Wednesday, December 15, 2010

தொட்டால் சிணுங்கி




பள்ளிக்குச் செல்லும்
ஒத்தையடி பாதைகளில்
தொட்டால் சுருங்கும்செடியை
தொட்டு விளையாடியது
இதமான பால்ய தருணங்கள்
உறவாடும் மனித சமூகத்தில்
தொடும்முன்னே வாடும்
தொட்டால் சுருங்கி மனிதர்கள்
மன வேதனை தருணங்கள்

6 comments:

  1. என்ன செய்வது குழந்தையாய் இருக்கும்போது நல்லது மட்டுமே செய்ய தெரிந்தவர்கள் நல்லதை மட்டுமே பேச தெரிந்தவர்கள்... வளர்ந்தப்பின் நல்லவை மறந்து சுயநலமும் பொய்யும் ஏமாற்றும் பெருகி பணம் இருப்போரிடம் மட்டுமே உறவை வைத்துக்கொள்ள நினைக்கும் சொந்தங்கள் இப்படி நிறைய காரணங்களால் மனம் நொறுங்கி ஒதுங்கி விடுகிறார்கள்......

    அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் சையத் அலி...

    ReplyDelete
  2. யாரைத்தொட்டீங்க, உண்மையைச்சொல்லுங்க

    காதல் கவிதை மாதிரி இருக்கு

    ReplyDelete
  3. காதல் கவிதை இல்லை நண்பா
    நம்முடன் உறவாடும் சகமனிதர்கள்
    உண்மையை உணராமல் தொட்டாச் சிணுங்கிபோல்
    தங்களின் உள்ளங்களை சுருக்கிக் கொள்கிறார்கள்
    அதனால் மனம் ரணமாகிய சில தருணங்கள்

    ReplyDelete
  4. தற்போதுள்ள வாழ்க்கை முறை அப்படி. யாரையும் குறை கூற முடியாது. சரிதானே நன் கூறுவதும்

    ReplyDelete
  5. என்ன உவமை
    என்ன எடுத்துக்காட்டு
    எல்லாம் செயற்கை உணவாலே...

    ReplyDelete
  6. நீங்கள் சொல்ல்வது உண்மை ஆனால் சில மனிதர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்கிறார்கள் எந்தவிதத்தில் நியாயம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...