Saturday, January 22, 2011

மனப் புத்தகம்



மூடிய புத்தகம்
திறந்து வாசிக்கும்வரை
திரைமறைவில் இருக்கும்
அதன் உள்ளடக்கங்கள்
மனப் புத்தகமும் அப்படிதான்
வாழும் கால தருணங்களில்
தன்னை சார்ந்துள்ள சமூகம்
அளிக்கும் நிகழ்வெனும்
எழுத்துக்களை கொண்டு
பதியப்படுகிறது மனப் புத்தகம்
அதில் மரணம்வரை நீளும்
எழுதாத வெற்றுப் பக்கங்களும்
மனிதர்களின் மனப் புத்தகத்தை
மேலோட்டமாக வாசிப்பவர்கள்
நண்பன் பகைவன் இப்படி . . . .
சில பெயர்கள் சூட்டி
உறவை நகர்த்துகிறார்கள்
சுயம் வாசிப்பின் முயற்ச்களில்
அர்த்தம் அறியா திணறுகிறான்
இறைவனால் மட்டுமே வாசிக்கப்படும்
ஆழம்கொண்ட மனப் புத்தகத்தை
வாசித்ததாக பொய்சொல்லுகிறார்கள்
சில மனிதர்கள்

9 comments:

  1. //மரணம்வரை நீளும் எழுதாத வெற்றுப் பக்கங்களும்//
    வாழாமல் தவற விட்ட தருணங்கள் குறித்த குற்றவுணர்ச்சியை கிளரும் அருமையான வார்த்தைகள்...

    //மனப் புத்தகத்தை
    வாசித்ததாக பொய்சொல்லுகிறார்கள்
    சில மனிதர்கள்//

    யதார்த்தம் செறிந்த உண்மை....

    நல்ல கவிதை... பாராட்டுகள் செயதாலி....

    ReplyDelete
  2. ஆமாம் மிகவும் சிறப்பாக உரைத்துள்ளீர்கள் உறவே அருமை நன்றி தொடருங்கள் பகிருங்கள்

    //இறைவனால் மட்டுமே வாசிக்கப்படும்
    ஆழம்கொண்ட மனப் புத்தகத்தை
    வாசித்ததாக பொய்சொல்லுகிறார்கள்
    சில மனிதர்கள்/

    ReplyDelete
  3. உண்மை அழகாய் சொல்லபட்டு இருக்கிறது

    ReplyDelete
  4. வாசித்ததாக பொய்சொல்லுகிறார்கள்
    சில மனிதர்கள்

    உண்மையே தோழரே .அருமை உங்கள் கவி வரிகள் .தொடரட்டும் .

    ReplyDelete
  5. கவிதை அருமை தோழரே....!!!

    ReplyDelete
  6. நிஜம் நிஜம் நிஜம்.................

    கவிதைக்கு ஏற்ப படங்களை தெரிவு செய்வது நல்லா இருக்கு

    ReplyDelete
  7. உண்மையான ஒரு தகவல் தான் இது.

    ReplyDelete
  8. நல்லக் கவிதை... வாழ்த்துக்கள்!!

    என்றும் நட்புடன்..
    வைகறை
    வாருங்கள்: www.nathikkarail.blogspot.com

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...