Wednesday, December 22, 2010

முகச்சாயம்




உரிமைகள் மறுக்கப்பட்டும்
உடமைகளும் உயிர்களும்
நிலையற்று ஊசலாடுகிறது
காசில்லாதவனின் வாழ்க்கை

வறுமைப் பிச்சைப் பாத்திரத்தில்
அரசு இடும் சலுகைகளில்
வெட்கமின்றி கையிட்டு அள்ளி
சுக வாழ்க்கை வாழுகிறார்கள்
உயர்த்துவோம் என்று வாக்களித்து
எங்களின் வாக்குகளில் உயர்ந்த
மடிப்பு சுருங்காத கதர்சட்டைகள்

நாற்காலிகளின் அதிகாரத்திற்கு
அடிபணிந்து நிற்கிறார்கள்
சமூகத்தின் அறிவு ஜீவிகள்

மேடைகூத்தை காணவந்த
கூட்டத்தைப் பார்த்து
நாற்காலி கனவுகளில் கூத்தாடிகள்

பணமிருக்கு அது போதும்
மேல்தட்ட மனிதவர்க்கம்
நமக்கே ஆயிரம் பிரச்சனை
ஊர்வம்பு எதுக்கு நடுவர்க்கம்
உழை ச்சால் இன்னைக்கு கஞ்சி
ஊமையாக கீழ் வர்க்கம்

குனிந்த தலைகள் நிமிந்தால்
அதிகாரத்தால் தட்டி அமர்த்துகிறார்கள்
வெகுண்டெழுந்து புறப்பட்டால்
சிறைபிடித்துச் செல்கிறார்கள்

அநியாயம் இழைப்பவர்கள்
அதிகாரத்தின் மேல்சுவட்டில்
அநீதி இழைக்கப்பட்டவர்களோ
மரணத்தை முத்தமிடுகிறார்கள்

இரவுகள் மரணித்தும்
விடியல்கள் உயிர்த்தெழுந்தும்
இயற்கை பருவங்களும் மாறி
காலத்திற்கும் வயதாகி விட்டது
இன்றும் மாறவில்லை
மனித வர்க்கங்களின் முகச்சாயம்

10 comments:

  1. /////நாற்காலிகளின் அதிகாரத்திற்கு
    அடிபணிந்து நிற்கிறார்கள்
    சமூகத்தின் அறிவு ஜீவிகள் //////

    இரவுகள் மரணித்தும்
    விடியல்கள் உயிர்த்தழுந்தும்
    இயற்கை பருவங்களும் மாறி
    காலத்திற்கும் வயதாகி விட்டது
    இன்றும் மாறவில்லை
    மனித வர்க்கங்களின் முகச்சாயம் ////////


    அருமையான வரிகள் நண்பரே . சிந்திக்கவேண்டிய ஒன்று என்ன செய்வது ரசிக்கும் நிலையில் இன்று

    ReplyDelete
  2. /////நாற்காலிகளின் அதிகாரத்திற்கு
    அடிபணிந்து நிற்கிறார்கள்
    சமூகத்தின் அறிவு ஜீவிகள் //////

    இரவுகள் மரணித்தும்
    விடியல்கள் உயிர்த்தழுந்தும்
    இயற்கை பருவங்களும் மாறி
    காலத்திற்கும் வயதாகி விட்டது
    இன்றும் மாறவில்லை
    மனித வர்க்கங்களின் முகச்சாயம் ////////


    அருமையான வரிகள் நண்பரே . சிந்திக்கவேண்டிய ஒன்று என்ன செய்வது ரசிக்கும் நிலையில் இன்று

    ReplyDelete
  3. அருமையான வரிகள் நண்பரே . சிந்திக்கவேண்டிய ஒன்று என்ன செய்வது ரசிக்கும் நிலையில் இன்று

    ReplyDelete
  4. //குனிந்த தலைகள் நிமிந்தால்
    அதிகாரத்தால் தட்டி அமர்த்துகிறார்கள்
    வெகுண்டெழுந்து புறப்பட்டால்
    சிறைபிடித்துச் செல்கிறார்கள்

    அநியாயம் இழைப்பவர்கள்
    அதிகாரத்தின் மேல்சுவட்டில்
    அநீதி இழைக்கப்பட்டவர்களோ
    மரணத்தை முத்தமிடுகிறார்கள் //

    ஒவ்வொரு வரிகளும் அருமை பாராட்டுகள் இன்றை சமூக உண்மை வரிகள் அனைத்தும் பாராட்டுக்கள்... பாராட்ட வார்த்தையே இல்லை

    ReplyDelete
  5. //குனிந்த தலைகள் நிமிந்தால்
    அதிகாரத்தால் தட்டி அமர்த்துகிறார்கள்
    வெகுண்டெழுந்து புறப்பட்டால்
    சிறைபிடித்துச் செல்கிறார்கள்//
    இந்த நிலமை அரசியலில் மட்டுமல்ல. பல இடங்களிலும் இருக்கிரது.
    அருமை

    ReplyDelete
  6. நாற்காலிகளின் அதிகாரத்திற்கு
    அடிபணிந்து நிற்கிறார்கள்
    சமூகத்தின் அறிவு ஜீவிகள்
    உண்மையின் நிறம் இது ,பாராட்டுக்கள் தோழரே

    ReplyDelete
  7. அருமையான சமுதாய உண்மைகள் நண்பரே! வாழ்த்துக்கள் ! இதை ஏதேனும் ஒரு அரசியல் தலைவராவது படித்தால் படித்து வெட்கி தலை குனிந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
    ம்ம்ம் என்ன செய்றது இந்த பக்கமே வரமாடேங் கிறாங்களே !

    ReplyDelete
  8. பட்டாம்பூச்சிDecember 23, 2010 at 10:28 AM

    எல்லா வரிகளும் உயிருடையதாக இருக்கு

    ReplyDelete
  9. சமூக அவலங்கள் தங்கள் வரிகளில் தெரிகிறது ...
    அருமையான சிந்தனைமிக்க வரிகள் ...
    நாற்றம் கொண்ட சமூக சுயநலங்கள் திருந்தட்டும் இதை பார்த்தாவது ....
    தொடருங்கள் ////

    ReplyDelete
  10. ரொம்ப நாளுக்கு பின் தங்கள் கவிதைகளை படிப்பதில் மகிழ்ச்சி.

    இரவுகள் மரணித்தும்
    விடியல்கள் உயிர்த்தெழுந்தும்
    இயற்கை பருவங்களும் மாறி
    காலத்திற்கும் வயதாகி விட்டது
    இன்றும் மாறவில்லை
    மனித வர்க்கங்களின் முகச்சாயம்

    நிஜம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...