Saturday, January 1, 2011

புதிய விடியல்





*மாற்றான் ஒருவனுடன்
உன்னை தரப்படுத்துகையில்
இழிவு படுத்துகிறாய்
உன்னை நீயே

*புன்னகையின் மகத்துவம்
துக்கங்கள் உணர்த்தும்
கற்றுக்கொள் நீயும்
கற்றுக்கொடு பிறர்க்கும்
புன்னகையின் சூச்சமத்தை

*உலகை வென்று நிற்பவனுக்கும்
வலிகள் நிறைந்த கதையிருக்கும்
வலிகளோடு வாழ முற்படுவனுக்கு
நாளை புதிய வாழ்க்கை இருக்கு

*எளிதாக சுட்டிக்காட்டுகிறாய்
பிறர் குற்றங்களை
சுயம் பார்த்து உணர்கையில்
தலைகுனிந்து வெட்கப்படுகிறாய்

*நேற்று இழைத்த பிழைகளை
இன்று திருத்த இயலாது
இன்று முதல் துடங்கு
பிழைகள் அற்ற வாழ்கையை

*உன் குழப்பங்களில்
துவண்டு கவலைகொள்ளாதே
தீர்வுகள் கிடைக்காவிடில்
வீண் விரயமாய் போகிறது
கவலைத் தருணங்கள்

*சிறு தவறுகளில்
எதிர் கொள்ளும் வலிகளை
உனக்குள் சேமித்துக்கொள்
காலங்கள் கடக்கும் வலிகள்
உன்னை உயர்த்தும் ஊன்றுகோல்

*உயிர் அணுக்களின் மரணத்தில்
அணுக்கள் உயிர்த்தெழுகிறது
நாளிகைகளின் மரணத்தில்
உயிர்த்தெழும் புத்தாண்டுகள்
ஆழமாய் பார்த்தால்
அற்புதங்கள் நிறைந்தது
மரணமும் ஜனனமும்

2 comments:

  1. கவிக்காதலன்January 2, 2011 at 2:55 PM

    //உலகை வென்று நிற்பவனுக்கும்
    வலிகள் நிறைந்த கதையிருக்கும்
    வலிகளோடு வாழ முற்படுவனுக்கு
    நாளை புதிய வாழ்க்கை இருக்கு//

    தன்னம்பிக்கையூட்டும் வரிகள்... அருமை தோழரே....

    ReplyDelete
  2. *உலகை வென்று நிற்பவனுக்கும்
    வலிகள் நிறைந்த கதையிருக்கும்
    வலிகளோடு வாழ முற்படுவனுக்கு
    நாளை புதிய வாழ்க்கை இருக்கு

    *உயிர் அணுக்களின் மரணத்தில்
    அணுக்கள் உயிர்த்தெழுகிறது
    நாளிகைகளின் மரணத்தில்
    உயிர்த்தெழும் புத்தாண்டுகள்
    ஆழமாய் பார்த்தால்
    அற்புதங்கள் நிறைந்தது
    மரணமும் ஜனனமும்

    நல்ல உத்வேகத்தை ஊட்டும் புத்தாண்டுக் கவிதை எங்கள் மனதைத் தேற்றும் சத்தான க்விதை. நன்றி சையது அலி.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...