Wednesday, February 2, 2011

அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )




எனக்கும் அவனுக்குமான
நாட்கள் தவறாத
சந்திப்புக்கள் தளிறிட்டது

எங்களின் சிறு இடைவெளிகளையும்
அவ்வபோது நிரப்பியது
கைபேசியின் குரல் ஒலியும்
குறுஞ் செய்திகளும்

அவனின் நட்பு உறவுகளுடன்
என்னை அறிமுகம்
செய்துகொண்டான்

சுற்றித்த் திரிந்த நாட்களில்
திரையரங்கு உணவு விடுதி
புதுத் துணிகள் என்று
வாரி இறைத்தான் பணத்தை

அவனின் இல்லத் சுபநிகழ்வுகளில்
மறைமுக விருந்தாளியாய்
என் பங்களிப்புக்கள்

காமம் கலக்காத காதலுடன்
இனிய சில நினனைவுக்களுமாய்
மாதங்களை கடந்தது காதல்

தொடரும்...


6 comments:

  1. காதல் உணர்வு மனதில் பிறந்துவிட்டாலே....
    உலகம் அழகாய் காட்சி தரச்செய்யும் காதல்
    பார்ப்போர் எல்லோரும் நல்லவராக காட்சி தரச்செய்யும் காதல்
    செய்யும் வேலைகள் எல்லாம் குளறுபடி செய்யவைக்கும் காதல்
    உறக்கத்தையும் உணவையும் மறுக்க வைக்கும் காதல்...
    கவிதை வரிகளை இதோ இதுபோல் அழகாய் எழுதவும் வைக்கும் காதல்...

    நாட்களெல்லாம் அழகிய நாட்களாக காணச்செய்த கவிதை வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....

    ReplyDelete
  2. இன்னும் உங்கள் காதல் கவிகளை படிக்க ஆர்வமாய் உள்ளேன் கவியே தொடருங்கள் நன்றி

    ReplyDelete
  3. சிறந்த வரிகளை கொண்டு சிறப்பாய் வடித்த கவி உயிர் கொண்ட வரி வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
  4. நல்லா தான் போகுதுங்க குரு ...
    அப்போ ஒரு காவிய காதலின் நாயகன் நீங்கள்தான்

    ReplyDelete
  5. அழகாக இருக்கு தொடருங்க

    ReplyDelete
  6. அழகு...!!

    //சுற்றித்த் திரிந்த நாட்களில்
    திரையரங்கு உணவு விடுதி
    புதுத் துணிகள் என்று
    வாரி இறைத்தான் பணத்தை//

    இப்போ இதெல்லாம் பொண்ணுங்க தான் பண்றாங்க

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...