Monday, January 3, 2011

வேண்டாம் உங்கள் இலவசம்






கல்விக்கு தகுந்த வேலைகொடு
உழைப்பிற்கு அதற்கான ஊதியம்கொடு
எங்கள் சலுகைகளில் கையிடாதே
எங்கள் உரிமைகளை மறுக்காதே
எங்கள் முன்னேற்றத்திற்கு வேலியிடாதே
எங்கள் நியாமான கோரிக்கைகளை
சபைகளில் எடுத்துச்  சொல்லுங்கள்
உங்கள்   கடமையை தவறாதீர்கள்
எல்லாம் எங்களை நாடிவரும்
 ஏழ்மையும் வறுமையும் ஓடிவிடும்
பிறகு எதற்கு உங்கள் இலவசம்
இலவசங்கள் கொடுத்து
எங்களை சோம்பேறிகளாய்
மூலையில் முடக்கி விடாதீர்கள்

8 comments:

  1. இலவசங்கள் கொடுத்து
    எங்களை சோம்பேறிகளாய்
    மூலையில் முடக்கி விடாதீர்கள்
    .....................நல்ல வரிகள் சையெத் அலி அவர்களே.

    ReplyDelete
  2. அருமை தோழரே அருமை.. நெத்தியடி கவிதை.

    ReplyDelete
  3. உண்மை வரிகள் தான் சமூக கவிதை-- விளிப்புணர்வு கொண்டுவரும் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  4. இலவசமா கொடுத்து கொடுத்து நம்ம மக்கள் எதுக்கெடுத்தாலும் இப்ப இலவசத்தை எதிர்பார்க்கிறார்கள்.
    இலவசத்தை சோம்பேறி ஆக்காதீர்கள் நல்ல வரிகள் சையத்

    ReplyDelete
  5. ஒரு சரியான மக்கள் விரோத அரசு மக்களை ஏழையாகவும், பிச்சைக்காரர்களாகவும், அடிமைகளாகவும் மட்டுமே வைத்திருக்க விரும்புவது இயல்புதானே, உண்மையில் மக்கள் இப்போதாவது ஒரு புதிய புரட்சிக்கு தயாராக வேண்டும். ஆனால் அது நடக்குமா என்பதுதான் கேள்விக்குறி. ஏனெனில் இலவச போதைக்கு அடிமையா(க்)கி விட்டார்கள் என்பதுதான் உண்மை!

    ReplyDelete
  6. .....இலவசங்கள் கொடுத்து
    எங்களை சோம்பேறிகளாய்
    மூலையில் முடக்கி விடாதீர்கள்"
    உங்கள் உணர்வுக்கு எனது வாழ்துக்கள் ..நண்பா. .உங்கள் துணிவுக்கும் சேர்த்து..

    ReplyDelete
  7. கலைஞரின் இலவச ஆக்டபஸுக்கு எதிரான சிறந்த கோஷ வலை பின்னி இருக்கீங்க சையத் அலி... பாராட்டுக்கள்...!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...