Monday, December 13, 2010

அகப்பார்வை




*என்னை பார் யோகம்வரும்
கண்ணாடி சில்லுக்குள்
கழுதையின் சித்திரம்
நித்தமும் கணிகாணும்
சலவைத் தொழிலாளிக்கு
 அளுக்கு துணி வெளுத்தாலே
அன்றைய பசிக்கு உணவு

*வீட்டின் மேற்கூரையில்
பசிக்கு உணவுகேட்டு
காக்காவின் கரைச்சல்
உள்ளிலிருந்து ஒரு குரல்
யாரோ விருந்தாளி வராங்க

*பசிக்கு உணவு கிடைத்ததும்
 துணையை அழைத்தது பல்லி
எதோ பேசிக்கொண்டு இருந்த
இருவரில் ஒருவர்
என் வாத்தைகள் உணமையானது
இதோ கெவிளிச் சத்தம்

*எலியை பிடிக்கும் அவசரத்தில்
குறுக்கே ஓடியது பூனை
சகுனமே சரி இல்லை
வீட்டுக்கு திரும்பினார்கள்
எங்கோ புறப்பட்டு சென்றவர்கள்

5 comments:

  1. அழகிய உண்மை வரிகள், நண்பரே, உங்கள் உணர்வுபூர்வமான சிந்தனை அருமை

    ReplyDelete
  2. எளிமையான வரிகளில் ஒரு நல்ல கவிதை.

    ReplyDelete
  3. அழகான வரிகள்..

    நல்லா இருக்குங்க

    ReplyDelete
  4. நன்றி தமிழ் தோட்டம்
    நன்றி ஒ .நூருல் அமீன்
    நன்றி அரசன்

    உண்கண் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. manidhargalukku mattume magathaana oru vishayam sagunam parthu saavadippadhu! mirugangalum paarkkath thodanginaal therindhuvidum ivargalin nilaimai ! arumai thozhare !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...