Sunday, January 23, 2011

இரண்டு ஈரங்கள்




ண்ணிலும் சில மனங்களிலும்
ஊறும் ஈரப்பதம் இயற்கை
அது இறைவனின் நற்கொடை
ஈரங்களில் உயிர்கள் தளிர்கிறது


ருவங்களுக்காக தவம்கிடக்கும்
தரிசு நிலங்கள்
மனித மனக் கனிவுக்காக
பொறுமைகாக்கும் மனிதர்கள்


ழ் துளை இட்டும்
கருபுகையை கக்கும் நிலங்கள்
துளியும் ஈரமற்று
நஞ்சை கக்கும் மனங்கள்


றண்ட நிலத்தால்
யிர்களை பரிகொடுப்பவர்களும்
கனிவு இழந்த மனங்களால்
மனம் உடையும் மனிதர்களும்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்


சுயத்தை மாற்றாத படைப்புக்கள்
இறைவனின் குற்றமல்ல
அது இயற்கையின் தன்மை

8 comments:

  1. " சுயத்தை மாற்றாத படைப்புக்கள்
    இறைவனின் குற்றமல்ல
    அது இயற்கையின் தன்மை....."


    சுயத்தை மாற்றும் விஷயம் எப்போதுமே உலகத்தில் சர்ச்சைகளையே தோற்றுவித்து வந்திருக்கிறது! நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் பார்க்கலாம் ஏனைய நண்பர்களின் கருத்துக்கள் எப்படி இருக்கிறது என்று!! கவிதை அருமை நண்பரே!

    ReplyDelete
  2. சிறப்பாக கூறியுள்ளீர்கள் உறவே
    ஆமாம் இயற்கைக்கு நாம் விதிவிலக்கல்ல
    பாராட்டுக்கள் இன்னும் எழுதுங்கள் நன்றி

    ReplyDelete
  3. ஈரத்தின் நிறத்தை காட்டும் கவிதை,அருமை தோழரே .பாராட்டுக்கள் .படமும் ,கவியும் போட்டிப் போடும் இங்கு

    ReplyDelete
  4. கவிதையும் படம்மும் அழகு...!

    ReplyDelete
  5. இயற்கையின் தன்மையே அவன் தன்மை தானே

    ReplyDelete
  6. கவிதை அருமையாக இருக்கிறது!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. மிக உன்னதமான படைப்பு நண்பரே ...
    நிஜமாக ஈரம் உள்ளது உங்கள் வரிகளில் ....
    தொடர்ந்து வழங்குங்க ...

    ReplyDelete
  8. வருகை தாருங்கள்...!
    வாசித்துப் பாருங்கள்...!
    பங்கு பெறுங்கள்...!!

    என்றும் உங்களுக்காக
    "நந்தலாலா இணைய இதழ்"

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...