Saturday, February 26, 2011

நாற்காலி குறிப்புநாற்காலித் திருவிழா
பல்லாக்கில் வேட்பாளர்கள்
சுமைதூக்கும் வாக்காளர்கள்                                                     ட்சியின் இறுதிநாளில்
காலியானது கஜானபெட்டி
பயிரை மேய்ந்தது வேலிளவுக்கு உகந்த பதவிகள்
கூட்டுக் களவாணிகள்
தொகுதி பங்கிடுதல்கூட்டம் சேர்த்தவர்களின்
நாற்காலி ஆசை
புதிய கட்சிக் கொடிகள்நெடுஞ்சாலை சீரமைப்பு
அசுதங்களற்ற தெருவீதிகள்
தலைவரின் வருகை


தர் சட்டைகளின் இயக்கத்தில்
சாயம்பூசிய திரைகூத்தாடிகளின்
மேடை அபிநயங்கள்


புன்னகை திருவோடேந்தி
வீடுதோறும் பிச்சைகேட்கும்
தொகுதி வேட்பாளர்கள்


தேர்தல் செலவுகள்
வெள்ளையாய் உயிர்த்து எழுகிறது
பதுக்கிய கருப்பு பணங்கள்


வீதியின் நடுகே
உயிர்தெழுந்த மேடைகளில்
ஆக்ரோசமாக அரங்கேறுகிறது
கானல் வாக்குறுதிகள்யாரை போதிப்பதற்கு
அவதூறு பேச்சுகளால்
மேடைகளில் கொந்தளிக்கிறார்கள்
ஆளும் கட்சியும் எதிர்கட்சியும்ன்கொடை இனாம்களுக்கு
குடிஉரிமையை அடியரைவக்கும்
சுயநல வாக்காளர்கள்காக்கி காவல் இருந்தும்
மண்ணில் உதிர்ந்து விழுகிறது
உதிரத்துளியும் உயிரும்


வரை காணவில்லை
தேடும் வாக்காளர்கள்
வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்
மாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி

Thursday, February 24, 2011

ஆத்மாவின் அழுகை சத்தம்கலை முழுவதும் விழுங்கிய
நகரத்திலிருந்து கிராமத்திற்கான
நெடுந்தூரப் பயணம்சிற்றூர்களை புறம்தள்ளி
பெருநகர நிற்தங்களை தேடி
மின்னாலாய் விரைந்தது பேரூந்து


ணிமுடிந்து கதிரவன் செல்ல
மீத வெளிச்சங்களை தின்றது
அந்தி மாலை பொழுது


ன் குளுமை கொண்டு
என் உடலை மூடியது
சன்னலின் வந்த காற்று


தையோ யோசித்துகொண்டிருந்து
அயர்ந்து தூங்கிவிட்டேன்
என்னை அறியாமல்


ம்பி யே.. தம்பி
நீ இறங்கவேண்டிய இடம் வந்திடுச்சு
தோள்தட்டி எழுப்பினார் நடத்துனர்


ண்ணை கசக்கியபடி
அலுப்புக்களை முறித்துக்கொண்டு
நிற்தத்தில் இறகினேன்


ரும் மனிதர்களும் உறகியதால்
நிசப்தங்களை மூடிகொண்டிருந்தது
இரண்டாம்ஜாமம்


மின் விளக்குகள் அணைக்கப்பட்டு
கருமையால் மூடி இருந்தது
ஊருக்குச் செல்லும் ஒத்தயடிப்பாதைரம் செடி கொடிகளிலிருந்து
கரைச்சல் சத்தமிடும் பூச்சிகள்
அதை உடைத்துக்கொண்டு வரும்
தெருநாயிக்களின் குலைச்சல்கள்


சிறு தூரத்தில் வீடு
இருளைகீறிய கைபேசி வெளிச்சத்தில்
மெல்ல நடந்தது கால்கள்


டைபயணத்தின் இடைவெளியில்
என் காதை நிரப்பியது
ஒரு அழுகை சத்தம்ற்றென்று நடுங்கியது உடல்
ரோமங்கள் சிலிர்தெளுந்து
மூடுபனியிலும் வியர்வை கொட்டியதுன்னை துரத்திக் கொண்டு
மீண்டும் ஒலித்தது அழுகைசத்தம்
வேகமாக சுழல்ந்தது கால்கள்


தெருவை பிரிக்கும் முச்சந்தியில்
இருளை முறைத்து கொண்டிருந்தது
நீள்கம்பத்தில் எரியும் மின்விளக்கு


டிய கால்களும்
படபடவென துடித்த இதயமும்
சாந்தமானது மின்வெளிச்சத்தில்


குலைத்தபடி எதையோ துரத்திக்கொண்டு
இருளைநோக்கி ஓடியது
என்முன்னால் வந்த தெருநாய்


சூனியமாக காணப்பட்டது
இரவில் மனிதர்களை துலைத்த
ஊர் தெருக்கள்


ம்மா ...அம்மா...
உரக்கக் குரலெழுப்பி
வீட்டின் முன்வாசிலை தட்டினேன்மின்விளக்குகளை எரித்துக்கொண்டு
கதவுகளை திறந்தபடி
உறக்க முகத்துடன் அம்மால்லா இருக்கியாடா ....
ஏன் முகமெல்லாம் வேர்த்திருக்கு
இப்படி அர்த்த ராத்திரியிலையாவர்றதுகால கழுவிட்டு உள்ளவா
சாப்பிட்டியா இல்லையா
சாப்பிட்டேன் பதில் சொல்லியபடி
வீட்டுக்குள் நுழைந்தேன்விடியல் வரையிலும்
உறங்கவிடவில்லை
காதில் ஒலித்த அழுகைசத்தம்றுநாள் காலையில்
உறவுகளுடனான பேச்சுக்கிடையில்
அழுகை சத்தம் பற்றிசொன்னேன்


ப்படியா என்று அதிர்ச்சியுடன்
கேட்ட உறவினர்கள்
ஒரு கதை சொன்னார்கள்


ரு பய வண்டியிலஅடிபட்டு
போனமாசம் இறந்துட்டான்
அந்த பயலாத்தான் இருக்கும்


பேய் பிசாசு என்று
வேற பேச்சில் மும்மரமாக
இருந்தார்கள் அவர்கள்


வாழ்ந்து முடிக்கும்முன்
உடலை இழந்து தவிக்கும்
ஒரு ஆத்மாவின் அழுகைதான்
என் காதில் ஒலித்தது
என்ற உண்மையை உணர்ந்தேன்சாந்தி இன்றி திரியும்
சில ஆத்மாக்கள் எதையோ
நம்மிடம் சொல்ல முயல்கிறார்கள்
பயம் என்ற கோழையோ
அதற்கு வேலி இடுகிறது

                                             

                                                குடியிருந்த உடல் மரணித்து
இறைவனின் அழைப்பு வரும்வரை
அடைக்கலம் இன்றி உலவுகிறது
ஆத்மாக்கள்


டலும் ஆத்மாவும்
ஒரே மரணத்தில் மரணிக்கும்
நல்மனிதர்களாக வாழமுற்படுவோம்


 
 

Tuesday, February 22, 2011

நேற்று வரை வாழ்ந்தவன்


சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமைமூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகைம்மா பால்...பால் ..
சைக்களில் கூவியபடி வீதியல்
பால் ஊற்றும் பால்காரன்யோ போயிட்டிங்களா
கதவுகளை உடைத்துக்கொண்டு
ஒரு பேரொலிடசடவென திறக்கப்பட்டது
மூடப்பட்டிருந்த பக்கத்து வீட்டு
வாதில்களும் சன்னல்களும்


னிப்பை தின்னும் ஈக்கள்போல்
அவ்வீட்டை மொய்த்தார்கள்
ஓடிவந்த ஊர்வாசிகள்லோ ஹலோ ஊர்ல... ஹலோ இவருடைய அப் ..
நாலாபக்கமும் பரவியது
அலைபேசிவழி செய்திகள்தாரைதாரையாக வந்த
ஆட்களை கொண்டு நிரம்பியது
அவ்வீடும் தெருவும்வ்வொன்றாய் பேசிக்கொண்டிருந்தது
கேள்வியும் பதிலுமாக
வந்த எல்லா வாய்களும்


ல்ல தாகமா இருக்குன்னார்
இராத்திரி குடிக்க தன்னிகொடுத்தேன்
இளைய மருமகள்


ண்ணே அண்ணே உரத்தகுரலில்
கண்ணீர் மல்க ஓடிவந்தாள்
இளைய சகோதரிவிடியக்காலையில போன் வந்துச்சு
சேதிதெரிஞ்சு காலையில்தான் வந்தோம்
வெளியூர் உறவினர்கள்


யிர் உதிர்ந்த உடலருகில்
அனங்கா சடமாக அமர்ந்திருந்தாள்
தாலி இழந்த மனைவிழுது சிவந்த முகமுமாய்
தந்தையின் தலைமாட்டின் அருகில்
இளைய பெண் மகள்முந்தா நாள் தான் பார்த்து
பழயதகதை பேசிகிட்டு இருந்தோம்
உற்ற நண்பர்கள்


ங்க இங்கன்னு நடமாடிக்கிட்டு
நேற்று நல்லாதான் இருதார்
பக்கத்து வீட்டுகார்கள்


ல்ல மனுஷனுக்கு சாவபாத்தியா
உறக்கத்திலேயே உசிருபோயிடுச்சாம்
ஊர் வாசிகள்


ல்லா வாழ்ந்தவன் என்னசெய்ய
அவனுக்கு விதி அவ்வளவுதான்
ஊர் பெருசுகள்


ப்பப்பம் பணம் கொடுப்பான்
பாசக்கார பய முனங்கிகொண்டிருந்தாள்
மூலையில் ஒரு முதாட்டிசொல்ல வேண்டிய ஆளுகளுக்கு சொல்லியாச்சா
அங்க யாரு போயிருக்கா
உறவுக்கார்களில் ஒருத்தர்


ப்பம் எடுப்பாங்களாம்
ஒன்னும் தெரியலியே
இரங்கலுக்கு வந்தவர்கள்


ரவேண்டிய ஆட்களெல்லாம்
வந்துட்டாங்கன்னா சடங்குகள ஆரம்பிங்க
கூட்டத்தில் ஒருத்தர்சூடு தணிந்த கதிரவன்
இரண்டாம் நிழல்விழும் வேளை
மயான பயணத்திற்கு ஆயத்தாமனது
உயி பிரிந்த உடல்வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்நாழிகை சுழல்வதைப்போல்
எதோ ஒரு பொழுதுகளில்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
 ஜனனமும்  மரணமும்Wednesday, February 16, 2011

உதிரக் குறிப்புக்கள்
சாதுக்களில்
உறங்கும் மிருகம்
விழித்து எழுகையில்
உணர்த்தியவனின் குருதிகள்
வீதியில் சிந்துகிறது

ழைக்கும் பிழைகளில்
அடையாளப்படுதுகிறான்
தன் உயிர் குடிக்கும்
ஆயுதத்தை

ண், பொன், பெண்
பசியின் இரையாக
மனித உடலில் இருந்து
உதிர்கிறது உயிர்கள்

றைவனை மறந்த
மனிதர்களின்  கோபங்களில்
ஒவ்வொரு மூலைகளிலும்
நாழிகைக்கு ஒரு உயிரென
உதிர்கிறது

னிதர்களின் அவசரங்களால்
எழுத்தப்பட்ட ஜனன மரண
நாட்குறிப்பை திருத்துகிறான்
இறைவன்

Monday, February 14, 2011

ஒரு காதல் குறிப்புரும்பு மீசை வளரும்முன்
குறும்பு பார்வை பதித்தாள்
பருவம் எய்திடாத
என் பள்ளித்தோழி


ன் கவனங்களை ஈர்த்தவளோ
வெள்ளை நிறம் உடுத்திய
மலர் இதழில் சிரிக்கும்
மச்சு வீட்டு மங்கை


ளிராத மலர்களின்
அறியாத மனசின்
சொல்லாத் தெரியாத ஆசைகள்


னம் கவர்ந்தவளுக்கு
முதல் முறையாக கடிதம்
தூதுவாக தோழி
வகுப்பறை சபையில்
ஆசிரியரின் பிரம்படி


பெயரில்லாத அவ்வன்பை
கேட்டு வாங்குதல் தவறென
வலியால் நான் துடிக்கையில்
என்னவளின் சிரிப்பு உணர்த்தியது


ளன கேலிச் சிரிப்பாய்
பள்ளி முழுவதும் உயிர்த்தெழ
எனக்காக அழுதது
என்தோழியின் விழிகள் மட்டும்


பிஞ்ச மனசில
பட்ட காயம் ஆறியும்
மாயாத தழும்பாய்
இன்னும் நெஞ்சுக்குள்ள


ருவம் வந்த பின்
மனசுகளை தேடியதில்லை
தேடி வந்த மனசுகள
காயப்பட செய்த்ததில்லை
காயப்பட்ட எம்மனசு


ளிரிலே சிதைந்துபோன
என் நெஞ்சு விதையில்
அன்பு நீர் ஊற்றி
காதலை தளிர விட்டாள்
மாலை இட்ட மங்கை

Sunday, February 13, 2011

குற்றம் சாடல்
மாற்றானின் ஈனச் செய்கைகள்
உன் உள்ளத்தை உறுத்தி
தவறென்று போதிக்கிறது
மதியின் சிந்தைக்கு

நீ பிழையில் நிற்கிறாய்
அவன் நோக்கி சாடுகியில்
உன் வாக்குகளை புறம்தள்ளி
உன்னையும் உன் குலத்தையும்
தூற்றுவான் அவன்


திருத்த இயலா பிழைவாதிகளிடம்
உன் நற்சொற்கள் கசக்குவதால்
அப்பிழைகளை நீ இழைக்காது
அவனுக்கு நேர் மாறுகாட்டி
அவனை வெட்கப்பட செய்திடு


ற்ப மதுர ருசியில்
மதி மயங்கும் மனிதர்கள்
நன்மை கனியின் சுவையை
நஞ்சுக் கசப்பு என்பார்
இது இயற்கையின் நியதி


ன்தாய் வயிற்று மைந்தனும்
உன் நற்சொல்லை புறம்தள்ளும்
கலி நவ  யுகத்தில்
மாற்றான் செவி மடுப்பானோ. . . ?

Saturday, February 12, 2011

வேதக் கோட்பாடுஒரு மதத்திற்கு குலத்திற்கு
சாதிகளுக்கென தனித்தனியாக
இறைவன் வேதங்களில் சொல்லாத
சம்ரதாயக் கோட்பாடுகளை
சுயமாய் உயிர்த்தெளுப்புகிறான்
ஆறாம் அறிவுகொண்ட மனிதன்


தான் கொண்ட அறிவினால்
இறைவனால் எழுதப்பட்ட
வேதக் கோட்பாடுகளை
தனக்கு இணங்க திருத்தி
கிறுக்கியவைகளில் குழம்பி
வேதங்கள் மேல் பழிசொல்கிறான்


ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


எழுப்பிய கோட்பாடுகளால்
குருதிகள் ஒழுக்கி
உயிர்ப் பலி கொடுத்து
மரணக் காரணங்கள் சொல்கிறான்
மதி இழந்த மனிதன்


மரணத்தை முதமிட்டவனுக்கு
இறைவன் உணர்ந்திருப்பான்
வேதக் கடப்பாடுகளை
மாண்டவன் திரும்பாததால்
மெய் அறியாத மனிதர்களோ
இன்றும் தர்க்கித்துகொண்டே . . .

Wednesday, February 9, 2011

நீ இருந்த இதயம்எடுத்துச் செல் பெண்ணே . . .
என்னை மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையின்
இறுதிச் சொல்லின் முடிவில்
எனக்குள் இறந்துபோன
நீ இருந்த இதயத்தை

சுவடுகளின் ஓவியம்டல் தாயின்
மடியில் தவழ்ந்து வரும்
அலை பிள்ளைகளே
உங்களின் நீர் கரங்களால்
அளித்து விடாதீர்கள்
என்னவள் பதித்துச் சென்ற
பாதச் சுவடின் ஓவியத்தை

Tuesday, February 8, 2011

கா(தல்)மம்

காளைப் பருவத்தில் அவன்
கன்னிப் பருவத்தில் அவள்
காமன் அவன் வருகையால்
காதல் பிறக்கிறது
அவர்களின் உள்ளத்தில்


காதல் எங்களுக்குச் சொந்தம்
உரிமை கொண்டாடுகிறார்கள்
காளைப் பருவம் சுமக்கும்
ஆணும் பெண்ணும்


வயது எனும் வேலிக்குள்
ஒருபோதும் சிறைபடாதது
காதலும் காமமும்


காமம் கலக்காத காதலில்லை
காதலில் காமம் இல்லையென்றால்
அது காதலில் சேர்வதில்லை


எல்லா உறவிலும் காதலுண்டு
காமத்தை சிறை இடும்
உறவுகளும் உண்டு


காமத்தை புசித்துவிட்டு
காதலை புறம் தள்ளுபவர்கள்
உடல் தின்னும் மனிதர்கள்


காதலை புசித்துவிட்டு
காமத்தை புறம் தள்ளுபவர்கள்
உணர்ச்சியை கொல்லும் மனிதர்கள்


காதலையும் காமத்தையும்
பேதமின்றி புசித்தாலே
சுவையின் மகத்தும் உணரமுடியும்


தனக்கு உரிமையுள்ளவர்களிடம்
காதலையும் காமத்தையும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
புனிதமாகிறது அவ்வுறவுகள்


காதலை ஒருவரிடத்திலும்
காமத்தை மற்றோருவரிடத்திலும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
சீர்குலைந்து சிதைகிறது அவ்வுறவுகள்

Sunday, February 6, 2011

அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
முதியவர் , அனுபவ  கதைகள் ,பள்ளிக்கூடம்  


ஒரு அழுக்கு    தோல்பையும்
கையில் ஊன்றுகோல் கம்புடனும்
மெதுவாக நடந்துவந்தார் முதியவர்


அருகில் வந்தவரிடம்
கண்ணீர் மல்க
கதைகளை சொன்னேன்


என்னைப் பற்றி விசாரித்தவர்
இறுதியில் கேட்டார்
தம்பி சாப்பிட்டியா


என் வாடிய முகம்
காட்டிக் கொடுத்தது
என் பசியை


வா என்று அழைத்துக்கொண்டு
ஒரு உணவக விடுதில்
எனக்கு பசியாற்றினார்


அவர் தங்கும் இடத்திற்கான
நடை பயணத்தில்
ஆறுதல் பலம் தந்தார்


இங்க பாரு தம்பி
இவங்க எல்லாம் ஊரைவிட்டு
ஓடி வந்தவங்க


வீத்யோரம் உறங்கி
இருந்தவர்களை சுட்டுகாட்டில்
சொனார் அந்த முதியவர்


வேலை சாப்பாடு இல்லாம
படுக்க இடமும் இல்லாம
வாழுற மனுசங்கதான் இவங்க


அங்கு இருக்கிற சில
மனிதர்களை காட்டி
நிறைய கதைகள் சொன்னா


என் என்னையே எடுத்துக்கோ
அவரை பற்றி சொல்ல
ஆரம்பித்தார் தணிந்த குரலில்


ஒரு ஊரின் பெயரைச்சொல்லி
விவசாயம் தான் தொழில்
எனக்கு இத்தினை பிள்ளைகள்


பெத்த பிள்ளைகளுக்கு
கால் முளைத்தவுடன்
தன்னை உதறியாதாக சொன்னார்


அறுபது வயசு ஆச்சு
சாவு வரைக்கும் வாழனும்
பிள்ளைங்க கைவிட்டுட்டாங்கன்னு
சாக முடியுமா


முகம் தெரியாத இந்த ஊரில்
எதோ பிச்சை எடுத்து
பொளைக்கிறேன் என்றார்


எந்த துக்கமும் இன்றி
அவர் கதையை சொல்லுகையில்
முதுமையிலும் அவரின் தன்னபிக்கையை
உணர்ந்து கொண்டேன்


பேசி நடந்த சிறிய தூரத்தில்
பிளாஸ்டிக் சருகையால்
மூடப்பட்டிருந்த சிறு குடிலில்
போய் சேர்ந்தும்


இங்குதான் தங்கி
என் காலத்தை ஒட்டுகிறேன்
அங்கு அமர்ந்துகொண்டே சொன்னார்


உனக்கு அப்பா அம்மா
நல்ல வசதியும் இருக்கு
உன் இந்த முடிவால
வாழ்க்கைய துலைச்சிராத


படிச்சவங்கதான்
நல்ல வேலையில் இருக்காங்க
அந்த படிப்பை நீஉதரலாமா


அவர் படிக்காதவர் இருந்தும்
படிப்பின் மகத்துவத்தை சொல்லி
மீண்டும் ஊருக்கு போஎன்றார்


நீ சின்ன வயசு படிப்பு முக்கியம்
இப்படியெலாம் இனி செய்க்கூடாது
இரவு முழுக்க அறிவுரைகள்


இங்கு தங்கு காலையில்
ஊருக்கு அனுப்புகிறேன் என்றார்
தலையை அசைத்தபடி தூங்கச்சென்றேன்


பயமுறுத்திய இரவு விடிந்தது
ஒரு குவளை தேநீருடன்
என்னை எழுப்பினார்


காலை சிற்றுணவு கொடுத்தார்
ஊருக்கு போகும் பஸ்சுக்கு
பயண சீட்டும் எடுத்தார்


தம்பியை  இந்த ஊரில்
இறக்கி விடுங்க என்று
நடத்துனரிடம் கேட்டுகொண்டார்


சொன்னதெல்லாம்  கவனித்த்துல வைச்சுக்கோ
ஊருக்கு போய்  நல்லபடியா
படி என்று சொன்னார்


என் நன்றியை கூட
எதிபார்க்காமல் என்னிடமிருந்து
 விடைபெற்றுச்  சென்றார்


இப்படியும் சில மனிதர்களா
ஊர்வரை அவரைப்பற்றியே
நினைத்துக் கொண்டு வந்தேன்


பேரூந்து ஊரை நெருங்கியது
வீட்டைப் பற்றி பயம் இருந்தும்
ஆனந்தக்  கொண்டாட்டத்தில்  மனசு


பஸ்ஸைவிட்டு இறங்கினேன்
உங்க பையன் வந்துட்டான்
பெரும் குரலெழுப்பிய ஊர்வாசி


அண்ணன் அக்கா
என் பால்ய நண்பர்கள்
இப்படி என்னை சூழ்ந்தார்கள்


என்னைப் பார்த்ததும்
கட்டிபிடித்து அம்மா  அழ
நானும் அழுதேன்


என்னைப் பார்க்கவந்த
ஊர் மக்களும்
திரும்பிச் சென்றார்கள்


அண்ணனும் அக்காவும்
துருவித் துருவி கேட்டார்கள்
மௌனமாக நான்


இனிமேல் நல்லா படிக்கிறேன்
உன் பேச்சை  கேட்கிறேன்
ஊரைவிட்டு போக மாட்டேன்
என்று அம்மாவிடம் கதறியழுதேன்


சரி பரவா இல்லடா
அன்று அம்மா
என்னை அடிக்கவும் இல்லை

மறுநாள் மீண்டும்
பள்ளிக்கு புறப்பட்டு
பள்ளிக்கே சென்றன்


நேத்து எங்கடா போன
நலம் விசாரித்தார்கள்
வகுப்பு சகாக்கள்


நண்பர்களில் அன்பில்
பூரித்துப் போனேன்
எனக்குள் புத்துயிர் வந்தது


வகுப்புக்கு வந்த ஆசிரியர்
பாடம் நடத்த ஆர்வத்துடன்
கவனிக்க துடங்கினேன் நான்

முடிந்தது.


- செய்தாலி


அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
பயணம்,  இருள், பயம்


பள்ளியும் திறந்தது
புதிய வகுப்பறை மகிழ்ச்சியில்
சக மாணவர்கள்


அவரவர் நண்பர்களுடன்
பேசிக்கொண்டு இருதார்கள்
தனிமையில் மௌனமாக நான்


என்னுடன் பேசத்தயங்கும் சகாக்கள்
யாராவது பேசமாட்டார்களா
ஏங்கியது என் மனம்


கூட்டத்தில் இருந்தும்
தனிமையை உணர்ந்த
ரணமான நாட்கள்


இரண்டுவாரங்கள் உருண்டோடியது
புத்தகம் வாங்க போகிறேன்
அக்காவிடம் பொய்சொல்லி
பணம் வாங்கினேன்


வார விடுமுறை கழிந்து
வழக்கம்போல பள்ளி புறப்பெட்டு
பள்ளிக்குச் செல்லவில்லை


கையில் முப்பது ரூபாயும்
போட்டிருந்த பள்ளியுடையுடன்
பஸ் ஏறினேன்


 எல்லாரும் ஒரு ஊரைச்சொல்லி 
பயணசீட்டு வாங்கினார்கள் 
அதையே நானும் கேட்டேன்  
கையில் மீதம் பத்துருபாய்


இரண்டு மணி நேரத்திற்குப்பின்
ஒரு நகரை சென்றடைந்தது  
மலைகளுக்கு இடையேபயணித்த பேரூந்து


கடைசி நிறுத்தத்தில்
எல்லாரும் இறங்கிச் சென்றார்கள்
கடைசி பயணியாய் நானும்


ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த
அவ்வூர் கேரளா மாநிலத்திலுள்ள
ஒரு நகரம் என்பதை உணர்ந்தேன்


புதிய இடம் மனிதர்கள்
மொழியும் விளங்கவில்லை
சற்று திகைத்து நின்றேன்


எங்கே செல்கிறோம் என்று
திசை தெரியாமல் நடந்தது
மனமுடன் கால்களும்


சூரியன் மறைந்ததால்
வானமும் கருத்து
சுற்றிலும் இருள் சூழ்ந்தது


நடந்து களைத்ததால்
தாகமும் பசியும்
ஒன்றுகொன்று போட்டியிட்டது


தனித்து நின்றிருந்த
சாலையோரக் கல்லின்மேல்
சற்று அமர்ந்து கொண்டேன்


மீதமிருந்த பத்து ரூபாயையும்
பசி விழுங்கிக் கொள்ள
வெற்றுக் கையுமாய் நான்


அங்கும் இங்குமாய் கூடமாக
உலவிக் கொண்டிருந்த
மனிதர்களும் மறைந்து போனார்கள்


 சாலை விளக்குகள் உயிர்த்தெழுந்தது
நெடுஞ்சாலையில் வாகனத்தின்
நெரிசலும்   குறைந்து


மனிதர்களின் குரல் ஒலிகள்
சிறுகச் சிறுக துலைந்துபோக
சுற்றும் அமைதி நிலவியது


மீண்டும் பசியில் வயிறு
இருளோ என்னை பயமுறுத்தியது
விழியில் நிரம்பிவழிந்தது கண்ணீர்


ஏன் எதற்கு என்றுகேட்காமல்
என் அழுகையை வேடிக்கைபார்த்தபடி
சிலர் கடந்து சென்றார்கள்


இருளின் நாழிகையின் ஏற்றம்
மீண்டும் ஒருவித பயம்தர
உள்ளுக்குள் இறைவனிடம் மன்றாடினேன்


அறிமுகம் இல்லாத் நகரம்
அடையாளம் தெரியாத மனிதர்கள்
தெரியாத மொழி


என்செய்வதறியாது நிலைகுலைந்து
தனிமரமாய் நிற்கையில்
என்னோக்கி ஒரு குரல்


 யாரப்பா ஏன் அழுகிறாய்
என்  அழுகையை நிறுத்தியது
 அந்த முதியவரின்  அவ்வார்த்தைகள்


தொடரும் . . . . 
Saturday, February 5, 2011

அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)தோல்வி ,வலி ,அவமானம்            
   மூன்று அத்தியாயம் கொண்ட இக் கிறுக்கலை தொடர்ந்து   படியுங்கள் (இது கற்பனை கதையல்ல)


இன்று தேர்ச்சி அறிவிப்பு
பள்ளி முற்றத்தில் ஆவலாக
கூடி இருந்தார்கள் மாணர்வர்கள்


பள்ளி அறிவுப்பு பலகையின்
தேர்ச்சிப் பட்டியலில்
என்பெயரை காணவில்லை


இந்தவருஷம் தோத்திட்டியா
மறுபடியும் அதே வகுப்புதானா
கேலிசெய்தனர் சகமாணவர்கள்


அப்பா அம்மாவிடம்
எப்படிச் சொல்வேன்
தேர்வில் தோற்றத்தை


அடிவயிற்றில் புளியயை
கரைக்குது என்பார்கள்
அதே நிலையில் நான்


தேறிய சகமாணவர்கள்
இனிப்புக்கள் உபசரித்து
ஆனந்த கொண்டாட்டங்களில்


சுடுநீரில் தவறிவிழுந்த
பூனையைப் போல்
கூனிக்குறுகி நிற்கிறேன் நான்


மாலைகழிந்து இரவுவந்தும்
வீட்டுக்கு பயணிக்க
மறுத்தது என் கால்கள்


நான் வீடுபோகும்முன்
அம்மாவின் காதுகளில் எட்டியது
என்னைப்பற்றிய செய்தி


நெஞ்சுமுழுக்க பயமும்
நடுங்கிய உடலுமாய்
வீட்டு முற்றத்தில் நான்


எங்கடா போனா அக்கா
ஏன் இவ்வளவுநேரம் அண்ணன்
எந்த கேள்வியுமின்றி விழுந்தது
அம்மாவின் முதல் அடி


கைவலிக்கும் வரை அடித்தும்
அடியின் வலி தெரியவில்லை
ஏற்கனவே மறத்துபோயிருந்தது உடம்பு


தெருவே கூடி நின்று
அடியை ரசித்து நிற்கையில்
உள்ளுக்குள் ரணமாக வலித்தது


ஒஅப்பனுக்கு என்னபதில் சொல்லுவேன்
இப்படி தோத்திட்டு வந்துநிக்கிறானே
புலம்பியபடி அம்மாவின் அழுகை


இரவில் உணவு சமைத்திருந்தும்
உண்ணக் கசந்து உண்ணாவிரதம்
கிடந்தது ரத்த உறவுகள்


வந்த உறவுக்காரங்களோ
ஆறுதல்கள் சொல்லி
திரும்பிச் சென்றார்கள்


வலிகளை சுமந்துகொண்டு
எப்படி உறங்கின்னேன் தெரியவில்ல
வழக்கம் போல விடிந்தத
மறுநாள் காலை


இரண்டு நாளாகியும்
பேசாத அம்மாவின் முகம்
தனிமையில் உள்ளுக்குள் அழுதேன்


வகுப்பறைகளை முடுகிட்டும்
படிப்பை கவனிக்காலமும்
ஊரைச் சுற்றியதன் பலன்


நித்தமும் காலை மலைகளில்
புத்தகங்கள் சுமக்கும்
கழுதையாக இருந்திருக்கிறேன்


இன்னும் சில தினங்களில்
திறக்கும் பள்ளிக்கூடம்
அதேவகுப்பு புதிய சகாக்கள்


ஆசிரியரும் சகாக்களும்
என்னோக்கி நகைக்கும் காட்சி
சிந்தனைகளில் வந்துபோனது


ஏச்சுக்கும் பேச்சுக்கும் முற்றுப்புள்ளியிட
பள்ளி உறவை முறிப்பெதேன்று
சுயமுடிவு எடுத்தேன்


அவமானங்களை மறக்க
ஊரையும் வீட்டையும் துறக்க
முடிவு கொண்டேன்தொடரும். . . . .
Wednesday, February 2, 2011

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)எதிர்பாராத ஒரு சந்திப்பில்
உன்னுடனாக காதலை
என் பெற்றோர் விரும்பவில்லை
என்னை மறந்துவிடு என்றான்

உன் பெற்றோரைக் கேட்டா
என்னை துரத்தி துரத்தி
காதல் செய்தாய்
ஒரு வேட்கையுடன் வெளிவந்தது
அவ்வார்த்தைகள்


பதிவுத்  திருமணம் செய்துகொள்வோம்
என்றன் அவனிடம்
முடியாது என்றான் அவன்

என்னைச் சுற்றிக்கொண்டு இருந்த
இவ்வுலகம் சற்றென்று
நிற்றதைபோல் உணர்ந்தேன்

என் முகம் பார்க்கவும்
வெட்கப்பட்டு தலைதாழ்த்தி
நிற்றான் என் முன்னிலையில்

அவனின் காதல்
என் பதினாறை சுமக்கும்
உடல் மீதுதான் என்னும்
உண்மையை உணர்ந்தேன்

வலியால் குமுறும் இதயத்துடன்
விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
அவனிடம் சொன்னேன்
சரி பிரிந்து கொள்ளவோம்

திரும்பி நடந்தவனிடம்
கடைசியாக ஒரு வார்த்தை
என்றேன் அவனிடம்

குளித்தால் என் உடலின்
ஆளுக்கு களங்கம் போய்விடும்
மூன்று நாள் உதிரப்போக்கில்
கருவறை களங்கம் போய்விடும்

என் மரணம்வரை நீளும்
காதல் என்ற பெயரில்
நீ கற்பழித்த
மனசின் களங்கம்


முடிந்தது.

இந்த காதலர்களின் காதல் பயணம் முடிந்தாலும்
தனித்த அவர்களின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது . . . . .

இது ஒரு கற்பனை வரிகள் என்றாலும் எங்கோ ஒரு மூலையில் நிகழும் நிஜமும்கூட

-செய்தாலி
கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)
ஒருமுறை மாதம் தள்ளிப்போனத்தை
அவனிடனம் சொன்னேன்
திருமணத்திற்குமுன் இது வேண்டாம்
கலைத்துவிடு என்றான்

முகவரியற்ற தூரத்து
ஊரில் உள்ள மருத்துவமனையில்
கலைக்கப்பட்டது என் முதல்கரு

ஒரு தனிமையில்
அவனின்   இனங்கலுக்கு வேலியிட்டு
திருமணம் பற்றி பேசினேன்

சிறிது மௌனம் காதவன்
அம்மா அப்பாவிடம் கேட்டுவிட்டு
நாளை சொல்கிறேன் என்றான்

ஓரிரு நாட்கள் கடந்தன
என் கைபேசியும் துடிக்கவில்லை
என் அழைப்பையும் துண்டித்தான்

பதிலுக்காக காத்திருந்து
நாட்கள் கடந்தன
அவனைப்பற்றி விபரம் இல்லை

என் சந்திப்பை தட்டிக்களிப்பத்தின்
காரணங்கள் உணர்ந்தது
என் விழிகள் நிரம்பியது

தொடரும்...


உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)உறவுகளிடம் பொய்கள் சொல்லி
இருவரும் ஒன்றிணைந்த
சில நாட்கள் உள்ளடங்கிய
வெளியூர் சுற்றுப் பயணம்

புகைப்படம் பிடித்தல்
குதிரை சவாரி என்று
ஆனந்தமாய் கழித்தோம் பகலை

காதல் தந்த நம்பிக்கையும்
அவனின் திருமண வாக்குறுதியும்
எங்களின் மனப் பரிமாற்றமும்
ஒன்றி இணைந்த உறக்கத்திற்கு
சம்மதம் மூளியது

தங்கும் விடுதியில்
முன்பதிவு செய்திருந்த
ஒற்றப் படுக்கை அறை

ஒன்றிணைந்த அவ் இரவில்
உடமைகளை களைந்து
பரிமாறிக் கொண்டோம்
எங்கள் வெட்கத் தலங்களை

இரவும் பகலுமாய்
தொடர்ந்த உடல் புணர்வில்
சுயம் மறந்த நாழிகைகள்

நாட்களின் இடைவெளிகளில்
அவ்வப்போது தனிமைகளை ஏற்படுத்தி
உடல் புணர்வை தொடர்ந்தோம்

தொடரும்...அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
எனக்கும் அவனுக்குமான
நாட்கள் தவறாத
சந்திப்புக்கள் தளிறிட்டது

எங்களின் சிறு இடைவெளிகளையும்
அவ்வபோது நிரப்பியது
கைபேசியின் குரல் ஒலியும்
குறுஞ் செய்திகளும்

அவனின் நட்பு உறவுகளுடன்
என்னை அறிமுகம்
செய்துகொண்டான்

சுற்றித்த் திரிந்த நாட்களில்
திரையரங்கு உணவு விடுதி
புதுத் துணிகள் என்று
வாரி இறைத்தான் பணத்தை

அவனின் இல்லத் சுபநிகழ்வுகளில்
மறைமுக விருந்தாளியாய்
என் பங்களிப்புக்கள்

காமம் கலக்காத காதலுடன்
இனிய சில நினனைவுக்களுமாய்
மாதங்களை கடந்தது காதல்

தொடரும்...


தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)இது ஒரு காதலைப் பற்றிய கிறுக்கல் முதல் நிலை முதல் முடிவுரை வரை தொடர்ந்து படியுங்கள்என் பின்னால் நடந்து
ஒவ்வொரு சலனங்களையும்
கண்களால் களவு செய்தாய்

நித்தமும் அரங்கேற்றும்
உன் கோமாளிச் செய்கைகளால்
என் கவனங்களை ஈர்த்தாய்

உன் இருபதை கடந்த
இளங்காளை பருவம் சிறுதாய்
சலனம் செய்தது பதினாறுசுமக்கும்
என் தளிர் பருவத்தை

நாட்களின் மரணத்தில்
உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை குறைத்து
அருகில் வரத்து துடங்கினாய்

என்னிடம் பேசுவதற்காக வந்து
வார்த்தைகள் இன்றித் திணறி
திரும்பி சென்றாய் சிலதருணங்களில்

தனிமையில் நின்றிருந்த
ஒரு மாலை வேளையில்
ஒரு மின்னலைப்போல் வந்து
உன் காதலை சொன்னாய்

என் மௌனம் சிந்திய
சிறு புன்னகையை
சம்மதமாய் எடுத்துக் கொண்டாய்

அன்றிரவு உறக்கம் துலைத்து
எதையோ யோசித்து
சுயம் பேசிக் கொண்டேன்

எனக்காக அவன் காத்திருந்த
இடத்தை தேடி முதல்முறையாக
பயணித்தது என் கால்கள்

தொடரும்...LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...