் syedali

    ReplyDelete
  3. பயணம் சிறக்கட்டும். விடுமுறையை இனிதாக கழியுங்கள்

    தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...