Wednesday, February 2, 2011

தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)



இது ஒரு காதலைப் பற்றிய கிறுக்கல் முதல் நிலை முதல் முடிவுரை வரை தொடர்ந்து படியுங்கள்



என் பின்னால் நடந்து
ஒவ்வொரு சலனங்களையும்
கண்களால் களவு செய்தாய்

நித்தமும் அரங்கேற்றும்
உன் கோமாளிச் செய்கைகளால்
என் கவனங்களை ஈர்த்தாய்

உன் இருபதை கடந்த
இளங்காளை பருவம் சிறுதாய்
சலனம் செய்தது பதினாறுசுமக்கும்
என் தளிர் பருவத்தை

நாட்களின் மரணத்தில்
உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை குறைத்து
அருகில் வரத்து துடங்கினாய்

என்னிடம் பேசுவதற்காக வந்து
வார்த்தைகள் இன்றித் திணறி
திரும்பி சென்றாய் சிலதருணங்களில்

தனிமையில் நின்றிருந்த
ஒரு மாலை வேளையில்
ஒரு மின்னலைப்போல் வந்து
உன் காதலை சொன்னாய்

என் மௌனம் சிந்திய
சிறு புன்னகையை
சம்மதமாய் எடுத்துக் கொண்டாய்

அன்றிரவு உறக்கம் துலைத்து
எதையோ யோசித்து
சுயம் பேசிக் கொண்டேன்

எனக்காக அவன் காத்திருந்த
இடத்தை தேடி முதல்முறையாக
பயணித்தது என் கால்கள்

தொடரும்...



8 comments:

  1. மனதிலே காதலை சுமந்துக்கொண்டு
    அதைச்சொல்லமுடியாது தவித்துக்கொண்டு
    அது இது என்று எதை எதையோ பேசிக்கொண்டு
    ஒருவழியாக இறுதியில் காதலை சொல்லிவிட்டு
    காதலின் முதல் பருவத்தை அழகாய் கவி வரைந்த
    செய்யது அலிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. மிகவும் இனிமையாக உள்ளது தொடருங்கள் அண்ணா

    ReplyDelete
  3. சிறப்பாக உள்ளது கவியே தொடருங்கள் ஆர்வமாய் நாங்கள் அசத்துங்கள்

    ReplyDelete
  4. மிகவும் அருமையாக உள்ளது தொடருங்கள்..

    ReplyDelete
  5. இன்னும் படிக்க ஏங்குது மனசு பார்க்க துடிக்குது கண்கள் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. குரு எங்களின் ஆர்வதினை தூண்டி விட்டீர் ...
    அசத்தல் அற்புதம் ...விரைவில் அடுத பதிவு வரட்டும்

    ReplyDelete
  7. பாராட்டுக்ககள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...