Tuesday, January 11, 2011

ஒரு விடியல்




என்றாவது ஒரு விடியலில்
வாழ்கையை ஒளிரூட்டும்
பொற்காலத்தின் வருகைக்கான
தவங்களில் சில மனிதர்கள்

இன்றைய நாழிகைகளில்
பயணிக்காமல் புறம்தள்ளி
நாளைய விடியலில் உயர்வை
கனவுகாணும் மதிகெட்டவர்கள்

உழைப்பை வித்திட்டு
உயர்ந்து நிற்பவர்களை பார்த்து
உனக்குள்  சிறுமையாகும்முன்
அவர்கள் உதிர விட்ட
வியர்வைத்துளிகளை எண்ணிக்கொள்

இன்று வித்திடும் பயிர்கள்
நாளை அறுவடைக்கு வரும்
நீ கனவுகாணும் பொற்காலம்
உனது கரங்களில்

4 comments:

  1. தன்னம்பிக்கைக்கே தன்னம்பிக்கைவரும் சிறப்பானவரிகள் அன்புபாராட்டுக்கள் தோழரே

    ReplyDelete
  2. உழைப்பை வித்திட்டு
    உயர்ந்து நிற்பவர்களை பார்த்து
    உனக்குள் சிறுமையாகும்முன்
    அவர்கள் உதிர விட்ட
    வியர்வைத்துளிகளை எண்ணிக்கொள்


    அருமையா இருக்குங்க ! இப்படி உணர்ச்சி ஊற்றுக்கள் பொங்கும் உங்களின் கவிதைகளை படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது !

    ReplyDelete
  3. /இன்று வித்திடும் பயிர்கள்
    நாளை அறுவடைக்கு வரும்
    நீ கனவுகாணும் பொற்காலம்
    உனது கரங்களில்//


    உண்மையான தன்னம்பிக்கை வரிகளுக்கு தலை வணக்குகிறேன் நண்ப்ரே

    ReplyDelete
  4. // இன்று வித்திடும் பயிர்கள்
    நாளை அறுவடைக்கு வரும்
    நீ கனவுகாணும் பொற்காலம்
    உனது கரங்களில். //


    எதிர் காலம் நமபிக்கையோடு நோக்கப்படும், உணர்வு மிக்க வரிகள்.

    வாழ்த்துக்கள், நன்றிகள் நண்பரே

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...