Sunday, December 26, 2010

இதயங்கள் சங்கமிப்பதில்லை


அவளால் களவாடப் பட்டது
என்னுள் களவு போனது
என்றெண்ணிய என் இதயம்
இன்னும் பத்திரமாக எனக்குள்
களவாடப் பட்டதோ நிஜம்
தேடுகிறேன் களவு போனதை 
தேடுதலின் வழியே கண்டேன் 
என்னைப்போல் களவு கொடுத்தவளை 
இருவரின் ஒன்றிணைந்த தேடலில் 
கண்டுகொண்டோம் களவு போனதை 
எங்களுக்குள் பரிமாறிக் கொண்டோம் 
எங்களின் அந்தக் களவுகளை  
களவுகளின் சங்கமத்தில்
கடந்து வந்த தருணங்கள்
பனிமூடிய மலரின் நிமிஷங்கள்  
கதிரவனின் வருகையில்
உருகும் பனிபோல்
எங்கள் களவுகளின் ஆயுள்
குறைந்து மரணம் தழுவ
உடைந்த கண்ணாடி போல்
நாங்கள் சிதறி சென்றோம்
சந்திப்புக்களுக்கு விலங்கிடப்பட்டது
 பாதைகள் மாறிப் பயணங்கள்
சிலதொரு நாட்களின் மரணத்தில்
எதனையோ துலைத்ததாக
மீண்டும் உணர்ந்தேன்
அதனைத் தேடிய பயணத்தில்
மதி எனக்கு உணர்த்தியது
நீ துலைத்தது இதயத்தை அல்ல
ஆண்மை இதயம் உள்ளில்
பொதிந்து  வைத்திருக்கும்
பெண்மையை  ருசிக்கும்
அந்த ஆசைகளை !
இரு பாலினத்தின்
இதயங்களின்  சந்திப்பில்
சங்கமிப்பது ஆசைகள் தான் 
இதயங்கள் அல்ல . 

5 comments:

  1. நிதர்சனம் மிக அழகாக உணர்த்துகிறது சையது அலி...

    இதயங்கள் நேசிப்பது ஒருவரை ஒருவரின் மனப்பூர்வமான மனதை எனும்போது அங்கே பிரிவுக்கே இடமில்லை...

    அதுவே எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய கனவில் லயித்து ஆசைகளை திணிக்கும் காதல் நிலைப்பதும் இல்லை நேசத்தை ஆயுளை நீட்டிப்பதும் இல்லை...

    மிக அருமையான வரிகளில் சுட்டி காமியமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி.

    ReplyDelete
  2. கவிக்காதலன்December 26, 2010 at 12:33 PM

    அருமை நண்பா அருமை

    ReplyDelete
  3. ஆண்மை இதயம் உள்ளில்
    பொதிந்து வைத்திருக்கும்
    பெண்மையை ருசிக்கும்
    அந்த ஆசைகளை !
    இரு பாலினத்தின்
    இதயங்களின் சந்திப்பில்
    சங்கமிப்பது ஆசைகள் தான்
    இதயங்கள் அல்ல .

    உண்மை தோழரே

    ReplyDelete
  4. இரு பாலினத்தின்
    இதயங்களின் சந்திப்பில்
    சங்கமிப்பது ஆசைகள் தான்
    இதயங்கள் அல்ல . .

    இது இது இதுதான் உண்மை.....
    பொய்களுக்குள் மறைந்த மறைத்த உண்மை....

    ReplyDelete
  5. azhagu ! unmaigal ulavum oru kavithai ungalin valippoovil poothadhu !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...