Saturday, January 15, 2011

பட்டிமன்றம்





ஊழல் சுரண்டல் பதுக்கல்
ஊடகங்களில் நிரம்பி வழியும்
பச்சையான உண்மைகள்
விஸ்வரூபத்தில் விலைவாசி
சிறை படும் உரிமைகள்
ஆமையின் வேகத்தில்
செயல்படும் வாக்குறுதிகள்
குருதியொழுகி உதிரும் உயிர்கள்
நித்தம் களவுபோகும் தணங்கள்
அவ்வபோது உயிர்த்தெழும்
இலவசங்களின் மேடை நாடகங்கள்
வலக்கரத்தின் உதவியை
இடக்கரம் அறிதலே தவறு
செய்யாக் கானல் கடமைக்கும்
சுயத்திற்காக செய்த கடமைக்கும்
தத்தம் புகழ் மாலைசூடும்
திருவிழா கொண்டாட்டங்களாக
மேடை அரங்கேற்றங்கள்
தாளத்திகு துள்ளும்
அதிகாரம் கையாளுபவர்களும்
சாயம் பூசிய கூத்தாடிகளும்
வறுமை அறியா மேல்வர்க்கமும்
அலங்கரித்த சிங்காரிகளாய் பொய்கள்
எல்லாக் கதை அறிந்தும்
அறியார்போல் நடுவர்க்கம்
என் செய்வறியாது
அகன்று நிற்கிறான் பாமரன்
இவை நேற்றுவரயிலான பதிவுகள்
வெற்றியாளனை நிர்னைத்து விட்டு
போட்டி நாடகம் வேண்டாம்
உயர்த்துவோம் ஒரு பட்டிமன்றம்
விவாதிக்கட்டும் குடிமக்கள்
தீர்ப்பு எழுதுவான் இறைவன்

2 comments:

  1. உண்மைத்தான் இன்று அரசியல் என்றால் ஊழல் சுரண்டல் பதுக்கல் இது ஒரு தகுதியா எடுத்துகிட்டாங்க.. இது தெரியலன்னா... அரசியல் இல்லை என்ற நிலை வந்திருச்சு.. இதுக்கு நம்ம மக்கள் தான் தீர்ப்பு வழங்கனும்..

    நடுவராக செயல்படும் நமது மக்கள் விரைவில் இதற்கு தீர்ப்பு வழங்குவார்கள்..

    ReplyDelete
  2. சிந்திக்க துாண்டும் மிகச்சிறந்த வரிகள் அத்தனையும் தனியழகுதான் தோழா தொடரட்டும் உங்கள் சிறப்பான கவிதைகள் பாராட்டுக்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...