Monday, January 31, 2011

பேரூந்து*ந்தோ பரிதாபம்
கடைசி நிறுத்தத்தில்
சிதறித் துலையும்
நெடுந்தூரப் பயணிகள்


ன்  முகமெல்லாம்
இரத்தக் கறைகள்
முன் கண்ணாடியில்
இறந்த விட்டில்பூச்சிகள்


*டை நிறுத்தங்களில்
நலம் விசாரித்துக்கொள்கிறது
எதிர் முனைப் பேரூந்துகள்


*நெடுந்தூர உழைப்பின் 
சிறு இளைபாருதலில்
பசியாறும் பயணிகள்

Sunday, January 30, 2011

உண்ணுதல்ண்ணில் தளிர்வதை
உண்ணுகிறான் மனிதன்
மனிதன் உதிர்ந்தபின்
அவனை உண்ணுகிறது மண்கலின் நாழிகைகளை
இரவு உண்ணுகிறது
இரவில் நாளிகைகை
பகல் உண்ணுகிறது
வயிறு நிரம்பியது
காலத்திற்குன்னை உண்ணவரும்
ஆண் அணுவை
கொல்லுகிறது பெண் அணு
உண்ணும் பெண் அணுவில்
உயிரை தளிரவிடுகிறது
ஆண் அணுக்கள்

Wednesday, January 26, 2011

சுயநலமிகள்கம் பிரதிபலிக்கும்
முகக் கண்ணாடியில்
சாயம் பூசும்
சுயநலமிகள்

யர்வுக்கு வித்திடுகையில்
தூற்றியது ஊறும் உறவும்
உயர்ந்து நிற்கையில்
உறவின் உரிமை சொல்லி
தம்மை அடையாளம் காண்கிறார்கள்

 ரம்  பார்த்து
புன்னைகை செய்கையில்
தரம் தாழ்ந்து போகிறார்கள
தரத்தில் உயந்தவர்கள்

Sunday, January 23, 2011

இரண்டு ஈரங்கள்
ண்ணிலும் சில மனங்களிலும்
ஊறும் ஈரப்பதம் இயற்கை
அது இறைவனின் நற்கொடை
ஈரங்களில் உயிர்கள் தளிர்கிறது


ருவங்களுக்காக தவம்கிடக்கும்
தரிசு நிலங்கள்
மனித மனக் கனிவுக்காக
பொறுமைகாக்கும் மனிதர்கள்


ழ் துளை இட்டும்
கருபுகையை கக்கும் நிலங்கள்
துளியும் ஈரமற்று
நஞ்சை கக்கும் மனங்கள்


றண்ட நிலத்தால்
யிர்களை பரிகொடுப்பவர்களும்
கனிவு இழந்த மனங்களால்
மனம் உடையும் மனிதர்களும்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்


சுயத்தை மாற்றாத படைப்புக்கள்
இறைவனின் குற்றமல்ல
அது இயற்கையின் தன்மை

Saturday, January 22, 2011

மனப் புத்தகம்மூடிய புத்தகம்
திறந்து வாசிக்கும்வரை
திரைமறைவில் இருக்கும்
அதன் உள்ளடக்கங்கள்
மனப் புத்தகமும் அப்படிதான்
வாழும் கால தருணங்களில்
தன்னை சார்ந்துள்ள சமூகம்
அளிக்கும் நிகழ்வெனும்
எழுத்துக்களை கொண்டு
பதியப்படுகிறது மனப் புத்தகம்
அதில் மரணம்வரை நீளும்
எழுதாத வெற்றுப் பக்கங்களும்
மனிதர்களின் மனப் புத்தகத்தை
மேலோட்டமாக வாசிப்பவர்கள்
நண்பன் பகைவன் இப்படி . . . .
சில பெயர்கள் சூட்டி
உறவை நகர்த்துகிறார்கள்
சுயம் வாசிப்பின் முயற்ச்களில்
அர்த்தம் அறியா திணறுகிறான்
இறைவனால் மட்டுமே வாசிக்கப்படும்
ஆழம்கொண்ட மனப் புத்தகத்தை
வாசித்ததாக பொய்சொல்லுகிறார்கள்
சில மனிதர்கள்

Monday, January 17, 2011

முந்தானை வாசம்
கூந்தல் சூடும்
மலர்களின் வாசம்
உடல்முழுக்க சிதறவிட்ட
திரவியத்தின் நறுமணவாசம்
இரவின் நாழிகைகளில்
எனக்காய் உரித்து எறிந்த
புடவைகளின் வாசம்
நித்தமும் ஒரு வாசம்கொண்டு
என்னவள் எனை மூடுகிறாள்
அற்ப ஆயுள்கொண்ட நறுமணங்கள்
மரணத்தை முத்தமிடுகிறது
இன்றும் உயிருடன் மணக்கிறது
என் உயிரில் கரைந்த
வெயிலிலும் மழையிலும்
முகம் கூசும் வெளிச்சத்திலும்
என் உடல் போர்த்திய
அம்மாவின் முந்தானை வாசம்

பழைய கடிதம்
எதனையோ தேடிய தருணம்
மூலையில் ஒதுக்கப்பட்டிருந்த
பழைய பெட்டியின் ஓரத்தில்
என் உறவுகளை பிரிந்த
இடைவெளி கால தருணங்களில்
உறவுகளின் உணர்வுகளை
சுமந்துவந்த பழைய கடிதம்
சாயம் மங்கி தூசிகள்படிந்தும்
நிகழ்வுகளில் நினைவுகளை சுந்து
இன்றும் உயிருடன்

Sunday, January 16, 2011

விடை தேடிச் செல்கிறேன்கருவறை நீர்க்குடம் உடைந்து
உதிரத் துளிகள் படிந்த
உயிர் பொதிந்த மாமிசம்
நீர்நிரம்பிய பச்சை மாமிசத்தில்
உயிர்த்தெழும் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
எத்தனை விசித்திர முகங்கள்
ஏற்கனவே எழுதப்பட்ட விதி
இரவல் மாமிசம் மரணிக்கும்முன்
துடரும் தேடல்களின் வழியே
இரத்த பந்தமென்று சிலர்
உற்ற உறவுகளென்று பலர்
கட்டிய உறவென்று ஒருத்தி
பெத்த உறவென்று அவர்கள்
இவர்களின் உரிமைத் துரத்தல்
காத்திருக்கும் கடமைகள் ஒருபக்கம்
கால நாழிகைகளின் மரணத்தில்
உயிர் உதிர்ந்து கிடக்குது
என் பச்சை மாமிசம்
இதுவரையிலான மண் ஜென்மத்தில்
வென்றேனா இல்லை தோற்றேனா
விடை தேடிச் செல்கிறேன்
இறைவனிடத்தில்

Saturday, January 15, 2011

பட்டிமன்றம்

ஊழல் சுரண்டல் பதுக்கல்
ஊடகங்களில் நிரம்பி வழியும்
பச்சையான உண்மைகள்
விஸ்வரூபத்தில் விலைவாசி
சிறை படும் உரிமைகள்
ஆமையின் வேகத்தில்
செயல்படும் வாக்குறுதிகள்
குருதியொழுகி உதிரும் உயிர்கள்
நித்தம் களவுபோகும் தணங்கள்
அவ்வபோது உயிர்த்தெழும்
இலவசங்களின் மேடை நாடகங்கள்
வலக்கரத்தின் உதவியை
இடக்கரம் அறிதலே தவறு
செய்யாக் கானல் கடமைக்கும்
சுயத்திற்காக செய்த கடமைக்கும்
தத்தம் புகழ் மாலைசூடும்
திருவிழா கொண்டாட்டங்களாக
மேடை அரங்கேற்றங்கள்
தாளத்திகு துள்ளும்
அதிகாரம் கையாளுபவர்களும்
சாயம் பூசிய கூத்தாடிகளும்
வறுமை அறியா மேல்வர்க்கமும்
அலங்கரித்த சிங்காரிகளாய் பொய்கள்
எல்லாக் கதை அறிந்தும்
அறியார்போல் நடுவர்க்கம்
என் செய்வறியாது
அகன்று நிற்கிறான் பாமரன்
இவை நேற்றுவரயிலான பதிவுகள்
வெற்றியாளனை நிர்னைத்து விட்டு
போட்டி நாடகம் வேண்டாம்
உயர்த்துவோம் ஒரு பட்டிமன்றம்
விவாதிக்கட்டும் குடிமக்கள்
தீர்ப்பு எழுதுவான் இறைவன்

Tuesday, January 11, 2011

ஒரு விடியல்
என்றாவது ஒரு விடியலில்
வாழ்கையை ஒளிரூட்டும்
பொற்காலத்தின் வருகைக்கான
தவங்களில் சில மனிதர்கள்

இன்றைய நாழிகைகளில்
பயணிக்காமல் புறம்தள்ளி
நாளைய விடியலில் உயர்வை
கனவுகாணும் மதிகெட்டவர்கள்

உழைப்பை வித்திட்டு
உயர்ந்து நிற்பவர்களை பார்த்து
உனக்குள்  சிறுமையாகும்முன்
அவர்கள் உதிர விட்ட
வியர்வைத்துளிகளை எண்ணிக்கொள்

இன்று வித்திடும் பயிர்கள்
நாளை அறுவடைக்கு வரும்
நீ கனவுகாணும் பொற்காலம்
உனது கரங்களில்

Monday, January 10, 2011

காலத்தை வென்றவர்கள்
வாழ்கையின் சித்தாந்தைதை
சிந்திக்கும் மாமனிதர்கள்
காலத்தை வென்று
வாழ்கையின் உயரங்களை தொட
காலத்தோடு ஒரு போட்டி
குதிரையின் வேகத்தில்
நாழிகைகள் கடந்த ஓட்டம்
ஓட்டம் நின்ற தினம்
மண்குடில் தேடிய பயணத்தில்
என் எழுபதை கடந்த உடல்
நான் நிறுத்திய இடத்திலிருந்து
போட்டிக்கு ஆயத்தமாகும் சந்ததிகள்
ஜெயிக்க வந்தவர்கள் தோற்று
மண்ணுக்கடியில் சென்றபின்
இவர்கள் காலத்தை வென்றவர்கள்
என்று ஏட்டில் குறிப்பெழுதுகிரார்கள்
உண்மையை உணராமல்
என்னை துரத்தும் பாவம்மனிதர்கள்
தன் பிறகே வருவர்களை
ஏளனமாய் நகைத்துகொண்டு
ஓடிகிறது காலம்

Saturday, January 8, 2011

பொய் ஆயுதம்
இருமுனைக் கூர்மை அறிந்தும்
சிலதொரு அவசரங்களில்
சுயப் பாதுகாப்பிற்கு எடுத்தஆயுதம்
அற்பசுகத்தின் ஆயுள்குறைந்து
கருமைக்குள் மூடி
மூச்சுத் திணறும் வெண்மையோ
சிறைமீள நூல்இழை
தன் மரணத்தைக் கேட்டு
என்னை துரத்துகிறது ஆயுதம்
திக்குத் திணறி ஓடுகிறேன்
ஓரிடத்தில் களைத்து நின்றேன்
சீற்றலுடன் வெளிவந்தது வெண்மை
கருமை மரணத்தை முத்தமிட
என் முகச்சாயங்கள் வெளுத்தது
பொய்யெனும் கருமை ஆயுதத்திற்கு
அற்ப ஆயுள் தான்
உணர்த்தியது மரணமற்ற
வெண்மையெனும் மெய்

Thursday, January 6, 2011

பச்சைமனிதன்தாய் தந்தையின்
விரல் துணை இன்றி
ஓடிவிளையாடி துள்ளித் திரிந்த
பால்ய பருவங்கள்
நட்பு உறவுக் கூட்டங்களுடன்
தளிரிட்ட முதல் காதலுடனும்
மனப்போக்கில் சிட்டாய் பறந்த
காளைப் பருவங்கள்
மனப் பெட்டகத்தில்
தஞ்சம் பெற்று குடியேறியது
இருமனங்கள் சேரும் திருமணத்தில்
புது சட்டதிட்டங்கள் உயிர்த்தெழுந்து
சொல்லுக்கும் செயலுக்கும்
கடிவாளச் சங்கிலி இடுகிறது
இரத்தபந்த உற்ற உறவுகளின்
நிழல்களிலிருந்து வெளிப்படும்
மெய்களின் கோர முகம்
இதயப் பட்டி மன்றத்தில்
இன்பமும் துன்பமு
புன்னகை கண்ணீர் ஆழத்தை
வெளிக்கொணர்கிறது மதி
அகம் புறம் உணர்ந்த
வாழ்கையின் முதல்அடி
நித்தமும் நிறங்களை மாற்றிய
போலிகளின் உயிர்த்தெழுதலில்
சிறுக சிறுக இறக்கிறான்
எனக்குள் என் பச்சைமனிதன்

Monday, January 3, 2011

வேண்டாம் உங்கள் இலவசம்


கல்விக்கு தகுந்த வேலைகொடு
உழைப்பிற்கு அதற்கான ஊதியம்கொடு
எங்கள் சலுகைகளில் கையிடாதே
எங்கள் உரிமைகளை மறுக்காதே
எங்கள் முன்னேற்றத்திற்கு வேலியிடாதே
எங்கள் நியாமான கோரிக்கைகளை
சபைகளில் எடுத்துச்  சொல்லுங்கள்
உங்கள்   கடமையை தவறாதீர்கள்
எல்லாம் எங்களை நாடிவரும்
 ஏழ்மையும் வறுமையும் ஓடிவிடும்
பிறகு எதற்கு உங்கள் இலவசம்
இலவசங்கள் கொடுத்து
எங்களை சோம்பேறிகளாய்
மூலையில் முடக்கி விடாதீர்கள்

Saturday, January 1, 2011

புதிய விடியல்

*மாற்றான் ஒருவனுடன்
உன்னை தரப்படுத்துகையில்
இழிவு படுத்துகிறாய்
உன்னை நீயே

*புன்னகையின் மகத்துவம்
துக்கங்கள் உணர்த்தும்
கற்றுக்கொள் நீயும்
கற்றுக்கொடு பிறர்க்கும்
புன்னகையின் சூச்சமத்தை

*உலகை வென்று நிற்பவனுக்கும்
வலிகள் நிறைந்த கதையிருக்கும்
வலிகளோடு வாழ முற்படுவனுக்கு
நாளை புதிய வாழ்க்கை இருக்கு

*எளிதாக சுட்டிக்காட்டுகிறாய்
பிறர் குற்றங்களை
சுயம் பார்த்து உணர்கையில்
தலைகுனிந்து வெட்கப்படுகிறாய்

*நேற்று இழைத்த பிழைகளை
இன்று திருத்த இயலாது
இன்று முதல் துடங்கு
பிழைகள் அற்ற வாழ்கையை

*உன் குழப்பங்களில்
துவண்டு கவலைகொள்ளாதே
தீர்வுகள் கிடைக்காவிடில்
வீண் விரயமாய் போகிறது
கவலைத் தருணங்கள்

*சிறு தவறுகளில்
எதிர் கொள்ளும் வலிகளை
உனக்குள் சேமித்துக்கொள்
காலங்கள் கடக்கும் வலிகள்
உன்னை உயர்த்தும் ஊன்றுகோல்

*உயிர் அணுக்களின் மரணத்தில்
அணுக்கள் உயிர்த்தெழுகிறது
நாளிகைகளின் மரணத்தில்
உயிர்த்தெழும் புத்தாண்டுகள்
ஆழமாய் பார்த்தால்
அற்புதங்கள் நிறைந்தது
மரணமும் ஜனனமும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...