Wednesday, December 8, 2010

பிரிவின் ரணம்

விடுப்பின் நாழிகையின் ஆயுள்
மரணிக்க சில வினாடிகள்
பிரிவின் ரணம் அறிந்து 
இரு  உறவுகளின்
உள்மனதின் ஓசையற்ற அழுகை
பெருக்கெடுத்த ஊற்று  நீரைப்போல்
விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த்துளிகள் 
மௌனம் வார்த்தைகளை சிறையிட  
இதழில் ஈரப்பதம் உலர்ந்து
சிவந்து  வாடிய முகத்தில்
இரவல் புன்னகை 
இறுகி  பற்றிப்பிடித்திருந்த 
என்னவளின் கரங்களுக்கு 
இடைவெளியிட்டது
விடுப்பின் இறுதி விடாடி 
இரத்த உறவுகளின் புன்னகை 
வழியனுப்பில்  மீண்டும் ஒரு
திரவியம்  தேடிய  பயணம்

9 comments:

  1. அசத்துங்கள் தோழரே .அருமை .

    பிரிவியின் நிலை சொல்லும் கவிதை உண்மை .

    ReplyDelete
  2. மீண்டும் ஒரு
    திரவியம் தேடிய பயணம்/...................

    ..பிரிவின் நிலை சொல்லும் கவிதை உண்மை

    ReplyDelete
  3. ஒன்றைப்பெற ஒன்றை இழப்பது அவசியமாகிவிடுகிறது...

    குடும்பமே சந்தோஷத்துடனிருக்க தன்னை பலி கொடுப்பதற்கு தயார் செய்துக்கொள்கிறது...

    ஆனால் மனம்? தன்னை நம்பி வந்த இணை? ஒன்றை ஒன்று விட்டுப்பிரிய நேரிடும் அந்த தருணத்தில் துடிக்கும் துடிப்பு பிரிவின் பயங்கரம் இனி எத்தனை வருடம் கழித்து பார்க்கப்போகிறோம் என்ற கவலை இதெல்லாமே கவிதையில் அழகாய் சொல்லி மனதை கனமாக்கிட்டீங்க சையத் அலி....

    அன்பு பாராட்டுக்கள்பா...

    ReplyDelete
  4. ரொம்ப உருக்கமான வரிகள் அருமைதோழரே.

    தோழரே உங்களை நீண்ட நாளாக தளத்தில்காணவில்லையோ ஏதும் வருத்தம்களா அல்லது வேலைப்பலுக்கலா அல்லது வேறு ஏதும் பிறச்சினைகளா தோழா.உங்களை கானாமல் ரொம்ப கவலையாக இருந்தது

    ReplyDelete
  5. சகோதரனின் அன்புக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்

    நான் ஒருமாத விடுமுறைக்கு தாயகம் சென்று இருந்தேன்
    உறவுகளைத் தேடிய பயணம் என்ற கிறுக்கலில் என் பயணம் பற்றி எழுதியுள்ளேன்

    விடுப்பு முடிந்து உறவுகளைப் பிரிந்து மீண்டும் திரவியம் தேடி
    கடல் கடந்து வந்த பின் கிறுக்கியது இந்த பிரிவின் ரணம்

    உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி

    ReplyDelete
  6. தமிழ்த்தோட்டம் (யூஜின்)December 11, 2010 at 9:23 AM

    உங்கள் பிரிவின் வருத்தங்கள் புரிகிறது நண்பரே..

    உங்கள் பிரிவின் வலிகள் அனைத்தையும் மிகவும் அருமையாக சொல்லியிருக்கீங்க

    அன்பின் வலி பிரிவின் போது தான் தெரியும்..

    ReplyDelete
  7. உண்மையான நிகழ்வு

    ReplyDelete
  8. உள்மனதின் ஓசையற்ற அழுகை
    பெருக்கெடுத்த ஊற்று நீரைப்போல்
    விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த்துளிகள்
    மௌனம் வார்த்தைகளை சிறையிட
    இதழில் ஈரப்பதம் உலர்ந்து
    சிவந்து வாடிய முகத்தில்
    இரவல் புன்னகை
    இறுகி பற்றிப்பிடித்திருந்த
    என்னவளின் கரங்களுக்கு
    இடைவெளியிட்டது


    appappa eppadiyellaam oru sindhanai ! appadiye aazhmanadhil thallivittaarpol irukkiradhu ! azhagaana varigal !

    ReplyDelete
  9. உள்மனதின் ஓசையற்ற அழுகை
    பெருக்கெடுத்த ஊற்று நீரைப்போல்
    விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த்துளிகள்
    மௌனம் வார்த்தைகளை சிறையிட
    இதழில் ஈரப்பதம் உலர்ந்து
    சிவந்து வாடிய முகத்தில்
    இரவல் புன்னகை
    இறுகி பற்றிப்பிடித்திருந்த
    என்னவளின் கரங்களுக்கு
    இடைவெளியிட்டது


    appappa eppadiyellaam oru sindhanai ! appadiye aazhmanadhil thallivittaarpol irukkiradhu ! azhagaana varigal !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...