Monday, January 10, 2011

காலத்தை வென்றவர்கள்




வாழ்கையின் சித்தாந்தைதை
சிந்திக்கும் மாமனிதர்கள்
காலத்தை வென்று
வாழ்கையின் உயரங்களை தொட
காலத்தோடு ஒரு போட்டி
குதிரையின் வேகத்தில்
நாழிகைகள் கடந்த ஓட்டம்
ஓட்டம் நின்ற தினம்
மண்குடில் தேடிய பயணத்தில்
என் எழுபதை கடந்த உடல்
நான் நிறுத்திய இடத்திலிருந்து
போட்டிக்கு ஆயத்தமாகும் சந்ததிகள்
ஜெயிக்க வந்தவர்கள் தோற்று
மண்ணுக்கடியில் சென்றபின்
இவர்கள் காலத்தை வென்றவர்கள்
என்று ஏட்டில் குறிப்பெழுதுகிரார்கள்
உண்மையை உணராமல்
என்னை துரத்தும் பாவம்மனிதர்கள்
தன் பிறகே வருவர்களை
ஏளனமாய் நகைத்துகொண்டு
ஓடிகிறது காலம்

6 comments:

  1. Arumaiyana kavidhai anal unmai

    ReplyDelete
  2. //ஜெயிக்க வந்தவர்கள் தோற்று
    மண்ணுக்கடியில் சென்றபின்
    இவர்கள் காலத்தை வென்றவர்கள்
    என்று ஏட்டில் குறிப்பெழுதுகிரார்கள்//
    ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க தோழ

    ReplyDelete
  3. அருமையான கவிதை எனக்கு மாவீரன் அலெக்ஸ்சாண்டேர் நினைவுக்கு வருகிறார் !

    ReplyDelete
  4. நண்பா உங்களின் கவிதைவரிகள் அத்தனைகளிலும் நல்ல படிப்பினை நல்ல சிந்தனைகள் நல்ல விளிப்புர்வுகள் நிறைந்து காணப்படும் உங்கள் கவிதைகளை தொடராக படிப்பவர்களின் நானும் ஒருத்தன் தொடர்ந்தும் தாருங்கள் தோழரே அன்புபாராட்டுக்கள்

    ReplyDelete
  5. உங்கள் உண்மை வரிகளும் என்று காலதால் வென்று தான் நிற்கிறது ... தொடர்ந்து உங்கள் உண்மை வரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. காலத்தை வென்றவர்கள் என்று குறிப்பேட்டில் வாழ்பவர்கள் உண்மையில் காலத்தை வென்றவர்களா ? இல்லை காலத்தை எந்த மனிதனாலும் வெல்ல முடியாது
    இதுவே இந்த கிறுக்கலின் பொருள்

    உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...