Sunday, January 16, 2011

விடை தேடிச் செல்கிறேன்



கருவறை நீர்க்குடம் உடைந்து
உதிரத் துளிகள் படிந்த
உயிர் பொதிந்த மாமிசம்
நீர்நிரம்பிய பச்சை மாமிசத்தில்
உயிர்த்தெழும் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
எத்தனை விசித்திர முகங்கள்
ஏற்கனவே எழுதப்பட்ட விதி
இரவல் மாமிசம் மரணிக்கும்முன்
துடரும் தேடல்களின் வழியே
இரத்த பந்தமென்று சிலர்
உற்ற உறவுகளென்று பலர்
கட்டிய உறவென்று ஒருத்தி
பெத்த உறவென்று அவர்கள்
இவர்களின் உரிமைத் துரத்தல்
காத்திருக்கும் கடமைகள் ஒருபக்கம்
கால நாழிகைகளின் மரணத்தில்
உயிர் உதிர்ந்து கிடக்குது
என் பச்சை மாமிசம்
இதுவரையிலான மண் ஜென்மத்தில்
வென்றேனா இல்லை தோற்றேனா
விடை தேடிச் செல்கிறேன்
இறைவனிடத்தில்

2 comments:

  1. சூப்பர் தோழரே... ரொம்ப அருமையான வரிகள்....

    ReplyDelete
  2. இதுவரையிலான மண் ஜென்மத்தில்
    வென்றேனா இல்லை தோற்றேனா
    விடை தேடிச் செல்கிறேன் .........

    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...