Sunday, December 19, 2010

ஆயுட்காலம்




கடமைகளும் சேவைகளும்
முடிந்த பின்னும்
நீளும் ஆயுட்காலம்

நீண்ட ஆயுளுடன் வாழ்க
யார்சொன்ன வாய்மொழியோ
நோய்களால் சீழ்பிடித்த
உடல் உறுப்புக்களும்
உயிர்தின்னும் மருந்துகளும்

சுய உதவியற்று
மூன்றாம் கைநாடிய
ரணமான நாழிகைகள்
ஊருக்கு வெளிச்சமிடுகிறது
மதியும் மனமும் இழைத்த
பாவங்களில்  உடல்பங்கை

இறைவனால் வெறுக்கப்பட்ட
ஜென்மமாக இருக்குமோ
பருவம் உதிர்ந்தும்
தொடர்கிறது ஆயுட்காலம்

என்று வந்து சேரும்
இவ்நரக வாழ்கைலிருந்து
முக்தி பெரும் மரணம்

11 comments:

  1. அருமை தோழரே உங்கள் கவிதை .தொடருங்கள் .தோட்டத்தை
    அலங்கரிக்கட்டும் உங்கள் கவிதை

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க .. வலிகள் நிறைந்த வரிகள் ...
    பூக்கட்டும் உங்கள் கவிபூக்கள்..

    ReplyDelete
  3. கவி கவிதாDecember 20, 2010 at 11:44 AM

    வாசிக்கும் போதே வாதையாக இருக்கிறது. கவிதை வலி தருகிறது

    ReplyDelete
  4. நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று வாழ்த்துபவர்களும் வாழ நினைப்பவர்களும்
    ஒன்றை மறந்து போகிறார்கள் வாழும் அந்த நாழிகைகளின் உண்மையான ரணத்தை

    உங்கள் வாசித்தலுக்கு நன்றி தோழி

    ReplyDelete
  5. அருமை. என்னைப் போன்ற வயது ஆகிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு முதியவரின் நினப்புத்தான் இது. மற்றவருக்கு பாரமாகிவிடக்கூடாது என்ற ஒரே கவலைதான் ஒவ்வொரு முதியவரின் ஆசை.

    ReplyDelete
  6. தாங்களின் வெளிப்படையான கருத்துக்கு என் கனிவான வணக்கங்கள்

    ReplyDelete
  7. சார் நல்ல பதிவு ... தமிழ்தோட்டதிலும் பார்த்தேன் .. மிகவும் அருமை ....

    ReplyDelete
  8. வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் மூத்த குடிமக்களின் கோணத்தில் புனையப்பட்ட வித்தியாசமான கவிதை..

    ஒரு நல்ல கவிஞனுக்கு கரு எங்கிருந்தும் கிடைக்கலாம் என்பதை உண்மையாக்கிய சையது அலிக்கு பாராட்டுகள்..

    ReplyDelete
  9. வயதானவர்களை பெருசு என்று கூபிடுபவர்களை சற்று சிந்திக்க வைக்கும் கவிதை

    ReplyDelete
  10. வயதானவர்களை பெருசு என்று கூபிடுபவர்களை சற்று சிந்திக்க வைக்கும் கவிதை

    ReplyDelete
  11. kandippaaga unaravendum en ammaavin annangalukku ! azhugaiye varugiradhu idhaipparthadhum ! unmaigal kasakkum enbadhu therindha vishayam dhane ?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...