Monday, January 17, 2011

முந்தானை வாசம்




கூந்தல் சூடும்
மலர்களின் வாசம்
உடல்முழுக்க சிதறவிட்ட
திரவியத்தின் நறுமணவாசம்
இரவின் நாழிகைகளில்
எனக்காய் உரித்து எறிந்த
புடவைகளின் வாசம்
நித்தமும் ஒரு வாசம்கொண்டு
என்னவள் எனை மூடுகிறாள்
அற்ப ஆயுள்கொண்ட நறுமணங்கள்
மரணத்தை முத்தமிடுகிறது
இன்றும் உயிருடன் மணக்கிறது
என் உயிரில் கரைந்த
வெயிலிலும் மழையிலும்
முகம் கூசும் வெளிச்சத்திலும்
என் உடல் போர்த்திய
அம்மாவின் முந்தானை வாசம்

7 comments:

  1. முத்தான உண்மை வரிகள் நண்பா

    வாழ்த்த வார்த்தைகளே வரவில்லை... அவ்வளவு அருமையாக உண்மையை கவி வரிகளாக வடித்திருக்கீங்க தோழா

    தொடர்ந்து உங்கள் உண்மை வரிகளுக்காக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. அருமை தோழரே அருமை... ரொம்ப நல்லா இருக்கு!

    ReplyDelete
  3. செந்தில் குமார்January 18, 2011 at 1:55 PM

    ரொம்ப நல்லா இருக்கு!

    ReplyDelete
  4. இரண்டு முந்தானை வாசத்தையும் எப்படி ஒப்பிடுவது
    ஒப்பிடலிலேயே அருமை பெருமையையும் கூறியிருப்பது நன்

    ReplyDelete
  5. வாசமிக்க வாசம் எல்லாம்
    இந்த
    வாசத்தின் முன் வாசம்(வாழ்வு) கொள்ளாதது....

    ReplyDelete
  6. //இன்றும் உயிருடன் மணக்கிறது
    என் உயிரில் கரைந்த
    வெயிலிலும் மழையிலும்
    முகம் கூசும் வெளிச்சத்திலும்
    என் உடல் போர்த்திய
    அம்மாவின் முந்தானை வாசம்//

    இது பாச வாசம்.. நன்கு வீசுகிறது..

    ReplyDelete
  7. நன்றி சகோதரா
    அருமையான வரிகள்
    மீண்டும் உணர முடிந்தது அந்த வாசத்தினை....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...